Skip to main content

Posts

திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்

திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள்: திருவிதாங்கூர் என்பது, இந்தியாவின் தற்காலக் கேரளா மாநிலத்தில் தென்பகுதிகளையும், தமிழ் நாட்டின், கன்னியாகுமரி மாவட்டத்தையும் உள்ளடக்கியிருந்த ஒரு சமஸ்தானம் ஆகும். இங்கு தீண்டாமை, காணாமை, நடவாமை, கல்லாமை போன்ற சமூக கட்டுப்பாடுகள் தாழ்த்தப்பட்டவர்கள் மேல் திணிக்கப்பட்டிருந்தது. அவையே திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள் என்றழைக்கப்படுகின்றன. உயர் சாதியினர் வாழும் இடங்களில் கீழ்சாதியினரை விலக்கி வைத்தல், பொது குளங்கள், கிணறுகள், சந்தைகள், சாலைகள் ஆகியவற்றைப் பயன்படுத்தவதற்கும் இவர்களுக்கு தடை விதிக்கப் பட்டிருந்தது. சமுதாயத்தில் இவர்களது கீழான நிலையை விளக்கும் வண்ணம் அவர்கள் அணியும் ஆடை, அணிகலன்கள், உபயோகிக்கும் பாண்டங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்துவதற்கு பலவிதமான விதிமுறைகள் கடைபிடிக்கக் கட்டாயப்படுத்தப்பட்டனர். இறைவழிபாடு செய்வதிலும் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. சாதிக் கட்டுப்பாடுகளை மீறுபவர்களுக்கு கடுமையான தண்டனையும் வழங்கப்பட்டது.[1] பொருளாதார ரீதியாகவும் பல கட்டுப்பாடுகள் அவர்கள் மீது திணிக்கப்பட்டன. அபராதம், வரி என்ற பெயர்களில் பல விதமான சுமைகள் அவர்கள்...

தோள்சீலைப் போராட்டம்

தோள் சீலைப் போராட்டம் **************************** கேரள மாநிலத்தின் பெரும் பகுதியும் தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களான கன்னியாகுமரி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகள் திருவாங்கூர் சமசுதானத்தின் கீழ் மன்னராட்சியின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்போது இந்து நாடாக இருந்தது. அந்த காலகட்டத்தில் சாதீயக் கொடுமைகளால் மக்கள் அதிக அடக்குமுறைக்கு ஆளாகினர். பனையேறும் தொழிலைச் செய்து வந்த பனையேறி நாடார் நாயர், ஈழவர், புலையர் உட்பட 18 சமுதாயத்தைச் (சான்று தேவை) சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணிவதற்குத் தடை விதிக்கப்பட்டிருந்தது. நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலமைக்காரர் நாடார்களும் இப்பகுதியில் இருந்தனர்.[1] இவர்கள் மார்பகத்தை திறந்து போடுவதுதான் உயர் சாதியினருக்குத் தரும் மரியாதை என்று தரம் தாழ்ந்த எண்ணத்தில் திருவாங்கூர் நாடு ஒரு நடைமுறையை வகுத்திருந்தது. இதன்படி 18(சான்று தேவை) சாதிகளைச் சேர்ந்த பெண்கள் மேலாடை அணியாமல் அவமதிப்புடன் வாழ்ந்து வந்தனர். இந்த அடக்குமுறையை எதிர்த்து சீர்திருத்த கிறித்தவத்தை ஏற்றுக்கொண்ட பனையேறி நாடார் சாதியைச் சேர்ந்த மக்கள் தங்கள் சாதிப் பெண்கள...

பழந்தமிழரின் வாழ்க்கை முறை:

  பழந்தமிழரின் வாழ்வியல் முறைகள்: இரண்டாயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த மொழி தமிழ் மொழி. இம்மொழியின் தொன்மைச் சிறப்பு வாய்ந்த இலக்கியங்கள் சங்க இலக்கியங்கள் ஆகும். மற்ற மொழிகளில் இல்லாத சிறப்பு இம்மொழியில் அமைந்துள்ள பொருள் இலக்கணம் ஆகும். இவ்விலக்கணத்திற்குச் சான்றாகத் திகழ்பவை சங்க இலக்கியங்கள் ஆகும். சங்க காலத் தமிழர்கள் இயற்கையோடு இணைந்த வாழ்க்கையை மேற்கொண்டிருந்தனர். அவ்வியற்கையைத் தாங்கள் படைத்த இலக்கியங்களிலும் பதிவு செய்து வந்துள்ளனர். ஆதலால்தான் இன்றளவிலும் சங்க இலக்கியங்கள் உயிரோட்டமாக விளங்கி வருகின்றன. இயற்கையோடு ஒன்றாத வாழ்க்கை அழகற்றது, உணர்வற்றது என்ற உண்மையை உணர்த்துவனாக உள்ளன. இலக்கியம் என்பது மனித வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் காலக் கண்ணாடி. இது வாழ்க்கைக்கு வழிகாட்டுகிறது. மொழியை ஊடகமாகக் கொண்டு விளங்குகிறது. இலக்கியம் மனிதனை, மனிதநேயப் பண்புகளுடன் வாழ வழிவகை செய்கின்றது. மனித வாழ்க்கையை அழகாகச் சொல்லும் போது இலக்கியம் பிறக்கின்றது. பண்டைத் தமிழர்கள் தங்கள் வாழ்க்கைக்குத் தேவையான இடத்தினைத் தேர்வு செய்து அதனைத் தம் வாழிடமாக அமைத்துக் கொண்டனர். அவ்வாறு அமைந்த வாழிடங்கள்...

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள் :

  சங்ககால இலக்கியங்கள் கூறும் ஆடல் வடிவங்கள் : சங்ககாலம் தமிழர் பண்பாட்டுக் காலமாகத் திகழ்ந்தும் அகத்திணைஇ புறத்திணை என இரு திணைகளாகக் காணப்பட்டது. அகம்இபுறம் எனும் ஒழுக்கங்கள் காதலையும் வீரத்தையும் முன் நோக்கி திணைகளாக வகுக்கப்பட்டன. புகழுக்காக வீரத்தையும் இன்பத்துக்காக காதலையும் கொண்ட மக்களது வாழ்வியலைக் கண்ட புலவன் இதனை பாராட்டும்முகமாக எட்டுத் தொகைஇ பத்துப்பாட்டு எனும் இலக்கியவடிவங்களை முதல்இ கருஇ ஊரிஇ இயற்கைப் பொருட்கள் என்பவற்றை பாடுபொருளாக வைத்து இக் காலத்து இலக்கியங்களாகத் தொகுத்தனர். இது முற்றுமுழுதாகமக்களது வாழ்வியல் அரசியல்இசமுதாயத்தை அடிப்படையாகக் கொண்டு தோற்றம் பெற்றது. இவ் இலக்கியங்களில் நடனம் பற்றியபலசெய்திகளைஅறிந்துகொள்ளலாம். மேலும் நடனம் ஆடிய நங்கைகளை விறலியர்இபொருனர் எனஅழைத்தனர். இவர்கள் தனிநடனம் (அரசர் முன் நடனம்) குழு நடனம் (மக்கள் முன்னிலையில்) போன்ற நடனங்களை செய்தனர். இதுபிற்காலத்தில் குரவை கூத்துஇ துணங்கை கூத்துஇ வேலன் வெறியாடல் எனவும் எழுச்சி பெற்றது. நடன மங்கையர்கள் தங்களுக்கு கிடைக்கப் பெற்ற பொருட்களை ஆபரணங்களாகவும் இடங்களை அரங்கங்களாகவும் அமைத்துக் கொண்டன...

தமிழர் பண்பாட்டியல்; சங்ககால வாழ்வியல்

கூகுள் செய்திகள் : *********************** 1.  பத்மனாபபுரம் அரண்மனை பற்றிய விவரங்கள் 2.    இரணியல் அரண்மனை 3.  தமிழ்நாட்டில் உள்ள 7 புகழ்பெற்ற அரண்மனைகள் 4.  தமிழ்நாட்டில் உள்ள கோட்டைகள் 5.  குமரி மாவட்ட கோட்டைகள் 6.  குளச்சல் போர் சங்ககால வாழ்வியல்: *************************** 1 .  சங்ககால இலக்கியம் கூறும் ஆடல் வகைகள் 2.  சங்ககால தமிழர் உணவு முறை தமிழர் பண்பாட்டியல் : ***************************** 1.  பழந்தமிழரின் வாழ்க்கை முறை 2.   தோள்சீலைப் போராட்டம் 3  குமரி விடுதலைப் போராட்டம் 4.  கன்னியாகுமரி இணைப்பு போராட்டம் 5.  திருவிதாங்கூர் சாதிக் கொடுமைகள் 6.  கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு 7.  கன்னியாகுமரி மாவட்டம் 8.  எங்க ஊர் கன்னியாகுமரி புத்தகம் : *********** 1.  தமிழர் நாகரீகமும் பண்பாடும் 2.  சங்ககால வாழ்வியல் 3.  பொன்னியின் செல்வன் ( 5 பாகம்) 4.  மார்த்தாண்ட வர்மா (2 பாகம்) 5.  மகேந்திரவர்மன் 6.  பார்த்திபன் கனவு 7.   தோள்சீலைப் போராட்டம் 8.  சங்ககால...

காவல் தேவதை

# ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : காவல் தேவதை வெளியீடு : விதைகள் பதிப்பதிகம் 1. காவல் தேவதை : அர்ச்சனா : கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், தனிமையில் சிக்கி கொண்ட நாயகி இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறி சென்று அவர்களது அடாத பேச்சினாலும், வக்கிர புத்தியாலும் பாதிக்கப்பட்டு அவர்களை விட்டு தனியாக சென்று விடுகிறார். அவரது அடுத்த கட்டம் என்ன? தையல் தொழில் பார்த்து வரும் சங்கர், தன் மனைவி, மகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவதையும், கொரானா எனும் கொடிய அரக்கனால் சிக்கி அவதியுறுவதையும், அதனால் அவரது மகள் அநாதை ஆவதையும் ரொம்ப அழுத்தமாகவும், மனதில் பதியும் விதமாகவும் சொல்லி இருக்காங்க. தனித்து விடப்பட்ட வயதான பெண்மணி மற்றும் சிறு பெண்ணின் கெதி என்ன? பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி வீட்டை விட்டு துரத்திய மகள்கள் இருவரும் தாயாரை மறுபடியும் ஏற்கிறார்களா? இக்கதையில் வரக்கூடிய காவல் தேவதை யார்? நாயகியா? சிறு பெண்ணா? அல்லது புதிய நபரா? பாமர மக்களை காக்க வேண்டிய சட்டமே அத்து மீறல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்குவது...

நேசிப்பாயா நெஞ்சமே...!

#ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : டெய்சி மாறன் முகநூல் லிங் படைப்பு : நேசிப்பாயா நெஞ்சமே...! வெளியீடு : தேவியின் கண்மணி (15: 06 : 2022) மனோ ரஞ்சன் : அப்பா பார்த்து வைக்கும் வசதியான வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்து திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் நாயகன், அவளது ஒரு சில அடாவடியான பேச்சினால் அவதியுற்று, தகப்பனாரிடம் கூற முடியாமல் தவிக்கிறான். அவரோ மகனது முகபாவத்தையும், ஃபோனில் பேசிய வார்த்தைகளையும் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்று குழம்பி தவிக்கிறார்.  வசதியாக வாழ்ந்து தற்சமயம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவரான ஓட்டுனரின் மகளின் அழகு, படிப்பில் மனம் தடுமாறுகிறார். திடீரென்ற விபத்தில் ஓட்டுனரின் மரணத்தைக் கண்டு கலங்கும் அவர், கை உடைந்த நிலையில் இருக்கும் மகனிடம் வாக்கு கேட்கிறார். அவரும் சிகிச்சை பலமின்றி இறந்து போகிறார். இந்நிலையில் அவனது திருமணம் நிற்கிறது. அவன் எடுக்கும் முடிவென்ன? தகப்பனாரின் ஆசையின் பேரில் கார் ஒட்டுனரின் மகளை மணந்து கொள்வானா அல்லது தாயாரின் விருப்பத்தின் பேரில் மணந்து கொள்கிறானா? ஓட்டுனரின் மகளை மருமகளாக ஏற்க பிடிக்காமல் தாயார் மேற்கொள...

ஜோதி விமர்சனம்

யாழினி (பாரதிப்பிரியன்) உறவுதான் ராகம்! (R.சுமதி) நேசிப்பாயா நெஞ்சமே...! (டெய்சி மாறன்) காவல் தேவதை ( பாரதிப்பிரியன்)

உறவுதான் ராகம்!

#ஜோதிரிவ்யூ முகநூல் லிங் எழுத்தாளர் : R. சுமதி மேம் படைப்பு : உறவுதான் ராகம்! தேவிகா : திருமணமாகி கணவனைப் பிரிந்திருக்கும் நாயகி, தன்னுடைய கல்லூரி நண்பரை பார்த்தவுடன் பேசுவது போல ஆரம்பம் ஆகிறது. பெற்றோரை இழந்து அக்காவின் வீட்டில் வசிப்பவளை பெண் பார்க்க வருகின்ற மாப்பிள்ளை வீட்டார் அனைவரும், அவளது அழகை விடவும் பணத்தின் மீதே நாட்டமுடன் காணப்படுகிறார்கள். அதை கொடுக்க முடியாமல் கவலைப்படுபவர்கள் வீட்டிற்கு நாயகன் பெண் பார்க்க வருகிறான். அவளை மிகவும் பிடித்திருப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறான். அடுத்ததாக வெளி வந்த அவனது பேச்சும், ஆசையும் அவளது வியப்பும் எங்கே கொண்டு போய் விடப் போகிறதென்று தெரியவில்லை. அதே நேரம் அப்படி என்ன நடந்து  விடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் நம்மை எகிற வைக்கிறது. பரணி ராசிக்காரியை மணந்தால் தரணி ஆளலாம், கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ஆசையில் அவளை மணந்து கொள்பவனின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் மனைவி அவனது ஆசைகளை நிறைவேற்றுகிறாளா? எதனால் அந்த பிரிவு? என்பதை விறுவிறுப்பாகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள். ஆனாலும் நாயகன்...

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...