#ஜோதிரிவ்யூ
எழுத்தாளர் : R. சுமதி மேம்
படைப்பு : உறவுதான் ராகம்!
தேவிகா :
திருமணமாகி கணவனைப் பிரிந்திருக்கும் நாயகி, தன்னுடைய கல்லூரி நண்பரை பார்த்தவுடன் பேசுவது போல ஆரம்பம் ஆகிறது.
பெற்றோரை இழந்து அக்காவின் வீட்டில் வசிப்பவளை பெண் பார்க்க வருகின்ற மாப்பிள்ளை வீட்டார் அனைவரும், அவளது அழகை விடவும் பணத்தின் மீதே நாட்டமுடன் காணப்படுகிறார்கள். அதை கொடுக்க முடியாமல் கவலைப்படுபவர்கள் வீட்டிற்கு நாயகன் பெண் பார்க்க வருகிறான். அவளை மிகவும் பிடித்திருப்பதாக கூறி, திருமணம் செய்து கொள்ளவும் சம்மதிக்கிறான்.
அடுத்ததாக வெளி வந்த அவனது பேச்சும், ஆசையும் அவளது வியப்பும் எங்கே கொண்டு போய் விடப் போகிறதென்று தெரியவில்லை. அதே நேரம் அப்படி என்ன நடந்து விடப் போகிறது என்கிற எதிர்பார்ப்பும் நம்மை எகிற வைக்கிறது.
பரணி ராசிக்காரியை மணந்தால் தரணி ஆளலாம், கோடீஸ்வரன் ஆகலாம் என்ற ஆசையில் அவளை மணந்து கொள்பவனின் எண்ணங்கள் ஈடேறுகிறதா? அதிர்ஷ்ட தேவதையாக நினைக்கும் மனைவி அவனது ஆசைகளை நிறைவேற்றுகிறாளா? எதனால் அந்த பிரிவு? என்பதை விறுவிறுப்பாகவும் அழுத்தமாக கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும் நாயகன் இந்த அளவுக்கு பணத்தின் மீதும், வசதியான வாழ்வின் மீதும் பேராசை பிடித்து அலைய கூடாது. சரியான அடி கிடைத்தது. இன்னும் கொடுத்திருக்க வேண்டும். முடிவு நிறைவு
அவனது மேலாளர் கதாபாத்திரம் பயங்கரம். அடேங்கப்பா என்னா நடிப்புடா சாமி🤣🤣 ஹீீீரோவை ஜீரோ ஆக்கிட்டானே...நாயகி சூப்பர்👌👌👌 பொறுத்துப் பொறுத்துப் பார்த்து விட்டு பொங்கும் இடம் அருமை.
(இதுவொரு புதினப் புதையல் குடும்ப நாவலில் 1 - 6 - 22 அன்று வெளியான நாவல். வாசிப்பில் ஆர்வம் உள்ளவர்கள் வாங்கி படித்து விட்டு தங்களுடைய கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.)
சிறு புத்தகத்தில் உள்ள எழுத்துக்களும் ரொம்ப சிறிய வடிவிலே காணப்பட்டன. ரொம்ப கவனிச்சு படிக்க வேண்டியதா போயிடுச்சு மேடம்🤣🤣🤣
எழுத்து நடை, கதையோட்டம், நகர்வு எல்லாமே வெகு சிறப்பு. தவறு செய்பவனும், பேராசை படுபவனும் ஒரு நாள் அகப்பட்டு தண்டனை அனுபவிக்காமல் போக மாட்டார்கள் என்பதை உணர்த்திய இடம் அருமை. அது போல் வஞ்சகனின் நெஞ்சில் உள்ள நஞ்சை கண்டறியாமல் பழகினால் முடிவில் ஆபத்தும் அவனுக்குத்தான்...
மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல பெற்றிடவும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள் மேம்💐💐💐
Comments
Post a Comment