எழுத்தாளர் : பாரதிப்பிரியன்
படைப்பு : காவல் தேவதை
வெளியீடு : விதைகள் பதிப்பதிகம்
1. காவல் தேவதை :
அர்ச்சனா :
கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், தனிமையில் சிக்கி கொண்ட நாயகி இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறி சென்று அவர்களது அடாத பேச்சினாலும், வக்கிர புத்தியாலும் பாதிக்கப்பட்டு அவர்களை விட்டு தனியாக சென்று விடுகிறார். அவரது அடுத்த கட்டம் என்ன?
தையல் தொழில் பார்த்து வரும் சங்கர், தன் மனைவி, மகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவதையும், கொரானா எனும் கொடிய அரக்கனால் சிக்கி அவதியுறுவதையும், அதனால் அவரது மகள் அநாதை ஆவதையும் ரொம்ப அழுத்தமாகவும், மனதில் பதியும் விதமாகவும் சொல்லி இருக்காங்க.
தனித்து விடப்பட்ட வயதான பெண்மணி மற்றும் சிறு பெண்ணின் கெதி என்ன? பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி வீட்டை விட்டு துரத்திய மகள்கள் இருவரும் தாயாரை மறுபடியும் ஏற்கிறார்களா? இக்கதையில் வரக்கூடிய காவல் தேவதை யார்? நாயகியா? சிறு பெண்ணா? அல்லது புதிய நபரா? பாமர மக்களை காக்க வேண்டிய சட்டமே அத்து மீறல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்குவதும், வாழ்வாதாரத்தை அழிக்க முயல்வதும் சரிதானா? என்று பல கேள்விகளுடன் பதற்றமும், விறுவிறுப்பும் கலந்து செல்கிறது.
ஆரம்பம் முதல் இறுதிவரை கணிப்பை மீறிய நகர்வு. வாசிக்கையில் பல இடங்களில் பதறிற்று.
நாயகியின் மகள்கள் இருவரையும் பார்க்கும் போது அப்படியே பற்றிக் கொண்டு வந்தது. இரண்டு லட்ச ரூபாய் கொடுக்காததால் பேசிய வசவு வார்த்தையும், ஏ.டி.எம். கார்டை திருடி வைத்து மொத்த பணத்தையும் களவு செய்தது மட்டுமின்றி, அவளது மாமியாரின் பேராசையை காண்கையில் ச்சே... என்றாகி விட்டது.
பெற்று வளர்த்து ஆளாக்கிய தாயை விட, மாமியாரும் கணவரும் பெரிதாக போயிற்று. இருக்கட்டும்... அதுக்காக இப்படியா நடந்து கொள்வது? ஒரு வரைமுறை கிடையாதா? பணத்தின் மீதிருக்கும் மரியாதை. மனிதனின் மீது இல்லாமல் போனது மதிகெட்டவர்களின் அறிவீனம் அன்றி வேறென்ன சொல்வது?
சிறு பெண் கதாபாத்திரம் அருமை. அவளது பேச்சும், பாசமும், எதிரிகளிடம் மாறி மாறி மாட்டிக்கொண்டு பட்ட அல்லல்களும், ஸ்...ப்பா வாசிக்கையில் பதறிற்று.
கொரானா, காவலர்களின் அடாவடி, சமுதாயத்தை பற்றி குறிப்பிட்டிருந்த இடம் மாஸ். அதிலும் சமூக கருத்துக்கள், அத்தனை பேரையும் போட்டு தாக்கிய இடம்👌👌👌👏👏👏 நிறைய இடங்கள் சபாஷ் போட வைத்தன.
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்💐💐💐
2. மணம் மாறாத மலர்கள் :
இசைப்பிரியா :
ஆரம்பமே அதிரடியாகவும் டுவிஸ்ட் உடனும் பயணிக்கிறது. சிறார் பள்ளியில் பணிபுரியும் காவல் அதிகாரியை ஒரு பக்கம் மூன்று மாணவர்கள் கத்தியுடன் தொடர்ந்து வர, மறுபக்கம் மூன்று மாணவர்கள் தொடர்ந்து வருகிறார்கள். 'என்னடா நடக்கப் போகுது?' என்று பதற்றத்துடன் படித்தால் மூன்று மாணவர்களும் நாயகியை குத்த முயலும் போது, எதிரில் நின்ற மாணவர்கள் அதை வாங்கி கொள்கிறார்கள். அதன் பிறகு அவர்கள் யார்? எதற்காக அவளை கொலை செய்ய முயன்றார்கள்? அனுப்பி வைத்தவர் யார்? போன்ற கேள்விக்கான பதில்கள் வரிசையாக வருகிறது.
தப்பு செய்து கொண்டு சிறார் பள்ளியில் அடைபட்டிருக்கும் மாணவர்கள் படுகின்ற கஷ்டம், மாணவர்களை பணம் காய்ச்சும் மரமாக பயன் படுத்திய விதம், அவர்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டனை, அடி, வன்கொடுமை எல்லாம் வாசிக்கையில் பாவமாக இருந்தது.
தவறு செய்தவற்றை ஒவ்வொன்றாக கண்டறிந்த யுக்தி, அவர்கள் திருந்தி நல்வாழ்வு பெற நாயகி எடுக்கும் முயற்சி, அதை தடுத்து நிறுத்த எடுக்கப்படும் நடவடிக்கை, தன் உயிருக்கு ஆபத்து என்று தெரிந்த பின்னரும், கடமை தவறாமல் நடந்து கொண்டது என்று அனைத்துமே ரொம்ப நன்றாக இருந்தது.
குழந்தை இல்லாமல் வருந்தும் போது அவளது கணவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் சலாம் போட தோன்றியது. மனைவிக்காக ஒவ்வொன்றையும் பார்த்து பார்த்து நிறைவேற்றிய விதம் அருமையாக இருந்தது.
மாணவன் அஸ்வினின் ஆரம்பம், தண்டனை, கடைசி அனைத்தும் பாவமாக இருந்தது. அவனது பேச்சும், கோபமும் நன்றாக இருந்தது.
வெற்றி கதாபாத்திரம் ஒரு காட்சிக்கு மட்டும் பயன்படுத்தப் பட்டிருந்தாலும் வெகுசிறப்பு.
நாயகி கதாபத்திரம் தோரணை...
மேலும் பல அட்டகாசமான படைப்புகளை எழுதவும், விருதுகள் பல வாங்கவும் எழுத்தாளருக்கு என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் 💐💐💐
Comments
Post a Comment