எழுத்தாளர் : டெய்சி மாறன்
படைப்பு : நேசிப்பாயா நெஞ்சமே...!
வெளியீடு : தேவியின் கண்மணி (15: 06 : 2022)
மனோ ரஞ்சன் :
அப்பா பார்த்து வைக்கும் வசதியான வீட்டுப் பெண்ணை மணந்து கொள்ள சம்மதித்து திருமண நாளை எதிர்நோக்கி இருக்கும் நாயகன், அவளது ஒரு சில அடாவடியான பேச்சினால் அவதியுற்று, தகப்பனாரிடம் கூற முடியாமல் தவிக்கிறான். அவரோ மகனது முகபாவத்தையும், ஃபோனில் பேசிய வார்த்தைகளையும் கேட்டு தவறிழைத்து விட்டோமோ என்று குழம்பி தவிக்கிறார்.
வசதியாக வாழ்ந்து தற்சமயம் வாழ்ந்து கெட்ட குடும்பத்தை சார்ந்தவரான ஓட்டுனரின் மகளின் அழகு, படிப்பில் மனம் தடுமாறுகிறார். திடீரென்ற விபத்தில் ஓட்டுனரின் மரணத்தைக் கண்டு கலங்கும் அவர், கை உடைந்த நிலையில் இருக்கும் மகனிடம் வாக்கு கேட்கிறார். அவரும் சிகிச்சை பலமின்றி இறந்து போகிறார். இந்நிலையில் அவனது திருமணம் நிற்கிறது.
அவன் எடுக்கும் முடிவென்ன? தகப்பனாரின் ஆசையின் பேரில் கார் ஒட்டுனரின் மகளை மணந்து கொள்வானா அல்லது தாயாரின் விருப்பத்தின் பேரில் மணந்து கொள்கிறானா? ஓட்டுனரின் மகளை மருமகளாக ஏற்க பிடிக்காமல் தாயார் மேற்கொள்ளும் நடவடிக்கை என்ன? திடீரென்று அவர்களுக்கு இடையில் வரும் புதிய நபர் யார்? என்று பல கேள்விகளுடன் ஒவ்வொரு அத்தியாயமும் விறுவிறுப்பாகவும், சுவராஸ்யமாகவும் நகர்கிறது.
நாயகன் பாத்திரம் சூப்பர்👌👌👌 அவனது இரண்டும் கெட்டான் போன்ற மனநிலை அருமை. பாவம் அவளிடம் கடுமையை காட்டும் இடமும், அதற்கான காரணமும், வாசிக்கையில் பாவமாகவும், சில நேரம் கடுப்பாகவும் இருந்தது🤣🤣
அவனது தாயார் பணத்தை கொண்டு சென்று விட்டு பேசிய இடமும், அதற்கான பதிலடியும் ரொம்ப நன்றாக இருந்தது. சரியான சிடுசிடுப்பு பேர் வழி.
ஒரே மகள் என்ற காரணத்தால் பெற்றோரை உடன் வைத்து பார்த்துக் கொள்ள நினைப்பதும், இல்லை நீ என்னுடன் வந்திரு என்று உத்தரவிடுவதும் தவறென்று தெரியாத முட்டாளை, மணந்து கொள்ளாமல் இருந்தது சிறப்பு.
இப்படிப்பட்ட பெண்களால் தானே இனிய தாம்பத்தியத்திலும், குடும்பத்திலும் விரிசல் உண்டாகி விடுகிறது ... படித்திருந்தும் முட்டாள் என்பதை இது போன்ற சிலர் அவ்வப்போது நிரூபித்து விடுகின்றனர்.
அபிராமி கதாபாத்திரம் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது. அவளது பேச்சும், நடவடிக்கையும் அருமை👌👌
நாவல் வாசிக்க ரொம்ப நன்றாக இருக்கின்றது. கதையோட்டம் சிறப்பு.
புத்தகமாக கிடைக்கும் உங்கள் நாவல்களை, எனக்கு அனுப்பி விடுங்க. அவ்வப்போது நானும் வாசித்து மகிழ்கிறேன்.
மேலும் நிறைய எழுத என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகள்💐💐💐
Comments
Post a Comment