# ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : காவல் தேவதை வெளியீடு : விதைகள் பதிப்பதிகம் 1. காவல் தேவதை : அர்ச்சனா : கணவரை இழந்து இரண்டு பெண் பிள்ளைகளையும் திருமணம் செய்து கொடுத்த பின்னர், தனிமையில் சிக்கி கொண்ட நாயகி இரண்டு மகள்கள் வீட்டிலும் மாறி மாறி சென்று அவர்களது அடாத பேச்சினாலும், வக்கிர புத்தியாலும் பாதிக்கப்பட்டு அவர்களை விட்டு தனியாக சென்று விடுகிறார். அவரது அடுத்த கட்டம் என்ன? தையல் தொழில் பார்த்து வரும் சங்கர், தன் மனைவி, மகளுடன் கஷ்டப்பட்டு வாழ்ந்து வருவதையும், கொரானா எனும் கொடிய அரக்கனால் சிக்கி அவதியுறுவதையும், அதனால் அவரது மகள் அநாதை ஆவதையும் ரொம்ப அழுத்தமாகவும், மனதில் பதியும் விதமாகவும் சொல்லி இருக்காங்க. தனித்து விடப்பட்ட வயதான பெண்மணி மற்றும் சிறு பெண்ணின் கெதி என்ன? பணத்தை மட்டுமே பிரதானமாக கருதி வீட்டை விட்டு துரத்திய மகள்கள் இருவரும் தாயாரை மறுபடியும் ஏற்கிறார்களா? இக்கதையில் வரக்கூடிய காவல் தேவதை யார்? நாயகியா? சிறு பெண்ணா? அல்லது புதிய நபரா? பாமர மக்களை காக்க வேண்டிய சட்டமே அத்து மீறல்களில் ஈடுபட்டு, பொதுமக்களை தாக்குவது...
நிஜமும் கற்பனையும் கலந்த புனைவு