Skip to main content

வினோதமானவனே

   

   

                   " வினோதமானவனே"


               சிறுகதை



அன்று தோழியின் பிறந்த நாள் அதனால், அதிகாலையில்  எழுந்து குளியலை முடித்து தயாராகி, அருகில் உள்ள சிவ ஆலயத்திற்குச் சென்று, தோழியின் பெயரில்  அர்ச்சனை செய்து, சாமி கும்பிட்டு பிரகாரம் சுற்றி வந்து, சிறிது நேரம்  அமர்ந்து பின் தோழியை பார்க்கும் ஆவலில் விரைவாக கிளம்பினாள். வேகத்தை அதிகப்படுத்திய கீர்த்தனா கவனக்குறைவால் எதிரில் வந்த இரு சக்கரவாகனத்தின்  மீது நேராக சென்று மோதிக் கொண்டாள். நல்ல வேளை கீழே விழவில்லை, இருந்தும் கோபத்தை அடக்கி, ஏதோ அவன் தான் தவறு செய்து விட்டதாக நினைத்துக்கொண்டு  திட்டினாள் அவனை முந்திக் கொண்டு, 


"ஏன்யா, கண்ணு தெரியலையா? பார்த்து வரத்தெரியாது, காலையிலே உயிரை எடுப்பதுக்குன்னே வந்திருக்கு பாரு" திட்டிக் கொண்டே வேகமாக  கிளம்பிச் சென்றாள்.


அவன் வாய் திறக்காமல் அவளையே கூர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். கோவிலில் இருந்து விடுதிக்கு வந்து தோழியைக் காணச் சென்றால் அவளைக் காணவில்லை.


"ஏய் ராதா! கலா எங்கேடி போனாள் ஒரு இடத்திலும் காணுமே?"


"ஏண்டி அறிவுக்கெட்டவளே, இன்னைக்கு வெளியூர்ல இருந்து புது ஜீஎம் வர்றாங்கன்னு தெரியும் தானே, அதான் அவள் அப்பவே போயிட்டா. நீ இன்னைக்கு போனது மாதிரி தான், சூடா மசால் தோசை கிடைக்கப் போகுதோ இல்லாட்டிடிடி..." அவள் வாயில் இட்லியை திணித்த கீர்த்தனா, "உன்னை வந்து பேசிக்கிறேன்" என்று ஸ்கூட்டியை  எடுத்து பறந்துவிட்டாள். 


வேகமாக சென்று ஸ்கூட்டியை பார்க்கிங் செய்துவிட்டு, விரைந்து சென்று தனது சீட்டில் அமர்ந்து பெருமூச்சுகளை எடுத்து விட்டு தன்னை இயல்பாக்க முயன்றாள்.


அப்போது அங்கு வந்த கலா, "ஹாய் கீர்த்தனா பேபி, என்னடி இது கோலம்  ரெயில் என்ஜினுக்கு கரி வாரி போட்டவ போல வந்திருக்கே?" என்றாள் கேலியாக


அவளை தன்னுடைய ஆத்திரம் தீரும் வரையில் முறைத்தாள் கீர்த்தனா. "அடியேய் வேணாண்டி முடியலை விட்டுடு, உனக்கு பிறந்த நாளுக்கு கோவிலுக்கு போய் அர்ச்சனை பண்ணிவிட்டு நான் வந்தால், நீ எனக்கே அர்ச்சனை பண்ணுறியாடி இடியட். உன்கூட என் பேச்சு காகாகாகா" என்றாள் சிறுகுழந்தையாக


தோழியின் குழந்தைத்தனமான பேச்சை ரசித்த கலா, "காக்காவாடி" ஹாஹா என்று சிரித்தபடியே  வந்து தோழியை அணைத்தாள்.


"தேங்ஸ்டி லவ்யூ பேபி" என்று விடைபெற்றாள் மகிழ்ச்சியாக,


"கலா புது ஜீஎம் இன்றைக்கு வரலயாடி"


"இல்லை கீர்த்தி நாளைக்கு தான் வராங்களாம். ஏண்ணாணா நீநீ லேட்டாடா அழுழுக்க்காகா வந்தத இல்லையாயா அதான்ன்..." சொல்லிக்கொண்டே அவளது கேபினை நோக்கி புன்னகையோடு ஓடிவிட்டாள்.


அன்றைய அலுவலக வேலைகள் அவளை வா என்று அள்ளிக்கொண்டது. பணி நேரம் முடிந்து தோழியுடனே கலாய்த்தபடி அறைக்கு சென்றார்கள். சிறிது நேர பேச்சு கேலிகளுக்கு பிறகு தூங்கி விட்டார்கள்.


ராதா, கலா, கீர்த்தனா மூன்று பேரும் சேர்ந்து ஒரே பிளாட்டில் தங்கி வருகிறார்கள். ராதாவின் சொந்த ஊர் மதுரை. தங்கியிருப்பது இவர்களுடன் பணிபுரிவது வேறுஇடத்தில், கலாவின் சொந்த ஊர்  சேலம். கீர்த்தனா நாகர்கோவில். அப்பா அம்மா அண்ணா தங்கை பாட்டி தாத்தா எல்லோரும் உள்ள பெரிய குடும்பத்துப் பெண். தாத்தா பாட்டி, மாமா மாமி சித்தி சித்தப்பா எல்லோருமே வசதியானவர்கள். தகப்பனார் ராம்குமார் , தாயார் ராதிகா அண்ணன் ராகவ் தங்கை அபிராமி.


 கீர்த்தனாவின் திருமணத்திற்காக மாப்பிள்ளை பார்க்க ஆரம்பித்துவிட்டான் ராகவ். அவள் இப்போது செய்து கொள்ளமாட்டேன் என்று பிடிவாதம் பிடித்து சாப்பிடாமல் பட்னி விரதத்தை மேற்கொண்டு எல்லோரையும் ஒரு வழி படுத்தி விட்டே வேலைக்கு வந்திருக்கிறாள்.


திருநெல்வேலியில் தரமான ஐடி கம்பெனியில் பணிபுரிகிறார்கள் இவர்கள். 


மறு நாள் அலுவலகத்திற்கு கலாவுக்கு முன்பே கீர்த்தனா சென்று விட்டாள். "என்னடி ஆச்சர்யம்?! இன்று இவ்வளவு சீக்கிரம் வந்துட்டே" என்றாள் அமுதா


"அதிகாலையில் சேவலை எழுப்பி

கூவென்று சொல்லிவிட்டேன்


கடிகாரத்தில் நேரத்தை திருப்பி

சீக்கிரம் வைத்துவிட்டேன்


வாசலில் கோலத்தை 

வரைவில்லை 


வளையொலி கொலுசுகள்

தேடவில்லை 


அதனால் சீக்கிரம் 

வந்துவிட்டேன் "


என்றாள் பாட்டாக. தோழிகள் இருவரும், "வாவ் சூப்பர்!! பூர்த்தி" என்றனர் மெச்சுதலாக 


"ஏண்டி பக்கி, எத்தனை நாள் சொல்லியிருக்கேன் அப்படி அழைக்காதேன்னு இன்னொரு வாட்டி அழைத்துப் பார் பிறகு ஆகப்போற சேதாரத்துக்கு நான் பொறுப்பில்லை" என்றாள் கீர்த்தனா முறைத்துக்கொண்டு,


"சரி பூர்த்தி, இனி அப்படி கூப்பிடலை மூர்த்தி; இனிமேல் வேறு பெயர் சொல்லி கூப்பிடுறேன் கார்த்தி;  சரியா ஆர்த்தி" என்றாள் கலா விளையாட்டாக


"அடியே உனக்கு எவ்வளவு கொழுப்பு இருந்தால் கூப்பிட மாட்டேன் சொல்லி சொல்லியே கூப்பிடுவ உன்னை என்ன செய்கிறேன் பார்" என்று துரத்தினாள். அவள் சிரித்தபடி ஓடினாள். இருவரும் ஓடிபிடித்து விளையாடிக் கொண்டே கதவருகில் வரவும்


திடீரென்று "ஸ்டாப்பிட்" என்று கேட்ட புது குரலில்  "எவ அவ" என்றபடி திரும்பினார்கள். அங்கே கதவில் சாய்ந்தபடி நின்றவன் இவர்களை பார்த்துக்கொண்டே நின்றான்.


தோழிகள் இருவரும்

" மின்னல்கள் ரெண்டும்

மோதக் கண்டேன்


விண்மீன்கள் கூட்டம் 

கூடக் கண்டேன் 


ஆழ்வார்கள் போற்றி 

பாட கண்டேன்


ஸ்ரீ ரங்கனோடு

சேரக்கண்டேன் "


என்று மெதுவாக பாடினர். அதைக் கேட்ட கீர்த்தனா ஓங்கி மிதித்தாள் தோழியின் காலில். ஆனால், "ஆஆஆ" என்று கத்தினான் அவன். 


 'அச்சச்சோ!! இந்த பக்கிய மிதிக்கிறேன்னு நினச்சு, அந்த மங்கிய மிதிச்சுடமேடா, இனி இதுக்கு என்ன சொல்லப் போறானோ தெரியலையே. ஆண்டவா காப்பாத்து' என்று தனக்குள்ளே புலம்பிக் கொண்டிருந்தாள். 


அவர்களைப் பாத்த அவன் "நீங்க எல்லாம் சின்ன குழந்தைகளா? இதென்ன ஆபிஸா இல்லை பிளே கிரவுண்டா, இப்படி வம்பு பண்ணுறீங்க. வேலையை பார்க்கணும்ணு எண்ணமே இல்லையா, போங்க என்  கண்முன் நிற்காமல்" என்றான் சத்தமாக,


அடுத்தநொடி மூன்று கிளிகளும் பறந்து போக திரும்பினர். அவன் விடாமல், "ஏய் நில்லுங்க! வெளியில் நிற்கிற பிங்க் நிற ஸ்கூட்டி யாருடையது..??" என்றான் மூவரையும் பார்த்து


அவர்களோ முழித்தார்கள். "என்ன முழிப்பு கேட்டா பதில் சொல்லத் தெரியாதா?" என்றான் கோபமாக, அவர்கள் மூவரும் தலையசைத்து "தெரியாது" என்றார்கள். 


அவன் "தெரியாதா என்ன தெரியாது?" என்று மீண்டும் கேட்டான். அவர்கள் மறுபடியும் தலையசைத்தார்கள்.


"ஸ்கூட்டி யாரோடதுன்னு தெரியாதா இல்லை பதில் சொல்ல தெரியாதா?"


என்ன சொன்னாலும் விட மாட்டான் என்று நினைத்துக்கொண்டு மூவருமாக "தெரியாது" என்றனர் கோரஸாக


"ஓ! தெரியாதா? ஓகே நானே கூடிய சீக்கிரம் கண்டுபிடிக்கிறேன்" என்று சிடுசிடுத்தான்.


"ஆமா, அது யாருன்னு கண்டுபிடிச்சு நீங்க என்ன பண்ணப் போறீங்க" என்றாள் கீர்த்தனா அச்சத்தோடு, 


 "ஹாங்! இறுக அணைச்சு முத்தமிட போறேன்" என்று சொல்லிக்கொண்டு சென்றான்.


இங்கு இவள் ஹாஹாங்ங் என்று அதிர்ச்சியில் நெஞ்சில் கைவைத்து அப்படியே நின்றுவிட்டாள். மற்ற இரு தோழிகளும் சிரித்தபடியே அவளை கேலி செய்ய ஆரம்பித்தார்கள். "ஏண்டி கிஸ் பண்ணுறேன்னு சொன்னாங்களே, எங்கேனு சொல்லலியேடி கன்னமா இருக்குமா, இல்லை கையா இருக்குமா?" என்றாள் கலா .


"அதை கண்டிப்பாக இப்போதே தெரிஞ்சுக்கணுமா?" கேட்டுக்கொண்டு மறுபடியும் அவன் வந்தான்.


 "அச்சச்சோ!! நாம பேசியதையெல்லாம் கேட்டுட்டார் போல தெரியுதுடி. வாங்க மெதுவா போயிடலாம்" முணுமுணுத்துக்கொண்டு நின்றார்கள்.


" அங்கே என்ன முணுமுணுப்பு? ஆமாம் இதென்ன ஆபிஸா இல்லை பார்க்கா? சதா வாயடிச்சுட்டு இருக்கறீங்க. காலையில வந்தா சீட்ல போயிருந்து ஒழுங்கா வேலை பார்க்கணும்னு தெரியாது. சும்மா அரட்டை அடிக்கதான் வரீங்களா. அதுக்குத் தான் இங்கே சம்பளம் கொடுக்குறாங்களா? இன்னும் ஒரு நிமிடத்திற்கு முன்னே இந்த இடத்தை காலி பண்ணலை அப்புறம் நடப்பதே வேறு" என்று முறைத்தான் .


அவர்கள் 'அப்படி என்ன செய்வான்' என்று யோசிக்க, அவன் கத்திய கத்தலில் பறந்து விட்டார்கள் மூவரும் அவரவர் இடத்திற்கு 


அவர்களைப் பார்த்து முணுமுணுத்துக்கொண்டு அவனும் தன்னுடைய அறைக்குச் சென்றான்.


மதிய இடைவேளை வரை பேச நேரமின்றி, வேலை அவர்களை அரவணைத்துக் கொண்டது. மூவரும் ஒரு மணியானதும் சாப்பிட எழுந்தனர். காண்டீனில் ராமைய்யா அண்ணணிடம் பேசிவிட்டு வந்து ஜாலியாக அரட்டையடித்துக்கொண்டு உண்டனர். அப்போது அங்கு வந்த அவன் இவர்களை பார்த்தபடியே சென்றான். மூவரும் அவனைப் பாராதது போல அமர்ந்து கொண்டு, சிரித்து பேசியபடி உண்டு முடித்து எழுந்து சென்றனர். அவனும் பேசாமலே சாப்பிட்டு எழுந்தான்.


 நாட்கள் அப்படியே  சீராக பயணித்தது. 


அவனைக் கண்டால் மிகவும் பவ்யமாக நடந்து கொள்ளும் கீர்த்தி, மற்ற சமயங்களில் வாய் ஓயாத பேச்சும் சிரிப்புமாக கலாட்டா செய்து கொண்டிருந்தாள். இவர்களின் அரட்டை சிரிப்பை முதலில் வெறுத்தவன் பிறகு தன்னையறிமால் ரசிக்க ஆரம்பித்தான். அவனது சிரிப்பும் ரசனை பார்வைகளையும் பார்த்தவள் வேண்டுமென்றே விலகி சென்றாள்.


'சரியான சிடுமூஞ்சி சிங்காரமாக இருந்தாரே, இப்போது என்ன ஆனது' என்ற யோசனையில் இருந்தவளுக்கு ஒன்றுமே பிடிபடவில்லை.


அன்று அலுவலகத்தில் சிவாவிடம் பேசி சிரித்துக் கொண்டிருந்தாள் கீர்த்தனா. அவனும் இவள் போலவே கம்பியூட்டர் புரோகிராமர்தான். இருவரும் பேசி சிரித்தபடியே வருவதைக் கண்டவனுக்கு கோபம் சுள்ளென்று வந்தது. தன்னை மட்டும் பார்க்க மறுக்கிறாளே என்று, அதனால் அவளை அறைக்கு வரச்செய்து காய்ச்சி எடுத்துவிட்டான். அவளோ திகைத்து பின் கோபங்கொண்டு அவனைத் திட்டினாள். 


"நான் யாரிடமும் பேசுவேன், சிரிப்பேன், பழகுவேன் உங்களுக்கென்ன, அதைக் கேட்க நீங்கள் யார்? வெறும் ஜீஎம் தானே" என்றாள் வெடுக்கென்று 


அவன் கோபத்துடன் "நான் யாரா ..நான் யாரா.." என்று கர்ஜித்தான். அவனது கோபப்பார்வையால் மிரண்டாலும் முறைத்து சென்றுவிட்டாள் கீர்த்தனா.


'அப்பாடா நல்ல வேளையாக தப்பிச்சிட்டோம் இல்ல இன்னைக்கு நம்மை கடிச்சு குதறியிருக்கும் அந்த மங்கி' முனகிக்கொண்டே

தன்னுடைய இருக்கைக்கு  சென்று அமர்ந்தாள்.


தினமும் ஜீன்ஸ், பட்டியாலா, பென்சில்டிப் போன்ற பேண்ட் வகைகளையும் , லாங் டாப்  மற்றும்  விதவிதமன டாப் வகைகளையும்  தேர்ந்தெடுத்து அணிவாள். வெள்ளிக்கிழமை மட்டும் சாரி அணிவாள் . பூனம் பாலியெஸ்டரை விட  பார்டர் போட்ட காட்டன் சாரீஸ் தான் அவள் விரும்பி அணிவது, அதனாலே பெற்றோர் அண்ணன் தங்கை செல்லும் இடங்களில்  கண்ணில் பட்டாலே வாங்கி வந்துவிடுவார்கள்.


 "இவ்வளவு சாரி வச்சிட்டு எப்போதும் சுடி போட்டு அலையிறியேமா, புடவை உனக்கு எவ்வளவு அழகா இருக்கு தெரியுமா" என்பார் ஆதங்கத்தோடு அவளது தாயார்.


"சதா புடவை மட்டுமே உடுத்தினால் பார்க்க பட்டிக்காடு போல இருக்கும்மா" என்பாள் பதிலாக, அம்மாவின் முறைப்பையும் பெற்றுக்கொண்டு.


அன்று காலையிலே வேகமாக கிளம்பியவள் பிங்க் நிற ஸ்கூட்டியில் கவனமில்லாமல் சென்றுவிட்டாள். முதல் நாள் அவன் கேட்டதிலிருந்து இதுவரை நடந்து, பஸ், தோழிகளுடன்  தான் அலுவலகத்திற்க்கு சென்று வந்தாள். இன்று கோவிலுக்கு சென்று வந்த அவசரத்தில் மறந்து அப்படியே அலுவலகத்திற்கு சென்று விட்டாள்.


தோழிகளுக்கு விபூதி பூசி, சிரித்து பேசியபடி நின்ற போது அவன் வந்தான். இன்று தான் அவளைப் புடவையில் முதன் முதலாக பார்க்கிறான், விழிகளை  இமைக்க மறந்து அப்படியே நின்றுவிட்டான். அவர்கள் சிரித்தபடியே திரும்பினால் அங்கே மங்கி நின்றது மயங்கிய நிலையில்  


அதை கண்டு கொள்ளாமல் "குட்மார்ணிங் சார்" என்ற மூவரும் பேசாமல் தாண்டிச் சென்றுவிட்டனர். 


திடீரென கேட்ட பிஏ வின் அழைப்பில் மீண்டவன் தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான். அவளது சிரிப்பும், புடவையின்  வசீகரமும் அழகும் மீண்டும் மீண்டும் மனதைத் தாக்க, நினைக்க நினைக்கத் திகட்டவில்லை. அறைக்கு வந்தவனுக்கு தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்ள வெகுநேரமானது  அவளது நியாபகமாகவே இருந்தது. 


கருநீல புடவையில் சிகப்பு சரிகையிட்ட காட்டன் புடவை அணிந்திருந்தாள் . 'சாரி கட்டியதால் இவள் அழகா அல்லது இவள் கட்டியதால் தான் சாரிக்கே அழகா..??' என்று முனங்கியபடியே இருந்தான்.


அவன் அவன் யார் அந்த அவன் வினோதன். எம்பீஏ படிப்பை முடித்து இரண்டு வருடம் வெளிநாட்டிற்கு சென்று தொழிற்பயிற்ச்சியை கரைத்துக் குடித்துக் கொண்டு தற்சமயம் வந்திருப்பவன். 27 வயது வாலிபன். நல்ல சிவந்தமேனி, நன்கு விரிந்த தோள்களையும் கட்டுமஸ்தான உடலமைப்பையும் கொண்ட, ஐந்து அடி ஏழு அங்குல உயரமுடைய வாட்ட சாட்டமான வாலிபன். காண்பவர் உள்ளங்களை சுண்டி இழுக்கும் பேரழகன். கோபக்காரன், சிரித்து பேசமாட்டான். சிரித்தால் எதிரில் நிற்பவர் அவ்வளவு தான். அவனது அழகே கோபம் தான். பொறுப்பு மிக்க மகன். பாசமிகுந்த அண்ணன்.


அப்பா முரளிதரன் ஓய்வு பெற்ற வங்கியின் அதிகாரி. முதல் மகன் விஸ்வா 33 வயது திருமணம் முடிந்து இரண்டு வயது பெண்குழந்தை (ஹாசினி) இருக்கிறது. அவன் மனைவி பிரபா வசதியான வீட்டுப்பெண் தலைக்கனமும் வசதிக்கேற்ப உண்டு. மாமனார் மாமியார் குடும்பத்தில் யாரையும் மதிக்க மாட்டாள். 


இளைய பெண் மாலினி பன்னிரெண்டாம் வகுப்பு படிக்கிறாள்.


மூன்றாவது மகன் வினய் கல்லூரியில் இரண்டாவது வருடம் படிக்கிறான் .


வினோதனின் பாட்டியும் இவர்களுடனே இருக்கிறார். இவ்வளவு பேரையும் கட்டுக்கோப்புடனும் பாசத்துடனும் கவனித்துக் கொள்வது ராஜேஸ்வரி அம்மா தான்..

சரி இனி அந்த மங்கிய அச்சோ, மயங்கியவனைப் பற்றி பார்க்கலாம்...


ஜீஎம் அறையினுள் நுழைந்த பீஏ "சாசார்ர்" என்றழைத்து வழிந்தாள். ,ஏற்கனவே கீர்த்தனாவின் நினைவிலே இருந்தவன், சிரித்தபடியே இவளுக்கு வேலைகளைக் கொடுத்தான்.


அவளுக்கு 'இவ்வளவு நாள் நம்மை பார்க்காதவன், இன்று  பார்த்துச் சிரித்துப் பேசிட்டானே. நம்மிடம் மாட்டி விட்டான் போலவே' என்று மகிழ்ந்தாள். அவனை எப்படி, முழுவதும்  தன் வழிக்கு கொண்டு வருவதென யோசனையில் இருந்தாள்.


 அதன் முதல்படியாக வெளியே வந்தாள், வேண்டுமென்றே சிரித்து வெட்கப்படுபவள் போல நடித்தாள். அலுவலகத்தில் அமர்ந்திருந்தவர்கள் அவளை ஒரு மாதிரி பார்த்தார்களே தவிர வாய் திறக்கவில்லை. அவளின் திமிர் குணம் தான் எல்லோருக்கும் முன்பே தெரியுமே,


மதிய இடைவேளையில் தோழிகள் மூவரும் சாப்பிட அமர்ந்தார்கள். வினோதனும் வந்தான். அவனுக்கு கேண்டீன் சாப்பாடு கேரள சுவையோடு சூடாக இருப்பதால் மிகவும் பிடித்து விட்டது. அதனால் தினமும் இங்கே வந்து உண்ணுவான். அவனுக்கென்று தனி மேஜை, நாற்காலி வைத்திருந்தார்கள். வேறுயாரும் அதில் அமர்வதில்லை. இன்று மதியம் இவளையே பார்த்தபடி அமர்ந்தவன் அவளை பார்த்து சிரித்தான்.


அவள் 'என்னடா இது மங்கி நம்மை பார்த்து சிரிக்கிது, நிஜமாகவே சிரிக்கிதா? இல்லை கனவு ஏதாவது காண்கிறோமோ , அப்படியே கனவு கண்டாலும் மங்கி ஏன் நம்ம கனவில் வரப்போகுது' என்று நினைத்தாள்.


அவன் அவளைப் பார்த்து நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்துக் கொண்டு கண்சிமிட்டினான். வாய்குள் வைத்த உணவு தொண்டையில் சிக்கி கொண்டது, தொண்டை கமறி இறுமினாள். கலா உடனே தலையிலடித்து நீரை பருக வைத்தாள். 


"ஏண்டி, ஒழுங்கா சாப்பிட தெரியாதாடி, பச்சைக் குழந்தைன்னு நினைப்பா? உன்னைக் கட்டிக்கப்போற அந்த ஜீவன் ரொம்ப பாவம்டி"  என்றாள் சீண்டலோடு .


இதைக் கேட்ட அவன் பாவமாக முகத்தை வைத்து தலையாட்டினான்.


அது தெரியாத கலா, " ஆமா, சாப்பிடும் போது யாராவது மன்மத தேசத்து ராஜா உன் கனவில வந்துட்டாரா? இல்லை உன் மீது காதல் கொண்ட பிருத்வி ராஜ் குதிரையில் கவர்ந்து செல்ல வந்துட்டாரா? அதுவும் இல்லன்னா பக்கட்டு சீட் பக்கி உன்னை சைட் அடிச்சுட்டு இருக்கிதா" என்றாள் வினோதனை கண்காட்டி


கலாவின் பேச்சைக்கேட்ட கீர்த்தி திடுக்கிட்டு விழித்தாள். விழிகள் அவளை அறியாமல் அவனிடம் சென்றது.


கீர்த்தனாவின் முகத்திலே பார்வையை பதித்திருந்த அவன் உதட்டை குவித்து பறக்கும் முத்தத்தை அனுப்பி விட்டான். அவனை முறைத்த கீர்த்தனா கோபத்தில் மிளகாயை எடுத்து கலாவின்  வாயில் வைத்து திணித்தாள். அவள் கவனிக்காமல் கடித்து விட்டு "ஆஆஆஆ" என்று கத்தினாள். அதைக் கேட்ட தோழிகள் இருவரும் "ஈஈஊஊஏஏஐஓஓ" என்று கேலி செய்து சிரித்தபடியே, அவள் சொன்னதையே இவளுக்கு சொல்லி சீண்டி சீண்டி அவளைக் கடுப்பேற்றினார்கள்.


வினோதன்  இவளையே பார்த்தபடியே இருந்தான், இதைக் கவனித்த கீர்த்தி சாப்பிட்டு முடித்ததும், வேறு ஒரு மிளகாயை கையில் மறைத்து கொண்டு வந்து அவனை நோக்கிச் சென்றாள். அவனோ அவளையே விழியகலாமல் பார்த்து சிரித்து மறுபடியும் கண்ணடித்தான். 


அவள், 'மவனே கண்ணாடா அடிக்கிற கண்ணு, இன்னோடு உன் கண்ணு காந்தி தண்ணி தண்ணியா வடியப் போகுது. இந்த உதட்டை வச்சுட்டு தானே என்னைப் பார்த்து முத்தமிட்ட, இப்போ பாரு எப்படி துடிக்கப் போகுதுன்னு' என மனதிற்குள் அவனை திட்டிக்கொண்டு அமைதியாக சென்று கொண்டிருந்தாள். 


 தன்னருகில் வந்து கொண்டிருந்தவளைப் பார்த்த வினோதன், மறுபடியும் கண்ணடித்து, நாவால் உதட்டை வருடினான். பல்லைக் கடித்துக்கொண்டு அவன் அருகில் சென்றவள், படாரென்று அவன் வாயில் மிளகாவை திணித்துவிட்டு பேசாமல் சென்றுவிட்டாள்.


வாய் மூடி கடித்தவன் காரம் தாங்க முடியாமல் 'ஸ்... ஆ' என்று நீரை பருகினான் காரம் போகவில்லை, விழிகள் கலங்கின, அதை விட நா காந்தியது. இதற்கு காரணமான அவளை விடக் கூடாதென்ற எண்ணமும் பிறந்தது. உடனே எழுந்து கையை சுத்தம் செய்ய சென்றான்.



தோழிகள் இருவரிடம் வினோதனைப் பற்றி பேசிய கீர்த்தனா,

"ஏய்!! அந்த இஞ்சி தின்ன குரங்கை பார்த்திங்களாடி, என்னா ஒரு அழகு இல்லையா?" என்று சிரித்தாள்.


உடனே கலா "யாரடி சொல்ற?"


"யாரையா? ஐயகோ!! அருமையான காட்சியை மிஸ் பண்ணிட்டிங்களேடி. அந்த இஞ்சி தின்ன குரங்கு இருக்குப் பாரு அது வாயில் சுவைத்து மென்னு ரசித்த அழகு இருக்கே, பார்க்க ரெண்டு கண்ணு போதாதுடி ரெண்டு கண்ணு போதாது" என்று சத்தமாக சிரித்தாள்.


"ஏண்டி உனக்கு என்ன ஆச்சு, யாரடி சொல்ற? புரியற மாதிரி சொல்லுடி" என்று கடித்தாள்.


"புரியலையா அப்போ கஷ்டம் தான். இன்னும் ஒரு சமயம் மாட்டட்டும் அப்போ அவனுக்கு இருக்கு என்று முணுமுணுத்துக்கொண்டே

என்ன அழகு எத்தனை அழகு 

இஞ்சி தின்ற மங்கி அழகு,

அதை நீங்க பார்க்கவில்லையே" 

என்று பாடிக்கொண்டே , மிளகாய் வாயில் திணித்ததை கூறினாள். மூவரும் சேர்ந்து வாய் விட்டு சிரித்தனர். 


அவனுக்கோ கடுப்புத் தாங்கவில்லை. மிளகாயை வாயில் திணித்து கஷ்டப்படுத்தியது போதாதென்று, குரங்கு என்று பேசி கேலி செய்து சிரிக்கிறாளே என்று. 'உன்னை என்ன செய்றேன் பாரடி' என்று சினந்தான். அவள் பின்னே சென்று நின்றான்.


"ஏய்!!" என்ற சப்தத்தில் மூவரும் திரும்பி பார்த்தனர். விட்டால் கடித்து குதறிவிடுவது போல நின்றான் சீற்றமாக வினோதன். இவனைக் கண்டதும் மூவரும் விரல்களை பிசைந்து கொண்டு பயந்து ஓடினர்.


வினோத் விடாமல் கீர்த்தனாவை துரத்தினான். அவள் விரைந்தோடி ஒரு அறையினுள் நுழைந்து, கதவினை சாற்றிக்கொண்டு, ஜன்னலின் திரைச்சீலைக்கு பின்புறம் நின்று தன்னை மறைத்துக் கொண்டாள் விரைந்து சென்றவன் அவளை கண்டு கொண்டு கதவைத் தாளிட்டான். அவளுக்கு அச்சத்தில் பீபீ எகிறியது.


"நீ இங்கே தான் இருக்கேன்னு எனக்குத் தெரியும் ஒழுங்கா வந்துடு, இல்லை  ஆகப்போற சேதாரத்திற்கு நான் பொறுப்பில்லை" என்றான் பெருமூச்சை வெளியேற்றிக்கொண்டு


அவள் அச்சத்தில்  வராமல் இருந்தாள். இவன் அவளை நோக்கி நடந்தான். அச்சத்தில் தாறுமாறாக துடித்த மார்பை ஒரு கையால் அழுத்திப் பிடித்தபடியே மறு கையால் வாயை  இறுக மூடிக்கொண்டு நின்றாள் கீர்த்தனா. 


திரைச்சீலையை விலக்கிய வினோதன், பேண்ட் பாக்கெட்டில் கையை நுழைத்துக்கொண்டு அவளையே பார்த்தபடி நின்றான்.


அச்சத்தில் மிரண்ட விழிகளும், தன்னைப் பார்த்து துடித்த உதடுகளும், முகத்தில் இருந்து வழிந்த வியர்வை துளிகளும், எச்சிலை விழுங்கிய போது ஏறி இறங்கிய தொண்டை குழியும், வேக வேகமாக ஏறிய மார்பு பகுதிகளும், பிங் நிற திரைச்சீலையின் ஒளியும் அவனது உணர்வுகளை தூண்டி விட்டன. அவளிடமிருந்து விழிகளை விலக்க முடியவில்லை. மெதுவாக அருகே சென்றான்.


"ஏண்டி, என்னைப் பார்த்தால் மங்கி போல தெரியுதா..??"

"ம்ஹூம்..." மறுப்பாக தலையசைத்தாள்.


"பிறகு எதுக்குடி அப்படி உன்னோட குரங்கு ஃபிரண்ட்ஸ் கிட்ட அப்படி சொன்னே"



"இல்லைங்க, சும்மா விளையாட்டுக்குத்தான் சொன்னேன். ப்ளீஸ் என்னை ஒண்ணும் பண்ணிடாதீங்க, நீங்க கண்ணடித்து, முத்தமிட்டதால் தான் அப்படி பண்ணிட்டேன் ..." என்று அச்சத்தால் மெதுவாக சொன்னாள்.


"ஓஹோ! கண்ணடிச்சு, பறக்கும் முத்தம் தந்ததால் அப்படி பண்ணுனியா? ம்ம் அப்போ கட்டிப்புடிச்சு நிஜமாக முத்தம் கொடுத்தா என்னப் பண்ணுவ..?? "


"அச்சச்சோ!! அது ததப்ப்புபு" என்று உதட்டைப் பிதுக்கி கொண்டு நின்றவளின் இதழில் பார்வையை பதித்தான்.


"அதை இப்போ செப்பு" அழுத்தமான காலடிகளுடன் அருகில் நெருங்கினான். அவள் பின்னோக்கி நகரமுடியாமல் அச்சத்தில் விழிகளை இறுக மூடிக் கொண்டாள். அவன் சில நொடிகள் அமைதியாக அவளையே பார்த்திருந்தான். அவளது விழிகள் திறந்தவுடன் இடையோடு இழுத்தணைத்து இறுக்கினான். தனது காரத்தை அவளுடன் பறிமாறிக் கொண்டான். முதலில் கோபமாக ஆரம்பித்த வினோதன் சில நிமிடங்களில் மென்மையை கையாண்டு விடாமல் அவளை தனக்குள்ளே பொதிந்து கொண்டான். அவனை விலக்கிட நினைத்தவளால் அவனை அசைத்திடவும் முடியவில்லை. நீண்ட பரிமாறல்களுக்குப் பிறகே விடுவிடுத்தான். அவளைப் போலவே சுயநினைவிற்கு வர சில நிமிடங்களை அவகாசமாக எடுத்துக் கொண்டான் .


"நீ கொடுத்ததை திருப்பிக் கொடுத்தேன்

எண்ணிக் கொள்ளடி என் கீர்த்தி கண்மணி 

கொண்டாட்டம் டம் வேணாம் தாம் தூம்

திண்டாட்டம் டம் ஆகும் மானே மானே "


அவளை கேலி செய்து அவன் பாடினான். அவள் என்ன செய்வதென்று தெரியாமல் அதிர்ந்து விழித்து விலகிட நினைத்தாள். அவனோ விடாமல் மேலும் மேலும் அவளிடம் ஜொள்ளிக் கொண்டே நின்றான்.


"ஆமா வெளியில் நிற்கிற பிங் நிற ஸ்கூட்டி உன்னுடையது தானே..??"


'அச்சச்சோ!! அதுவும் தெரிஞ்சு போச்சுதா! கீர்த்தி இன்னைக்கு உன்னோட நிலைமை ரொம்ப மோசம்டி' என திருதிருவென அவள் விழித்துக் கொண்டிருந்தாள்.


அவளது கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்  என்ன சொன்னானோ,  வேகமாக அவனை தள்ளியவள் வெளியே ஓடிவிட்டாள்.


அது முடிந்து இன்றோடு ஒரு வாரம் முடிந்துவிட்டது. அவனை அவள் சந்திக்க முயற்சி செய்யவில்லை, அவன் வருவதைப் பார்த்தாலே விலகி சென்று விடுகிறாள், அல்லது பாராதது போல கணினியில் பார்வையை பதித்தபடி அமர்ந்து கொள்கிறாள். ஆனாலும் மனம் ஏனோ அச்சத்தில் நடுங்கத்தான் செய்தது. அதை வெளி காட்டிக் கொள்ளாமல் தோழிகளுடன் லூட்டி அடிப்பது, அலுவலக வேலை என்று தன்னை காட்டி கொள்கிறாள்.

அவனது ஆழ்ந்த பார்வை, முதல் தொடுகையில் தடுமாறிய மனதை, மிகவும் கடினமுடன் அடக்கினாள். நாளை ஏதாவது தவறாக நடந்து விட்டால் என்ன செய்வது என்ற எண்ணத்தில் வேலையை விட்டு ஊருக்கு போய்விடலாம் என்று ரிசைன் கடிதத்தை எழுதி அவன் முகம் பார்க்க விருப்பமற்று பீஏவிடம் கொடுத்து அனுப்பினாள். அவன் படித்து பார்த்து கிழித்துப் போட்டு விட்டான். ஏனென்று உணர்ந்து கொண்டான் போலும்,



மறுநாள் விசைத் தூக்கியில் மேலே செல்ல ஏறி நின்றாள். வினோதன் அடுத்த மாடியில் ஏறி விட்டான். அவனை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி நின்று கொண்டாள். அவனது பார்வை அவளை விடாமல் துளைத்தது. மெதுவாக நிமிர்ந்து பார்த்து அவனது பார்வையில் தெரிந்த மாற்றத்தில் அசையாது நின்றான். அவளது விலகல் வலித்தது. பேசிட நா துடிதுடித்தது. அன்றைய அணைப்பும், முத்தமும் நினைவிற்கு வந்து சித்தத்தை செயல் பட விடாமல் தடுத்தது. ஏற்கனவே தன்னை விட்டு விலகி நடப்பவளை,  மேலும் அச்சப்படுத்த அவனது காதல் கொண்ட உள்ளம் விரும்பவில்லை. மென்மையாக புன்னகைத்துக்கொண்டு சென்று விட்டான்.


பணி முடிந்து கடைக்கு சென்று சில சாமான்கள் வாங்கி விட்டு அறையினுள் நுழையும் போது 'உறக்க கத்துது கோழி தண்ணி இறைச்சி கொட்டுது வாளி' என்று எஜமான் பட பாடல் ஓடிக் கொண்டிருந்தது. 


அதைப் பார்த்த கீர்த்தனா, "ஏய், என்னாங்கடி நடக்குது இங்கே, இந்த பாட்டெல்லாம் வயசுப் பொண்ணுக பாக்க கூடாதுடி கெட்டுபோய்டுவீங்க" என்றாள்.


உடனே ராதா, "ஏது, இதைப் பாத்து நாங்க கெட்டுட போறாமா, கேட்டியாடி கலா இவள் சொல்லுறதை ஏண்டி கீர்த்தி, இந்த ஸ்டேஜ்ல இதையெல்லாம்  ரசிக்காமல் பாட்டியான பிறகாடி ரசிப்பது" என்றாள் கிண்டலாக


அதைக் கேட்டபடி வந்த கலா "ஆமாடி பாட்டி ஆன பிறகு யாரடி சைட் அடிக்க?" என்றாள் சிரித்துக்கொண்டு


"ஏன் தாத்தாவை அடிக்கிறது"  


"யாரோட தாத்தாவடி உங்க தாத்தாவையா அல்லது எங்க தாத்தாவையா" எனக்கூறி கண்ணடித்தாள் ராதா.


"ஏய், அப்படி பண்ணாதேடி" என்று படபடத்தாள் கீர்த்தனா 


"என்னாச்சுடி  உனக்கு, பாட்டு பார்க்கவும் விடமாட்டேங்குற, கண்ணடிக்கவும் விடமாட்டேங்குற" என்றாள் கேள்வியோடு,


கீர்த்தனா "எதையும் பாருங்க ஆடுங்க,  ஆனால் என்னை மட்டும் விட்டுடுங்க" என்று விலகிக் கொண்டாள். 


அதைப் பார்த்த ராதா "ஏய் கலா, இவளுக்கு என்னாச்சுடி, இன்னைக்கு ஒரு மார்க்கமாகவே இருக்கா, சன்டிவில தானே இதை போட்டிருக்காங்க. பாதி மூவிலயும் குத்தாட்டம் குரங்காட்டமும் தான் போடுறாங்க, அதில் என்ன தான் ரசனையோ, அந்த மாதிரி மூவியை குடும்பமாக உட்கார்ந்தாவது பார்க்க முடியுதா அவ்வளவு மோசம். இவள் என்னன்னா அவ்வையார் ரேஞ்சுக்கு பேசுறா " என்று  சொன்னாள்.


தோழிகள் இருவரும் தங்களுக்குள்ளாகவே பேசிக் கொண்டனர். கீர்த்தி இவர்கள் பேசுவதையெல்லாம் கேட்டபடி அமைதியாக இருந்தாள், ஆனால் அவளது எண்ணமோ முத்தமிட்டவன் புறமாக ஓடிக் கொண்டிருந்தது. 'ஏன் வினோ அப்படி செய்தீங்க இது தப்பென்று உங்களுக்கு தெரியாதா?'


அந்த வாரத்தின் கடைசி இரு நாட்களும் அரசுவிடுமுறை நாட்களாக இருந்ததால், அவள் வெள்ளி இரவு ஊருக்கு போய்விட்டு, திங்கள் காலை பணிநோக்க வரலாம் என்று நினைத்திருந்தாள். அதுபோல தோழிகளிடம் கூறிவிட்டுச் சென்றாள்.


கீர்த்தனாவை இரண்டு நாட்களாக பார்க்க முடியாதது ஏனோ கஷ்டமாக இருந்தது வினோதனுக்கு, வீட்டில் எல்லோரிமும் நன்றாகத் தான் பேசுகிறான் பழகுகிறான் ஆனால் அவள் இல்லாமல் ஏதோ பறிபோனது போன்று உணர்ந்தான். அவளிடம் முதலில் சீண்டிக் கொண்டுதான் இருந்தான். ஆனால் என்று தொட்டானோ அன்றிலிருந்து அவள் நினைவால் வசியமாக மாறிவிட்டான்.


ஆனால் ஊருக்கு போனவள் அவனது நியாபகமே இல்லாமல் வீட்டில் அனைவரிடமும் ஜாலியாக பேசி சிரித்துக் கொண்டிருந்தாள்.


"ஏம்மா, கொஞ்ச நாள் வேலைக்குப் போனதும் கல்யாணம் பண்ணிக்கிறேன் சொன்னியே, நல்ல வரன் நம்ம பக்கத்து ஊருல இருந்து வந்திருக்கு. நல்ல வசதியான குடும்பம். மாப்பிள்ளை இன்ஜினியரிங் படிச்சுட்டு பெங்களூர்ல வேலை பார்க்கறார். கல்யாணம் முடிஞ்ச கையோடு அவரோடு அழைச்சுட்டு போயிடுவாரு. நீ என்னம்மா சொல்ற?" அவளது அப்பா வினவினார்.


"இப்போ இந்த சம்மந்தத்துக்கு என்னப்பா அவசரம். நான் இன்னும் கொஞ்ச நாள் வேலைக்கு போயிட்டு வரேன்பா" என்று மெதுவாக சொன்னாள்.


"அம்மா கீர்த்தி இப்போ பார்த்து பேசினாலும், நிச்சயம், கல்யாணம்னு முடியறதுக்கு மூணு மாசம் ஆகி விடும்டா. இப்போ என்ன மாசம் பாரு புரட்டாசி கார்த்திகை, மார்கழியில் வைக்க முடியாது. அப்புறம் நல்ல நாள் பார்க்க சொல்லலாம். அது வரைக்கும் நீ வேலைக்கு போயிட்டு வா" என்றார் அவளது அப்பா புன்னகையுடன்


என்ன காரணத்தை சொல்லி மறுக்க முடியும். வேலைக்கு செல்வதற்கு முன்பே மறுத்தார்கள் இப்போது எப்படி சொல்லுவது. அவர்களது ஆசை புரியாமல் இல்லை. அதே நேரம் ஏனோ விருப்பமின்மையாக இருக்கிறது. என்ன சொன்னாலும் கேட்க மாட்டார்கள் என்று தெரிந்தது. வேறு வழியில்லாமல் அமைதியாக இருந்தாள்.


மகளது அமைதியில் மனம் மகிழ்ந்தவர், அதை சம்மதாக எடுத்துக்கொண்டார்.


 மறுபடியும் வந்து பணியில் அமர்ந்த கீர்த்தனா தோழிகளுடன் இரு நாள் நிகழ்வுகளை, பகிர்ந்து கொண்டாள். வினோதனை நிமிர்ந்து கூட பார்க்கவில்லை. அவனது பார்வை அனைத்து திசைகளிலும் அவளை விடாமல் துளைத்தது. மதிய உணவு நேரத்தில் தோழிகளிடம் புன்னகையுடன் பேசிக்கொண்டிருந்தவளை ரசித்தவன் அவளை பார்வையாலே வருடினான்.


 'என் மேல என்ன கீர்த்தி கோபம். ஏன்டா பார்க்கவே மாட்டேங்கற. உன்னைப் பார்க்க முடியாம ரெண்டு நாளாக தவிச்சு எப்போதுடா திங்கள் காலை வரும்னு எவ்வளவு கஷ்டப்பட்டு நேரத்தை தள்ளினேன். நீயானால் பார்க்கவே மாட்டேங்கறியே கீர்த்தி' என ஏக்கமாக அவளையே பார்த்தபடி இருந்தான்.


அவனைப் பார்க்கா விட்டாலும் அவனது பார்வையின் வீச்சில் தடுமாறினாள் கீர்த்தனா. வேலையை விட்டு சென்று விடலாம் என்று நினைத்தால் விட மறுக்கிறான். விலகிச் சென்றாலோ பார்வையால் தாக்கி கஷ்டப்படுத்துகிறான். இவனை என்ன தான் செய்வது என்று திணறி தலை குனிந்து அமர்ந்து கொண்டாள்.


அவனது பார்வையை தெரிந்து கொண்ட பீஏ, எப்படி இவர்களை பிரித்து அவனை தன் வசமாக்குவது, என்று எண்ணிக்கொண்டிருந்தாள். 


பீஏ வேறுயாருமல்ல வினோதனுடைய அண்ணியின் ஒன்றுவிட்ட சகோதரி. அவ்வீட்டாளை பிடிக்காவிட்டாலும் சொத்து பணம் மரியாதை கௌரவம் எல்லாமே கிடைக்கும் .அதனால் எப்படியாவது வினோதனை மணந்துவிட வேண்டும் என்று நினைத்தாள். அதன் முதல் படியாக அக்காவிடம் பேசி அவனது அலுவலகத்திற்கு பணிபுரிய வந்தாள். 


வினோதன் முடியாதென்று மறுத்தான் "சொந்தம் வீட்டோடு முடியட்டும் அலுவலகத்தில் தொடரவேண்டாம்" என்றான் அண்ணனிடம்  


அவன் "நிவேதா, சும்மா வேலையைக் கற்றுக் கொள்ளத்தானே வருகிறாள், உனக்கு இதில் என்ன கஷ்டம்" என்று கேட்டதால் வேறு வழியற்று அமைதியாக தன்னைக் காட்டிக் கொண்டான்.


இவளோ எப்படியாவது அவனைத் தன் வசப்படுத்திவிட நினைத்தாள். அதற்கான காய்களை யாரும் அறியாத வண்ணம் நகர்த்தினாள். ஞாயிறன்று வீட்டிற்கு சென்று அவனிடம் பேசினாள். 


அவன் "என்னைப் பொருத்தவரையில் நீ சாதாரண பீஏ தான், அதைத்தாண்டி வேறு உறவு இல்லை" என்றான். 


"நான் யார் என்று தெரியவில்லையா?

உங்கள் அண்ணியினுடைய தங்கை" என்றாள் மிரட்டலாக . 


அவனோ "அதை மாற்ற இயலாது ஆனால் 

இனி நடக்கப் போவதை மாற்றியமைக்கலாம்" என்றான் கோபமாக


"அத்தான் நான் உங்களை விரும்புகிறேன். நீங்கள் என்னைத்தான் மணந்து கொள்ள வேண்டும்" என்றாள் அதிரடியாக 


"அது என் உயிர் இருக்கும் வரையில் நடக்காது" அத்துடன் பேச்சை முடித்து சென்றுவிட்டான். 


வீட்டில் இவளது அக்கா பிரபாவினால் எல்லோரும் படுகின்ற துன்பத்தை பார்த்தவனுக்கு, தன்னுடைய மனைவி அத்தனை பேருக்கும் பொருந்துபவளாக திறமைசாலியாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தது. கீர்த்தனாவின் குறும்பு பேச்சும், சிரிப்பும் அவனுக்கு மிகவும் பிடித்திருந்தது. நம் வீட்டிற்கு வந்தால் எல்லோரிடமும் சிரித்துப் பேசி மகிழ்ச்சியாக காணப்படுவாள் என்று நினைத்தான்.


இரண்டு நாள் அவளை பார்க்காத ஏக்கம் கண்ணில் வெளிப்படையாகவே தெரிய அவளையே பார்த்துக் கொண்டிருந்தான், 'எப்படி சொல்லுவது தன் காதலை, அவள் ஏற்பாளா ,மறுப்பாளா' என்று தனக்குத்தானே பட்டிமன்றம் நடத்தினான். இப்படியே அமைதியாக இருந்தால் ஒன்றுமே நடக்காது என்பதை புரிந்து கொண்டு பார்வையாலே அவளை வசியப்படுத்த முயன்றான். 


இங்கே அவளுக்கு உணவு தொண்டைக்குள் போக மறுத்தது. 'ஏன் இப்படி பார்க்கிறான், விட்டால் ஆளையே முழுங்கிவிடுவான் போல இருக்குதே, எத்தனை பேர் உட்கார்ந்து சாப்பிட்டு கொண்டு இருக்கிறாங்க. இவனுக்கு என்ன தான் ஆச்சு? இவனிடமிருந்து எப்படி தப்புவது' என்று நினைத்து உணவை பிசைந்து கொண்டிருந்தாள்.


இவனின் பார்வையும் அவளின் அமைதியையும் கண்கூடாக பார்த்திருந்த நிவேதாவின் உள்ளமோ நெருப்பாக தகித்தது.


மறுநாள் "ஆபிஸ் பைல் வைத்திருக்கும் இடம் உயரமாக இருப்பதால் என்னால் எடுக்க முடியலை நீ வந்து எடுத்துக் கொடு" என்று கேட்டாள் நிவேதா


இவளுக்கு ஒன்றும் தவறாக தோன்றாததால் அவள் கேட்டதை எடுத்துக் கொடுக்க சென்றாள். உயரமான நாற்காலியை எடுத்து வைத்து அதன் மீதேறி கப்போர்டில் தொங்கியபடி ஃபைலை எடுக்க முயன்றாள். ஆனால் நிவேதாவோ நாற்காலியை நகர்த்தி வைத்துச் சென்று விட்டாள்.


 கால்களை கீழே கால் வைக்க முடியாத அச்சத்தில் நாற்காலியை தேடினாள். நிவேதாவையும் காணாமல் நாற்காலியும் விலகி இருக்கவே தன்னை மீறிய நடுக்கத்தில், கைகளின் வலியில், எங்கே கீழே விழுந்து விடுவோமோ என்ற அச்சத்தில், தன்னையும் மீறி கத்தினாள்.


அவளது சத்தத்தை கேட்ட வினோதன் விரைந்தோடி சென்று பார்த்து அதிர்ச்சியுடன் இரண்டு கால்களையும் பற்றி மெதுவாக கைகளை விலக்கிட சொன்னான். அவளும் மெதுவாக விலக்கிய வேகத்தில் அவன் மீது மொத்தமாக சாய்ந்தாள். இரண்டடி பின்னே சென்று அழுத்தமாக கால்களை ஊன்றிய வினோதன் அவளை அணைத்து மென்மையாக வருடிவிட்டான். அச்சத்தால் உடல் உதற அவனது அணைப்புக்குள் அடங்கி வெகு நேரம் நின்றவளின் விழிகள் தன்னை மீறி நனைந்தன.


"ஒண்ணும் இல்லை கீர்த்தி பயப்படாதே! அதான் நான் வந்துட்டேன் இல்லை பிறகென்ன பயம்? ம்.." மென்மையாக அவளது தலையை கோதி விட்டான்.


மெதுவாக நடந்து சென்று மேஜையில் இருந்த கண்ணாடி கப்பை எடுத்து நீரை அருந்த செய்து நிதானத்திற்கு வரச்செய்தான்.


"கீர்த்தி, ஒண்ணும் இல்லைடா பயப்படாதே! ஆமா நீ எப்படி மேலே போன? இது உன்னோட வேலை இல்லையே? யார் உன்னை இப்படி செய்ய சொன்னது?" என்று விசாரித்தான்.


அவள் நடுக்கத்துடன் மெதுவாக சொன்னாள் நிவேதா என்று. புருவங்கள் முடிச்சிட யோசனையாக பார்த்தான் வினோதன்.


அவனை விட்டு விலகிய கீர்த்தனா மெதுவாக தன்னுடைய இருக்கைக்கு சென்று அமர்ந்தாள். மேலே தொங்கியதால் கை விரல்களும், தோள்கள் இரண்டும் வலித்தன. டைப் அடிக்க முடியவில்லை. உடலும், உள்ளமும் ஒரு சேர வலித்தது. விழிகள் கலங்கி வழிந்தன. தலையை பற்றிக்கொண்டு மேஜையில் குனிந்து கொண்டாள். அவளால் இயல்பிற்கு வரவே முடியவில்லை.


அவளது தவிப்புகளை பார்த்த வினோதன், தன்னுடைய அறைக்கு அழைத்தான். மெதுவாக சென்று நடுக்கத்துடன் நின்றவளை மென்மையாக அணைத்தான். அவளது கை விரல்கள், கழுத்து, தோளிரண்டை மெதுவாக அழுத்தி, விழி நீரை துடைத்து விட்டான்.


"கீர்த்தி என்னடா இது? இதுக்குப் போய் இத்தனை பதட்டம், அழுதுட்டு இருக்கே. விடுடா, இயல்பாக இருக்க முயற்சி செய்" என்றான் தோளில் மென்மையாக தட்டிக்கொண்டு


அவனை விட்டு விலக வேண்டும் என்று நினைத்திருந்த கீர்த்தனா, இப்போது அவனை விலகினாலே தன்னில் நிலையற்ற தன்மையை உணர்ந்தாள். அதனால் விழி மூடி வினோதனின் அணைப்பில் ஒன்றினாள். அவளது முகத்தைப் பார்த்தவன் உதடுகளில் சிறு முறுவல் பூத்தது. மனமெல்லாம் நிம்மதியாக இருந்தது. அவள் தலையில் மெதுவாக நாடியை பதித்தான்.


"கீர்த்தி, காலம் முழுவதும் உன்னை இப்படியே என் மார்பில் சாய்த்து கொள்ளும் உரிமையை எனக்கு கொடுப்பியாடா? உன்னை சிறு தூசு படாமல் நான் பார்த்துக்கறேன்" என்றான் வினோதன் 


அவள் விழிகள் திறந்தன. அவனையே நோக்கின.


"நிஜம் தான் கீர்த்தி, உன்னை எனக்கு ரொம்ப பிடிச்சுருக்கு. என் ஆயுள் முழுக்க உன்னுடனே வாழணும்னு ஆசைப்படுறேன். என்னைக் கல்யாணம் செய்துட்டு என்னோடு வந்துருவியாடா?" என்று கேட்டான். அவளது உதடுகள் பதில்  கூற முடியாமல் துடித்தன.


"என்ன கீர்த்தி எதுக்கு இத்தனை பதட்டம் விடு. நான் கேட்டதுக்கான பதிலை உடனடியா சொல்லணும்னு இல்லை. மெதுவா சொன்னால் போதும். இப்போ மனசை ரிலாக்ஸா வச்சுக்கோ" என்று புன்னகைத்தான்.


அவள் தலை சம்மதமாக அசைந்தது. "இன்னைக்கு வேலை பார்க்க வேண்டாம், பக்கத்துல இருக்கிற என்னோட ரெஸ்ட் ரூம்ல ஓய்வெடு. பிறகு நான் கொண்டு விடுறேன் ஓகே"


சம்மதமாக தலையசைத்து அருகில் இருந்த அறைக்குள் நுழைந்து சோபாவில் தலை சாய்ந்தாள். அவளைப் பார்த்து புன்னகையுடன் கதவை சாற்றியவன் உதடுகள் அடுத்த நிமிடமே இறுகியது.


"நிவேதா நீ என்ன எண்ணத்துல இப்படி நடந்துக்கிறன்னு எனக்கு தெரியும். ஆனால் நீ நினைக்கிறது நடக்காது. என் கீர்த்தி கழுத்தில் தாலி கட்டி என்னோட மனைவியாக்கி அவளோடு சந்தோசமா குடும்பம் நடத்தி காட்டலை. என் பெயர் வினோதன் இல்லை" என்று கூறினான்.







மாலையில் அவளது தோழிகளிடம் தான் அழைத்து வந்து விடுவதாக கூறினான். சோபாவில் சாய்ந்து துயில் கொண்டிருந்தவளின் அருகில் சென்று அவளது முகத்தையே பார்த்தான். எப்போதும் புன்னகை தவழ்ந்தபடி, கேலி பேசி சிரித்தபடி இருப்பவள், இன்று விழிகளில் கசிந்த நீருடன் இருப்பதை பார்த்து மனம் வலித்தது. அவளது கைகளை எடுத்து பார்த்தான். இரண்டும் சிவந்து போயிருந்தன. அப்படியே கன்னத்தில் வைத்துக்கொண்டான்.


" கீர்த்தி... கீர்த்தி"


மெதுவாக அசைந்தாள். விழிகளை திறந்து பார்த்தாள். அவனிடமிருந்த தன்னுடைய கைகளை விலக்கிக்கொண்டு எழுந்து நகர்ந்து நின்றாள். அவளது விலகல் அவனது மனதை தாக்கியது. 


"கீர்த்தி, போய் முகத்தை கிளீன் பண்ணிட்டு வா" அனுப்பி வைத்தான் அருகில் இருந்த அறைக்கு


அங்கு வினோதன் பயன்படுத்திய மைசூர் சாண்டலின் வாசனை மனதை நிறைத்தது. மெதுவாக எடுத்து கைகளில் தோய்த்து முகத்தில் வைத்தாள். புதுவிதமான உணர்வுகள் தனக்குள் உருவாவது போலிருந்தது.


வீட்டில் பெற்றோர் மாப்பிள்ளை பார்த்து திருமணத்திற்கு ஏற்பாடு செய்து கொண்டிருக்க, வினோதனின் உரிமையான தொடுகையும், ஆர்வமான பார்வையும் அவளைக் கலங்கடித்தது. அதிலும் திருமணம் செய்து கொள்வோமா என்றது அவளது நாவை கட்டிப் போட்டது. எப்படி அவனிடம் தெரிவிப்பது? வீட்டில் பெற்றவர், அண்ணாவிற்கு தெரிந்தால் என்ன பதில் கூறுவது என்று தடுமாறினாள்.


சில நிமிடங்களில் வெளியே சென்றாள். விலகி நின்றாள்.


புன்னகையுடன் அழைத்துச் சென்று உணவகத்தின் முன்பு அவளது பேச்சை கேளாமல் காரை விட்டு இறங்கி சூடான காஃபி, மசால் தோசை வாங்கி உண்டு அவளையும் உண்ணச் செய்தான்.


"கீர்த்தி எதையும் போட்டு குழப்பிக்காமல் நல்லா ரெஸ்ட் எடு. பிறகு பேசிக்கலாம்" என்று புன்னகைத்தான்.


அவள் மறுப்பாக தலையசைத்தாள்.



" என்ன?"


"வேண்டாம்" என்றாள். 


 "ஏன்" என்றான் கேள்வியாக நிறுத்தி,


"வேண்டாமே" என்றாள் மறுபடியும்


"ஏன் கீர்த்தி என்னைப்  பிடிக்கலையா? நான் அழகா இல்லையா, உன்னை மணந்தால் மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள மாட்டேன்னு நினைக்கிறியா " என்றான் விடாப்பிடியாக.


அவள் தலை மறுப்பாக அசைந்தது.


 அவனது விரல்கள் அருகில் இருந்த அவளது வலது கை விரல்களை பற்றி மென்மையாக வருடி முத்தமிட்டது "ஐலவ்யூ கீர்த்தி. உன்னுடைய குறும்புத்தனமான பேச்சையும், புன்னகையும் காலமெல்லாம் கூடவே இருந்து பார்த்துக் கேட்க ஆசைப்படுறேன்டா. ப்ளீஸ் கீர்த்தி" என்றான் விழிகளில் காதல் வழிய, 


 ஏதாவது மறுத்துக் கூறி அவன் மனதை காயப்படுத்தி விடக்கூடாதே

என்று எண்ணி அமைதியாகவே இருந்தாள்.


அவளது அமைதி அவனை தாக்கியது. "பதில் சொல்லு கீர்த்தி  " 


"இப்போது உடனே சொல்லணுமா?"  


"ம்ஹூம்... இரண்டு நாள் வேண்டுமானாலும் டைம் எடுத்துக்கோ, பட் பதில் எனக்கு சாதகமாகத்தான் இருக்க வேண்டும்" என்றான் குறுச்சிரிப்புடன்.


அவள்  "சரி" என்றாள்.


"ரிலாக்ஸ்டா  இருடா பேபி ,டோண்ட் பீல் பர் தட் ஓகே" மெதுவாக கை சுத்தம் செய்து காரில் ஏறி அவளது அறைக்கு முன்பு சென்று வேகத்தை குறைத்தான்.


"கீர்த்தி, ரொம்ப நாள் விலகி போக விடமாட்டேன். சீக்கிரம் நல்ல முடிவா சொல்லிடு" என்றான் குறும்பாக 


அவள் பதில் கூறாமல் சிரித்தபடியே விலகி நடந்தாள்.


 'நீ எப்படியும் சம்மதிப்பாய் என்று எனக்குத் தெரியும் பேபி , என்றாலும் உன் வாய் வார்த்தையால் கேட்கவே நான் ஆசைப்படுறேன்' என்றான் தனக்குள்ளாகவே


தோழிகளிடம் எப்படி சொல்வது என்று யோசித்தாள் அவள்,  'தெரிந்தால் நம்மை படுத்தி எடுத்திடுவாங்களே, அதே சமயம், சொல்லாமலும் இருக்க முடியாதே என்று நினைத்தாள்.



கீர்த்தியை பார்த்து விட்ட மூவரும் விரைந்து சென்றனர். "ஏய் என்னாச்சுடி, ஏன் என்னவோ போல இருக்கிற? என்ன நடந்தது?" என படபடவென்று கேட்டாள் கலா


அவள் மெதுவாக நடந்த விசயங்களை தெளிவு படுத்தினாள்.


"ஓ மை காட்! ஆமா அவங்களுக்கு உன் மேலென்ன கோபம். எதனால இப்படி நடந்து கொண்டாங்க" என்றாள் கலா


"ஏய்! அது யாருன்னு தெரியுமாடி. நம்ம ஜீஎம் வினோதனை கல்யாணம் செய்துக்க போற பொண்ணு. அவங்க அண்ணியோட தங்கை ரொம்ப வசதியானவங்க. நம்ம ஜீஎம்மோட அழகையும், ஸ்டைலயும், வசதியையும் பார்த்து அவரை மயக்குறதுன்னு ஆபிஸ்கு வர்றா. ஆனால் அவரோட பார்வை அவள் பக்கம் போனதில்லை. அவங்க அண்ணனுக்காக மட்டும் தான் ஆபிஸ்ல விட்டு வச்சுருக்கார். இல்லை வெளியே துரத்திடுவார் வெரி ஹேன்சம் மேன்" என்று புகழ்ந்தாள் ராதா


" ஏன் அவள் கிட்ட என்ன குறை கண்டாராம் நம்ம ஜீஎம். நல்ல அழகு, படிப்பு, வசதி, உறவு முறை வேற இருக்கே" என்றாள் கலா மறுபடியும்

"அழகு, வசதி, உறவு முறை மட்டும் இருந்தால் போதுமா? மனசுக்கு பிடிக்க வேணாமா? அவங்க அண்ணன் விஸ்வா தங்கமான மனுசன். பெற்றவர் சொல் தட்டாம நடக்கிறவர். பெரிய வசதியான இடத்தில இருந்து வந்த சம்மந்தம் பொண்ணும் படிப்பு, குணம் நிறைந்தவ என்றதும் சம்மதிச்சுட்டார். ஆனால் படு பஜாரி. பிறகு எப்படி அவள் தங்கையை எடுக்க மனம் வரும் " என்றாள் ராதா


" அது சரி ஆனால் ஜீஎம்மோட பார்வை சதா கீர்த்தி மேல தான். ஒரு வேளை அதனால கூட அவள் இப்படி தன்னோட கோபத்தை காட்டி இருக்கலாம். கீர்த்தி எதற்கும் கவனமா இரு! " எச்சரித்தாள் கலா


இரவு தூக்கமற்று வெகுநேரம் இதையே நினைத்துக்கொண்டிருந்தவள்

அசந்து உறங்கிய போது மறு நாள் ஆகிவிட்டது.


காலையில் அவளது வாடிய முகத்தைப் பார்த்த தோழிகள் அறையிலே விட்டு சென்றனர். அவளைக் காணாத வினோதன் தோழிகளிடம் விசாரித்து விட்டு தேடிச் சென்றான்.


மெதுவாக எழுந்து மேல் கழுவி உடை மாற்றி அமர்ந்திருந்தவளை தன்னோடு அணைத்தான். அவளது உடல் நலத்தைப் பற்றி விசாரித்தான். வீட்டினரைப் பற்றி விசாரித்தான். அவளது திருமண விசயத்தை தெரிந்து கொண்டு தான் பார்த்துக் கொள்வதாக வாக்கு கொடுத்தான்.


மேலும் இரண்டு நாட்கள் கடந்த நிலையில், பணி நிமித்தம் காரணமாக நான்காவது மாடிக்கு சென்று வரும் போது விசைத் தூக்கி செயல்படாமல் நின்று விட்டது. கேட்டால் "மின்சாரம் போய்விட்டது" என்றான் அங்குள்ள வேலைக்கார சிறுவன். 


இவளோ 'அச்சச்சோ! இப்போது எப்படி கீழே போவது' என்று முழித்துக்கொண்டே படிக்கட்டு வழியாக போனால்  இன்றோடு என் கால் போச்சுது' என்று புலம்பியபடியே சென்றாள்.


 'ம்ம்னு போனால் கஷ்டமாக இருக்கும். ஏதாவது பாட்டு பாடிட்டே போனால் கஷ்டம் தெரியாது' என்ற நினைத்தபடியே


"துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ தள்ளி நின்றால் எந்தன் மனம் ஆறாதம்மா

துள்ளி துள்ளி நீ பாடம்மா சீதையம்மா

நீ தள்ளி நின்றால் எந்தன் மனம் ஆறாதம்மா

ஆஆஆஆஆ "


என்றபடியே கீழே பார்த்து துள்ளி துள்ளி ஓடிச்சென்று சுவரில் மோதிக் கொண்டாள். 'ஸ்ஸ்ஆஆ! படிக்கட்டுக்கு நேராக யாருமேன் சுவரைக் கட்டியது என் தலை போச்சு' நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டு நிமிர்ந்து பார்த்தாள்,


அங்கே அவன் அவளையே முறைத்துக்கொண்டு நின்றான். 


"ஏண்டி, என் மேல் வந்து மோதியதும் இல்லாமல், என்னை  சுவருன்னு திட்ட வேறு செய்றியா" என்றான் வினோதன்.


அவன் கண்ணில் வந்து போனது என்ன என்று தெரியவில்லை அவளுக்கு


"நானே கல்லுல ச்ச்சீசீ முட்டிட்டனேணு பீலிங்ஸ்ல இருக்கேன், நீங்க வேற இப்படி என்னைக் கிண்டல் பண்ணுறீங்களே " என்றாள் கோபமாக


"ஏய் வாயாடி! மேலே வந்து மோதி ஹார்ட் பீட்டை எகிற வச்சதும் இல்லாமல், இப்போது என்கிட்டயே வம்பு பண்ணுறியாடி. உன்னை..." என்றான் போலி கோபத்தோடு,


"என்னை... ஒண்ணும் பண்ண முடியாது. பேசாம போங்க சார். தெரியாம முட்டியதற்குப் போய் இவ்வளவு பீல் பண்ணுறீங்களே! எப்போதும் என்னோடு வம்பு பண்றதே வேலையா போச்சு. போய் வேலையை பாருங்கள் சார்" என்றாள் கிண்டலாக


அவளைப் பார்த்து குறும்பாக சிரித்தான்.


"என்னோட வேலையை தான் பார்த்துட்டு இருக்கேன்" அவளையே பார்த்தான்.


"இது தான் வேலை பார்க்குற அழகா" என்றபடி அழகாக உதட்டினை சுழித்தாள் கீர்த்தி.


சுழித்த உதட்டின் மீதான பார்வையை  திருப்ப முடியாமல் தவித்து, அவளை நோக்கி  சென்றான் வினோதன். அவனை தள்ளி விட்டு "போய்யா" என ஓடிவிட்டாள் கீர்த்தனா. 


அவளின் பேச்சை ரசித்த கீழே வந்தவன், பணியாளை அழைத்து சில கட்டளைகளை பிறப்பித்தான்.


மறுநாள் காலையில் அவளை தன்னுடைய அறைக்கு அழைத்து அவளுடைய முடிவைக் கேட்டான் வினோதன். "நம் திருமணம் நம் பெற்றோரின் சம்மதமுடன் நடக்க வேண்டும்னு ஆசைப்படுகிறேன்" என்றாள் ஜன்னலோடு வெளியே பார்த்துக் கொண்டே


அவ்வளவு தான் அடுத்த நிமிடம் அவனது இறுகிய அணைப்பில் இருந்தாள். அவனது மகிழ்ச்சிக்கு அளவில்லாது போனது, கோடி மலர்களால்  அர்ச்சிக்கப்பட்டவன் போல மகிழ்ந்த  மனதை அடக்க வழியறியாது தவித்து அவளை ஒரு வழி பண்ணிவிட்டான். அவனுக்கு இணங்கியளும் அவனது எல்லையில்லாத காதலில் மூழ்கித்தான் போனாள்.


அதற்கு பிற்கான நாட்கள், அலுவலகத்தில் அவளுடன் காதல் லீலைகளில் ஈடுபடுபவன், விடுமுறை நாட்களில் வெளியில் சுற்றுவது , கேலி பேசி சிரிப்பது என்று  மகிழ்ச்சியாக இருந்தான்.


இந்த நேரம் அவனது பிறந்த நாளும் வந்தது  ,அதற்கு முந்தைய நாள் அவளையும் அழைத்துச் சென்று அவள் மறுக்க மறுக்க கேட்காமல் பட்டுப்புடவை, நகை வாங்கிக் கொடுத்தான்.


"நாளை இதை அணிந்து என்னுடன் வரவேண்டும்" என்றான் அவளும் சம்மதமாக தலையசைத்தாள். இரவு நல்ல உறக்கத்தில் கால் பேசி வாழ்த்தையும் பெற்றுக் கொண்டான். தயாராக இருக்குமாறு கூறி அழைப்பை துண்டித்தான்.


காலையில் சென்ற வினோதன் அவளைப் பார்த்து அசந்து தான் போனான். பிறகு, கோவிலுக்கு  அழைத்துச் சென்றான். வழிபாட்டை முடித்து கிளம்பும் அவனது வீட்டிற்கு அழைத்துச் சென்றான்.


அவனது அம்மா, பாட்டி, தங்கைக்கு கீர்த்தனாவின் அழகு, அடக்கம் மிகவும் பிடித்திருந்தது.


"ரொம்ப அடக்கமாக இருக்கிறா. எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு" என்றார் பாட்டி


அவன் " அப்படியா அவளை போல வாயாடி, குறும்பு பண்றவளை நீங்க பார்த்திருக்கவே மாட்டீங்க" என சத்தமாக சிரித்தான்.


"அப்படி என்ன பண்ணினாங்க அண்ணா? ப்ளீஸ் ப்ளீஸ் சொல்லுங்களேன்" என்றாள் அவனது தங்கை


வினோதனைப் பார்த்து மறுப்பாக தலையசைத்தாள் கீர்த்தனா. அவனோ விடாமல் சிரித்தான்.


மெதுவாக எழுந்து பாட்டி பின்புறம் சென்று மறைந்து கொண்டாள் அவள்.


அவன் அன்று மிளகாயை வாயில் திணித்தது, தன்னிடமே சண்டையிட்டது, குரங்கு என்று கேலி பேசியது அனைத்தையும் சொல்லி சிரிக்க, வீட்டினர் அனைவரும் மனம் விட்டு சிரித்தனர்.


அவனை பொய்யாக முறைத்து உதட்டை சுளித்தவள் பாட்டியின் கையைப் பற்றிக் கொண்டாள்.


" அண்ணா, ரொம்ப நல்ல அண்ணியாக பார்த்து தான் கொண்டு வந்திருக்கீங்க. இனி நல்லா நேரம் போகும் எங்களுக்கு" என்றான் அவன் தம்பி


"ஆமாப்பா எங்களுக்கும் கீர்த்தியை ரொம்ப பிடிச்சிருக்கு. சீக்கிரம் நல்ல நாளாக பார்த்து கல்யாணத்தை முடிச்சுடலாம்" என்றார் அவனது தாயார் ராஜேஸ்வரி


"ஆமாம்மா. நானும் உங்க எல்லாரிடமும் கல்யாண விசயமா பேசணும் நினைச்சேன். அப்பா வரட்டும் ஈவ்னிங் பேசலாம்" என்று புன்னகையுடன் அவளைப் பார்த்து கண் சிமிட்டினான்.


அவனது தங்கை அவளை அழைத்துச் சென்று வீட்டை சுற்றி காட்டினாள். மாலை வரை பேசிவிட்டு கிளம்பினர்.


அவளது அறையில் இறக்கி விட்ட வினோதன், அவளை அணைத்து முத்தமிட்டு விடை பெற்றான்.



தோழிகளிடம் காதல் விவகாரத்தை ஏற்கனவே சொல்லிவிட்டதால் அவர்கள் கேலியோடு நிறுத்திக் கொண்டார்கள். ஆனால் இதையெல்லாம் அறிந்து கோபத்தில் வெகுண்ட நிவேதா இவர்களை பழிவாங்கிட எண்ணி தந்திரமாக யாரும் அறியாத வண்ணம் காயை நகர்த்தினாள்.


அதன்படி இருவரும் இணைந்திருந்த புகைப்படங்களை ஒரு கவரில் இட்டு கடிதம் எழுதி போஸ்ட் செய்தாள்.


இரண்டு நாட்கள் கடந்த நிலையில் வந்த தொலைபேசி அழைப்பை ஏற்றவள், பதறியபடி தோழிகளிடம் சொல்லிக்கொண்டு "வினோதனிடம் சொல்லிடுங்க" என்று ஊருக்கு கிளம்பிவிட்டாள்..கொஞ்சம் அவசரப்படாமல் இருந்திருக்கலாமோ ..


'தகப்பனுக்கு உடல்நிலை  சரியில்லை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்' என்ற செய்தியை அறிந்தால் யார் தான் பொறுமையாக இருப்பார்கள். வீட்டிற்கு அவசரமாக வந்தவளை, வாழைக் குலை நாட்டி பந்தலிட்டு அலங்காரம் செய்த வீடுதான் வரவேற்றது.


ஒரு கணம் அதிர்ந்த மனதை அடக்கியவள்' என்ன நடக்குது இங்கே..?? அப்படியே திரும்பி போய்விடுவோமா..' என்று யோசித்த கணம் அம்மா , அண்ணன்களால் வீட்டிற்குள் இழுத்துச் செல்லப்பட்டாள்.


"ஏண்டி! உன்னை வேலை பார்க்க அனுப்பி வைத்தோமா அல்லது மாப்பிள்ளை பார்க்க அனுப்பி வைத்தோமா, இப்படி ஊர் சுற்றுவதற்காகத்தான் நாங்கள் பார்க்கும் மாப்பிள்ளை வேண்டாம் சொன்னியா? நாங்க எல்லோரும் இறந்து விட்டோம்னு உனக்கு நீயே பார்த்துவிட்டாயா? மட்டும் தான் பார்த்தாயா அல்லது" என்று இழுத்து நிறுத்தினார் சித்தி


"சின்னம்மா" என்ற அவளது அதிர்ச்சியை கண்டு கொள்ளாதவர் அவளது இதயத்தை கூர்வாழால் குத்தினார்.   


"உனக்கு நான்கு நாட்களில் கல்யாணம். மாப்பிள்ளை பார்த்து எல்லாம் பேசி முடிச்சாச்சு. ஒழுங்காக வாயை மூடிக்கொண்டு அமைதியாக இரு. இல்லை என்றால் நடப்பதே வேறு" என்றான் அண்ணன் ராகவ் .


அவள் அப்பாவின் காலில் விழுந்து கதறியழுதாள். "வினோதனை என்னால் பிரிந்து வாழமுடியாது அப்பா, என்னுடைய வாழ்க்கையை அழித்து விடாதீர்கள். உங்களுடைய சொத்து சுகம் எதுவுமே எனக்கு வேண்டாம் அப்பா, வினோதனை விட்டுப்பிரித்து என்னுடைய வாழ்க்கையை அழித்து விடாதீர்கள் அப்பா" என்றாள் அழுகையோடு ,


கல்லும் கறைந்து விடுமே கன்னியவளின் கதறலையும் கண்ணீரையும் பார்த்து, ஆனால் பெற்றவரின் மனம் கலங்காதது ஏனோ ..? இது தான் விதியின் சதியா..?? அல்லது மனிதனின் மூடத்தனமா? காதல் என்ன அவ்வளவு பெரிய தெய்வ குற்றமா


அவளுடைய பேச்சினைக் கேட்காமல் அறையினுள் இழுத்து அடைத்தனர். "அப்பா அப்பா" என்று அழைத்தாள். அழுதாள், யாருக்குமே மனம் இரங்கவில்லை அழுது அழுது ஓய்ந்தவள் என்ன செய்ய என்று யோசித்து மொபைலை தேடினாள். காணவில்லை எடுத்து மறைத்து விட்டார்கள் போலும் அவனிடம் தெரிவிப்பது என்று கலங்கியவள் அவனை நினைத்துக் கலங்கினாள்.


"வினோனோ வாங்க வினோ, வந்து என்னை இவர்களிடமிருந்து காப்பாற்றுங்கள் வினோ" என்று அழுதாள்.


பெற்ற தாயவள் அவளை ஜனித்து விட்டு தீராத காய்ச்சலால் மரணமடைந்தாள். அதனால் கீர்த்தனைவை வளர்க்கும் பொறுப்பை அவளது அம்மாத்தா ஏற்றுக் கொண்டார். மனைவி இறந்து மூன்று வருடங்கள் முடிவதற்கு முன்பாக அவரது மறுமணம் நிகழ்ந்தது. முதலில் கீர்த்தனாவை பெற்ற மகள் போல பாசம் காட்டி வளர்த்தவர் தனக்கென்று மகள் பிறந்த பிறகு கொஞ்சம் கொஞ்சமாக மாறிவிட்டார். 


அண்ணன் ராகவ் வெளியிடத்தில் பணிபுரிவதாலும், அவனது பணத்திற்காகவும் அவனை எதுவும் சொல்லாத செல்வி அவனது தங்கையிடம் மட்டும் கடுமையை யாருமறியாமல் அவ்வப்போது காட்டுவது உண்டு. முதலில் தெரிய வில்லை. ஆனால் நாளாக நாளாக தெரிந்து கொண்டாள் கீர்த்தனா. அவரை விட்டு சற்று விலகி இருக்கவே செய்தாள். அனைவர் முன்பும் அவளிடம் பாசத்தைப் பொழிபவள் தனிமையில் வீட்டு வேலைகளை திணிப்பது, தன்னுடைய கோபத்தைக் காட்டுவது என்று இருந்தார்.


"என் அம்மா மட்டும் இப்போது உயிரோடு இருந்திருந்தால் எனக்கு இந்த நிலமை வருமா? அம்மா என்னை இவர்களிடமிருந்து காப்பாற்றுமா. என் வினோ ரொம்ப நல்லவருமா. என்னை கடைசி வரைக்கும் நல்ல மாதிரி பார்த்துக்கொள்வார்மா" என்று கதறியழுதாள். கண்ணீர் விட்டாள். உண்ணாமல் பட்டினி இருந்தாள். இருந்தும் யாரின் மனமும் மாறவில்லை.


மூன்று வேளையும் தவறாமல் உணவினை கொடுக்க வந்த தங்கையை பற்றிக் கொண்டு அழுதாள். "நான் இங்கிருந்து போகணும். எனக்கு உதவி செய், யாருக்கும் தெரியாமல் என்னுடைய மொபைலை எடுத்து வா. அவர்களுக்கு தான் என் மேல பாசமில்லை. உனக்கும் இல்லையா? உங்க அம்மாவிற்கும் என் மீதென்ன இத்தனை வெறுப்பு? என் தாயிருந்தால் இப்படி என்னைக் கதற விடுவாரா" என்று அழுதாள்.


தமக்கையின் அழுகையும், அவள் பேசிய வார்த்தைகளும் அவளது மனதை சுட்டது. எப்படியாவது அக்காவிற்கு உதவி செய்ய ஆசை கொண்டாள். ஆனால் எப்படி என்று தான் தெரியாமல் தவித்தாள்.


கைப்பேசி தாயாரிடம் இருந்தது. வீட்டு தொலைபேசியின் இயக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. இதில் எப்படி என்று தயங்கினாள்.


வினோதனின் எண்ணைக் கொடுத்தாள். எப்படியாவது வந்து அழைத்துச் செல்லும்படி கூறிட கேட்டுக்கொண்டு கையெடுத்து கும்பிட்டு அழுதாள். உடன் பிறக்காவிட்டாலும், அக்காவின் மீது உண்மையான பாசம் வைத்திருந்த தங்கை அனிஷா அவளை அணைத்து தட்டிக் கொடுத்தாள்.


பக்கத்து வீட்டிற்கு சென்று யாரும் அறியாமல் வினோதனுக்கு தொடர்பு கொள்ள முயன்றாள். ஏனோ அழைப்பு செல்ல வில்லை. தாயார் அழைக்கவே சென்றுவிட்டாள்.


 இரண்டு நாட்களாக சரியாக சாப்பிடாமல் வினோ வினோ என்று புலம்பிய படி கதவை தட்டிக் கொண்டிருந்தாள். அதனால் ஜூஸில் துக்க மாத்திரையை கலந்து கொடுத்து அவளது சத்தத்தை வரவிடாமல் செய்து விட்டார் சித்தியார்.


திருமணநாளில் பட்டு நகை பூ ஜடை அலங்காரத்தில் மாப்பிள்ளை அருகில் அமர்த்தினர். விழிகளில் வழிந்த நீருடன் எதுவும் செய்ய முடியாமல் ஜடமென அமர்ந்திருந்தாள் கீர்த்தனா.


முகூர்த்த நேரம் நெருங்கியது திருமாங்கல்யத்தை எடுத்து பெண்ணின் கழுத்தும் பூட்டும் நேரம் "நிறுத்துங்க" என்ற குரலில் அனைவரின் விழிகளும் அத்திசையை நோக்கியது. காவலருடன் தனது காவலனையும் கண்ட கன்னியவள், கலங்கியபடியே அவனருகே சென்று நின்று கொண்டாள்.


அவளைப் பார்த்து மென்மையாக சிரித்தான். தன் கையிலிருந்த திருமாங்கல்யத்தை சூட்டி அவளை தன்னுடையவளாக்கிக் கொண்டான். சலசலத்தவர்களையோ சத்தமிட்டவர்களையோ கருத்தில் கொள்ளாது ஒரு பார்சலை கொடுத்து அனுப்பி வைத்தான்.


தன்னறைக்கு சென்று உடையை மாற்றி, நகைகளை கழற்றியவள், அவன் கொண்டு வந்த புடவை, நகைகளையும் அணிந்து மற்ற நகைகளை  எல்லாவற்றையும் கையிலெடுத்தபடியாக வெளியே வந்தாள்.


அவளின் தோற்றத்தைப் பார்த்து திகைத்தவர்களை நோக்காமல், நேரடியாக தங்கையின் அருகில் சென்றாள். அவளது கரங்களை இறுகப் பற்றி எல்லா நகைகளையும் அதிலே வைத்தாள்.


"உன் திருமணத்திற்கு பயன்படுத்திக் கொள். இன்றிலிருந்து உங்களுக்கும் எனக்கும் எந்த தொடர்பும் இல்லை. நான் இருந்தாலும் இறந்தாலும் யாரும் வரக்கூடாது" என்றாள்.


" ஏய் நீ யாரு எதுக்காக இங்கே வந்து இப்படி கலாட்டா பண்ணுற? உனக்கு தான் ஏற்கனவே கல்யாணம் ஆகிடுச்சாமே? பிறகும் எதுக்கு எம் பொண்ணு கூட பழகி அவளோட வாழ்க்கையை அழிக்கப் பார்க்கிற?" என்றார் அவளது அப்பா கோபமாக


" என்ன சொல்றீங்க கல்யாணம் ஆகிடுச்சா? அப்படி யார் சொன்னது?" என்றான் புருவத்தை சுருக்கி கொண்டு


உடனே உள்ளே சென்று ஒரு கடிதத்தை எடுத்துச் சென்று நீட்டினார்.


" இங்கே பார், இதில் என்ன எழுதியிருக்குன்னு "


வாங்கி பிரித்து வாசித்த வினோதனுக்கு கோபம் கோபமாக வந்தது. வினோதனுக்கும், நிவேதாவிற்கும் ஏற்கனவே திருமணமாகி அவள் தாயின் வீட்டில் தங்கி படித்துக் கொண்டிருப்பதாகவும், அந்த நேரம் வந்த கீர்த்தனாவிடம் அவன் தவறான எண்ணத்துடன் பழகுபவதாகவும், இவளும் அவன் விருப்பத்திற்கு நடந்து கொள்வதாகவும், யாருக்கும் தெரியாமல் திருமணம் செய்து விட்டனர் என்றும் எழுதியிருந்தது.


அத்துடன் கோவிலில் வைத்து வழிபட்ட புகைப்படம், அவளை காரில் ஏற்றி சென்றது, அறையில் வைத்து பார்த்தது என அவர்களுடைய நெருக்கமான புகைப்படங்கள் நிறைய காணப்பட்டன.


வினோதனால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. இது அனைத்தும் அவளது வேலை என்பது புரிந்தது.







உடுத்த புடவையுடன் வினோதனுடன் சென்று விட்டாள். 


காவலருக்கு நன்றி கூறி அனுப்பியவன், அவளை அழைத்துக் கொண்டு பேசாமலே வீட்டை நோக்கி காரை செலுத்தினான். அவளோ ஏதேதோ எண்ணத்தில் கலங்கி போயிருந்தாள். அவளது கலக்கத்தை உணர்ந்தவன் காரை நிறுத்தி அணைத்து ஆறுதல் கூறினான், கேலி பேசி சிரிக்க வைத்தான்.


"நீங்க எப்படி சரியான நேரம் வந்தீங்க வினோ..??"


"வராமல் இருந்துவிடுவேன் என்று நினைத்தாயாடா..உனது மொபைலுக்கு கால் பண்ணினேன் சுவிட்ச் ஆப் என்று வந்தது.அதனால் நான் இங்கு வந்தேன். உன்னுடைய திருமண ஏற்பாடுகளைத் தெரிந்து கொண்டேன். அவர்கள் குறித்த அதே முகூர்த்தத்தில் நம் திருமணம் நடக்க வேண்டும் என்று முடிவு செய்து தெரிந்தவரிடம் பார்த்துக் கொள்ளும்படி கூறிவிட்டுச் சென்று விட்டேன்." என்றான்.


"வீட்டு முகவரி எப்படி தெரிந்தது..??"


"ஆபீஸ் பைலில் தேடி கண்டுபிடித்தேன்" என்றவன் சிரித்தபடியே காரை கிளப்பி வீட்டிற்க்கு அழைத்து வந்தான்.


வீட்டிற்கு வந்தவர்களை ஆரத்தி எடுத்து வரவேற்றார் அவனது அம்மா. பிறகு எல்லோரையும் அறிமுகப்படுத்திவிட்டு சிறிது நேர ஓய்வெடுக்க அனுப்பினர். பிறகு  அவனது பாட்டியார் குண்டை தூக்கி போட்டார் "ஜோதிடரை அழைத்து நல்ல நாள் பார்த்து தான் சாந்தி முகூர்த்தம் வைக்க வேண்டும் "என்று..


அவனோ "பாட்டி இதென்ன வம்பு , அதெல்லாம் நல்ல நாள் தான் நீங்கள் சும்மா இருங்கள்" என்றான் வேகமாக ,


அவரோ கேட்காமல் அதிலே குறியாக இருந்தார்.பெற்றோரும் சம்மதித்தனர். தம்பியும் தங்கையும் சிரித்தனர். அவளோ மௌனமாக அமர்ந்திருந்தாள். அவனோ பாட்டியை வார்த்தைகளால் அர்சித்தபடியே அமர்ந்திருந்தான்.


மாலை நேரம் ஜோதிடர் வந்தார் "இந்த வாரம் முடிந்தால் அடுத்து ஆடி பிறக்கப் போகிறது அதனால் ஆவணி மாதத்தில் நல்ல நாள் பார்த்து தருகிறேன்" என்றார்.


வினோதனோ "என்னதுது ஆவணியாயா" என்றான் சத்தமாக ,அவனது பேச்சைக் கேட்ட அனைவரும் சிரித்தனர். அவனோ" இங்கே மனுஷன் படுகிற பாடு உங்களுக்கு சிரிப்பாக தெரிகிறதா, கீர்த்தி நீ கிளம்பு ,நாம போகலாம்" என்றான் கோபமாக,


"எங்கடா போறீங்க" என்றார் பாட்டி.

"இங்கே இருந்தால் சரிப்படாது நாம் போகலாம் நீ கிளம்பு" என்றான் வேகமாக ,


"அவர்கள் நம் நல்லதுக்குதானே சொல்கிறார்கள் கேட்பேமே" என்றாள் கீர்த்தி. அவனோ அவளை முறைத்தான். 


"அது தான் பேத்தியே சொல்லியாச்சே !!! பிறகென்ன்ன? என்றவர் .ம்ம்ம் என்று யோசித்தவராக ஹாஹாம்ம் கீர்த்தி இன்றிலிருந்து என்னறையிலேயே தங்கட்டும் ,நான் பார்த்துக் கொள்கிறேன் " என்றார்.


அவனோ எதை எடுத்து மண்டையை உடைக்கலாம் என்ற ரீதியில் பார்த்துக் கொண்டிருக்க , பாட்டியோ அவனை பார்த்து " போடா" என்று கழுத்தை வெட்டியபடி கீர்த்தியை இழுத்து சென்றார்.


இரவு உணவிற்கு அனைவரும் அமர்ந்து பேசியபடி சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். முடிந்ததும் சிறிது நேரம் தொலைக்காட்சி பார்த்து விட்டு தூங்கப் போனார்கள். அவனோ கீர்த்தியை பார்த்தபடியே அமர்ந்திருந்தான். பாட்டியார் நமட்டுச் சிரிப்பொன்றை உதிர்த்தபடி அவளை அழைத்துச் சென்று கதவடைத்தார்.


'என் அறைக்கு அழைத்துச் சென்று கதவடைக்கச் முடியாமல், பாட்டி அறையில் அடைப்பதை பார்க்க வேண்டியதாக போச்சுதே 'என்று பெருமூச்சு விட்டபடி அவனறைக்குச் சென்றான். மறு நாளிலிருந்து அவளை அவனிருக்கும் இடத்திற்கு விடவில்லை. 


அவளை காணாத கோபத்தில் திட்டினான். சாப்பிடாமலே அலுவலகம் சென்றான்.மாலை நேரம் கழித்து வந்தான் .அம்மாவிற்கோ பாவமாக போனது .மாமியாரிடம் பேசினார், மகனது நிலையை கொஞ்சம் கருத்தில் கொள்ளும்படி கேட்டார்.அவரோ அமைதியாக இருந்தார் .


அவனோ கோபத்தை எல்லோரிடமும் காட்டினான். அவளை ஏக்கமாகவும் தாபமாகவும் நோக்கினான். பாவம் அவள் தான் என்ன செய்வாள்..


நிவேதா அன்று மாலை அக்காவுடன் வீட்டிற்கு வந்திருந்தாள். ஆம் அவர்கள் ஐந்து நாட்களாக இங்கு இல்லை , அதனால் அனைவரும் நிம்மதியுடன் இருந்தார்கள் இப்போதோ ..வந்துவிட்டது...


கீர்த்தனாவை பார்த்த நிவேதா கோவத்தால் குமுறிய மனதை அடக்கமுடியாமல் வார்த்தைகளை விஷமென கொட்டினாள். அதற்கு பதில் பேசாது நின்ற கீர்த்தியிடம்" உன்னை அவரிடமிருந்து நிரந்தரமாக பிரித்து காட்டுகிறேன் பார்" என்று சவால் விட்டாள்.


அவளது அக்காவோ "வீதியில் போற நாயை கொண்டு வந்து நடுவீட்டில் வைத்திருக்கிறார்கள்" என்று திட்டினாள்  கோபமாக ,


கீர்த்தியோ அழுதபடியே பாட்டி அறையில் படுத்திருந்தாள்.திடீரென தலை வருடிய கரத்தை பார்த்தபடி எழுந்து அமர்ந்தவள், பாட்டியை பார்த்ததும் அழுகையுடன் அவர் மடி சாய்ந்தாள்.

"கவலைப்படாதேமா, நான் பார்த்து கொள்கிறேன்" என்றார்."பேரனை விட்டு பிரித்து வைத்திருப்பதில் என் மீது கோபமா" என்று கேட்டார். அவளோ மறுப்பாக தலையசைத்தாள்.


"உங்க அப்பா வீட்டிற்கு உன்னைப் பற்றி தவறான தகவலைக் கொடுத்து, நீ யாருடனோ ஓடிப் போகபோகிறாய் என்று தொலைபேசியில் தெரிவித்ததால் தான் உடனடி திருமணத்திற்கு ஏற்பாடு செய்தார்கள். நான் தான் வினோத்தை அனுப்பிவைத்தேன்" என்றார் பாட்டி;


"ஆனால் ஏன்" என்றதற்கோ" அவளுக்கு இந்த வீட்டிற்கு மருமகளாக வர ஆசை, பணம் சொத்துக்காக என்ன வேண்டுமானாலும் செய்வார்கள் அக்காவும் தங்கையும். அவர்களிடமிருந்து உன்னை காத்திடவே என்னுடன் வைத்திருக்கிறேன்.நீ தனியாக இருந்தால் கஷ்டப்படுத்துவாங்க ,ஆனால் என்னுடைய அறைக்கு யாரும் வரமாட்டார்கள்" என்றார். அவளோ அவரின் கரம்பற்றி கண்ணீர் விட்டாள்..


"கவலைப் படாதே எல்லாம் சரியாகிவிடும் "

என்றார் ஆறுதலாக.


இரவு சாப்பாட்டின் போது அவளையும் அழைத்து வந்த பாட்டி உதவிட கூறினார்.மனையாளை நோக்கிய வினோத் தன்னருகே அழைத்தான். 


"அவள் நீங்கள் சாப்பிடுங்கள் நான் அத்தையுடன் பரிமாறுகிறேன்" என்றாள்.


அப்போது அங்கு வந்த நிவேதா ,அவனருகில் அமரப்போகவும் ,அவன் எழுந்து சென்றுவிட்டான். அனைவரும் சாப்பிட்டு முடித்து கிளம்ப நிவேதாவோ வார்த்தைகளை கொடூரமாக வீசி அவளை கலங்கடித்து ,ஏளனசிரிப்பொன்றை உதிர்த்தபடி அவளறைக்குள் சென்று நுழைந்து கதவை சாத்திக் கொண்டாள்.


இவற்றையெல்லாம் பார்த்துக் கொண்டிருந்த பாட்டி சாதம், பொறியல் ,குழம்பு நிரம்பிய பாத்திரத்தை கொடுத்து ,வாட்டர் பாட்டிலையும் அவளது கையில் திணித்து அவனறைக்கு அனுப்பிவைத்தார். கேள்வியாக நோக்கியவளிடம் "அவர்கள் உன் வாழ்க்கையை அழித்திட நானும் காரணமாக இருக்க விரும்பவில்லைமா , வினோத்தோடு இணைந்து நன்றாக இரு, மிகவும் விரைவில் பேரனோ பேத்தியோ பெற்றுக் கொடு " என்றார் தலையில் கரத்தை பதித்து ஆசிர்வதித்தபடி . 


பிறகு அவளது காதருகே வந்து கிசுகிசுத்து ரகசியம் பேசினார். மருமகளின் வெட்கத்தை பார்த்தபடி வந்த வினோத்தின் அம்மா குளிர் சாதனப் பெட்டியிலிருந்து மல்லிகை சரத்தை எடுத்து அவளுக்கு சூட்டி "சந்தோஷமாக இருங்க "என்று வாழ்த்தி அனுப்பினர்.


அவனறைக்கு சென்ற அவளைக் கண்டதும் இன்ப அதிர்ச்சியில் உறைந்து போனான், ஓடிச் சென்று கட்டித்தழுவி முத்தங்களால் அவளை திக்குமுக்காட செய்தான்.


அவள் சாப்பிட கூற அவனோ "எனக்கு அது வேண்டாம் நீதான் வேண்டும் "என்றபடியே விளக்கை அணைத்தான் பிறகு அவளையும் தான். மறுநாள் காலையிலே கீழே வந்தவள் மேலே செல்லவில்லை .அவளைத் தேடி அவனே கீழே வந்தான் .சமயலறையில் இருந்தவளை தழுவி தனது அறைக்கு அழைத்தான், அவளோமறுப்பாக தலையசைத்தாள்.


மனையாளிடம் கொஞ்சிக் கொண்டிருப்பதை உணர்ந்த பாட்டியும் அம்மாவும் காவலர்கள் ஆனார்கள் அவர்களுக்கு ,அவளின் மறுப்பை ஏற்காதவன், இதழில் இழைப்பாறியபோது வெளியே கேட்ட சத்தத்தில் மிரண்டவளை, அணைத்து சமாதானம் செய்து பாட்டியின் அறைக்கு அழைத்துச் சென்றான். 


சிறிது நேரத்திற்குப் பிறகு அலுவலகம் செல்ல கிளம்பி வந்தான் " லீவு போட்டு விட்டு வருகிறேன் ஹனிமூனுக்கு எங்காவது போய் வரலாமா கீர்த்தி " என்றான் கிறக்கமாக , 


"இப்போது வேண்டாம் ,பிறகு போகலாம் வினோ பிளீஸ்"என்றாள், 


அவனும் சிரித்து "விடுமுறை எடுக்க முடிந்தால் ,பார்த்து விட்டு வருகிறேன் "  என்று அணைத்து முத்தமிட்டு சென்றான்.


இதைப் பார்த்த படியே வந்த இருவரும் டைனிங் அறை நோக்கி வந்தனர். ரோஷினி திமிராக கீர்த்தனாவை திட்டி சாப்பாடு பரிமாறிட சொன்னாள். ஆனால் பாட்டி மறுத்து வேலைக்கார பெண்ணை அனுப்பினார். அவளின் வருகையை பார்த்த இருவரும் கீர்த்தியை திட்ட சிறிது நேரம் ஒரே கசமுசா ஆகிப்போனது. 


கீர்த்திக்கு சாப்பாட்டினை எடுத்துக் கொண்டு மாமியாரின் அறையினுள் கொண்டு வந்து கொடுத்தார் வினோதனின் அம்மா.


இந்த சில நாள் பழக்கத்தில் விஸ்வாவின் குழந்தை ஹாசினி கீர்த்தியிடம் நன்றாக ஒட்டிக் கொண்டது. அவள் பின்னே "ம்மா ம்மா" என்று சுற்றியது. அவளும் குழந்தையை தன்னுடனே வைத்துக் கொண்டாள்.


நிவேதா திட்டினாள், " வீட்டில் எல்லோரையும் மயக்கிட்டா..பாப்பாவையும் மயக்கி நம்மிடமிருந்து பிரிச்சுடுவா.. ஹாசினியை அவளிடம் கொடுக்காதே.. அவள் விரல் நுனி கூட இவள் மீது படக் கூடாது" என்றாள்.


ஆனால் ரோஷினியோ பதில் கூறாது எழுந்து சென்றாள். மறுபடியும் நிவேதா ஆரம்பிக்கவும்,

"ஹாசினியை அவள் பார்ப்பதில் உனக்கென்ன கஷ்டம் நிவே , நாம் இருவரும் பாதி நேரம் கிளப் ஹோட்டல் பார்ட்டி என்றடி வெளியிலே அலைகிறோம், பாப்பாவை பார்த்துக் கொள்வது பாட்டியும், அத்தையும் வேலைக்காரிகளும் தானே..

இவளையும் வேலைக்காரியாகவே நினைத்து விடுவோம்" என்றாள் சிரித்தபடியே. இருவரும் சத்தமாக பேசி சிரித்தபடியே வெளியே கிளம்பினர்.


அதைக் கேட்டபடியே வந்த பாட்டியும் அத்தையும் கீர்த்திக்கு ஆறுதல் கூறினர்.


மாலைவேளையில் பள்ளி ,கல்லூரி விட்டு வரும் மாலினி ,வினய் இருவரும் கீர்த்தியுடன் ஒட்டிக் கொண்டனர். விஸ்வாவின் குட்டிப் பொண்ணும் அவளுடனே சுற்றியது ,மாமனாருக்கு மகிழ்ச்சியாக இருந்தது "மகன் சரியான துணையை 

தான் தேர்ந்தெடுத்திருக்கிறான் "என்று 

சொல்லி மகிழ்ந்தார்.


விஷ்வா "அம்மா காப்பி தாங்கமா பசிக்குது" என்றபடி வந்தான்.  கீர்த்தி உடனே நெய் ஊற்றிய முறுவல் தோசை ,சாம்பார் ,சட்னி ரெடி செய்து கொடுத்தாள்.உடனே தங்கை தம்பியும் தங்களுக்கும் வேண்டும் என்றபடி அமர்ந்தனர். அவர்கள் சாப்பிட்டு முடிக்கவும், மாமனாரும் கணவனும் வந்தார்கள், அவர்களும் அப்படியே அமர்ந்துவிட ,எல்லோரும் திருப்தியாக சாப்பிட்ட உணர்வுடன் அறைக்குச் சென்றனர்.


பாட்டி அத்தை கீர்த்தி மூவரும் மதியம் செய்த சாதத்தினை சாப்பிட்டார்கள்.அனைவரும் அவரவர் அறைக்குச் சென்றார்கள்.


பாட்டியிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்த கீர்த்தியை மாலினி  "அண்ணி!!! சூப்பர் லவ் ஸ்டோரி வாங்கண்ணி பார்க்கலாம்

என்றழைத்தாள். இருவரும் சிரித்தபடியே

பார்த்துக் கொண்டிருக்க ,பத்து மணியளவில் அத்தை பாலும் பழமும் கொடுத்து கீர்த்தியை மகனின் அறைக்கு அனுப்பியவர் ,மகளையும் உறங்க அனுப்பினார். 


மேலே வந்த கீர்த்தி கணவனுக்கு கொடுத்துவிட்டு கையணைப்பிலே இருந்தாள்."கொஞ்சம் வேலையிருக்கு முடிச்சிட்டு வரேன்" என்று கண்ணடித்தான். அவளும் சிரித்தபடியே அமர்ந்திருந்தாள்.


"என்னடா பேபி !!! தூக்கம் வந்துவிட்டதா.."என்றபடியே அவளை கைவளைவுக்குள் கொண்டுவர, அவனது மார்போடு ஒன்றியவளோ ஆமென்றும் இல்லையென்றும் இருபுறமாக தலை அசைத்தாள்.


அவனோ சிரித்தபடியே அவளது தலையை ஆதுரமாக தடவிக் கொடுத்தான்.

"உன்னை முதல் முதலாக பார்த்தே, அன்றே நீ என்னை ரொம்ப பாதிச்சுட்ட பேபி, உன்னுடைய குறும்புத்தனம் பாட்டு சிரிப்பு எல்லாமே எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்சிருந்தது. புடவையில் அன்று சிரித்தபடியே நின்றாயே அத்தோடு நான் அப்படியே மொத்தமாக விழுந்துவிட்டேன். தினமும் உன்னை நினைத்து நினைத்து பார்ப்பேன் பேபி ..என் நெஞ்சு முழுவதும் உன்னைத்தான் நிரப்பி வச்சிருக்கேன் "என்றபடியே சிறிது நேரம் காதலுடன் அவளது இதழில் இழைப்பாறினான்.

அவளோ இழைந்தபடியே அவனுடன் இருந்தாள்.


பேபி!!!  நீ ஹேப்பியாக இருக்கியாடா..வீட்டில் எல்லோரையும் உனக்குப் பிடிச்சிருக்கா..உனக்கு பிடிக்காதது போன்று ஒன்றும் நடக்கவில்லையே 


"ஏன் அப்படி கேட்குறீங்க..நிஜமாகவே நான் நல்லா சந்தோஷமாகத்தான் இருக்கிறேன்"என்றாள்.


"நிவேதா உன்னைக் கஷ்டப் படுத்துறாளாடா.. என்கிட்ட மறைக்காமல் சொல்லு" என்றான்


அவள் மறுத்து தலையசைக்கவும் , அவன்  "என்கிட்டயே பொய் சொல்லுறியா..

உன்னை என்ன செய்கிறேன் பார் "என்றபடியே அவளது இதழ்களை கடிக்க அந்த சுகத்தில் ஆழ்ந்தவளோ அவனை இறுக்க ,அங்கே அழகானதொரு கூடல் தொடர்ந்தது.


இப்படியே அவர்களது வாழ்க்கை சந்தோஷமாக சென்று பதினைந்து நாட்கள் கடந்திருக்கும் ,   இவர்களின் நிம்மதியை சந்தோஷமான வாழ்க்கையை உடைத்திட நினைத்து, யாரோ கீர்த்தி வேரொருவருடன் இருப்பது போன்ற புகைப்படத்தை அவளது கணவன் வீட்டிற்க்கு  அனுப்பினர், அதைக் கண்டு அவள் "நானில்லை நானில்லை" என்று கதறி அழுதாள். 


'வீட்டார் முன்பு இப்படி அசிங்கப் படுத்திவிட்டார்களே' என்று எண்ணி அழுதவள் கணவனை கண்டதும் விரைந்தோடி காலில் விழுந்து அழுதாள் "நான் தப்பு செய்யலை வினோ.. யாரோ !!! வேண்டுமென்றே இப்படி பண்ணிட்டாங்க.. வினோ என்னை நம்புங்க வினோ" " என்றாள் கதறியபடி ,


" ஏண்டி !!! இந்த விஷயத்தை முன்னாடியே என்னிடம் சொல்லவில்லை ...?? என் மீது அவ்வளவு தானா உனது நம்பிக்கை.. இப்படி அவமானப்படும்படி செய்துவிட்டாயே ..என் முகத்தில் விழிக்காதே போ போடீ" என்றான் கோபமாக..அவளோ திகைத்து மறுவார்த்தை கூறாமல் வெளியேறிவிட்டாள்.


அவளை வெளியேற்றிய அக்காவும் தங்கையும் மகிழ்ச்சியை கொண்டாடிட எண்ணி ஸ்டார் ஹோட்டலுக்குச் விரைந்தனர். என்னவென்று உணராமலே கண்டதையும் சாப்பிட்டு மயங்கி விழுந்தனர்..மறுநாள் விழித்த போதோ நேற்று என்ன நடந்தது என்பதை அறியாதவர்களாக திகைத்தனர்.


ஆடைகளின்றி ஹோட்டலின் அறையில் இருப்பதை உணர்ந்தவர்கள், தாங்கள் சீரழிக்கப்பட்டதை தாமதமாகவே உணர்ந்தனர். "அரசன் அன்று கொல்வான் ,தெய்வம் நின்று கொல்லும் "என்ற பழமொழிக்கேற்ப வீண்பழியிட்டு கீர்த்தி வாழ்வை அழித்தனர். ஆனால் இப்போதோ அவர்களின் வாழ்வே கேள்விக்குறியாகி போனது….


வீட்டிலிருந்து கிளம்பிய கீர்த்தி வெகு தூரம் நடந்து கொண்டே இருந்தாள் ,எங்கு போகிறாள் என்றால் தெரியாது ,கணவன் தன்னை நம்பவில்லையோ என்ற ஏக்கத்திலே சென்றவள் எதிரில் வந்த காரால் இடித்து  துக்கி எறியப்பட்டாள்..


கீர்த்தியை திட்டிய வினோத்தை பாட்டி 

அறைந்தார் , "நீயெல்லாம் காதலித்து திருமணம் புரிந்தவனாடா ..சொல்... உன் மனைவி மீது பழி போட்டு இந்த நிலைக்கு ஆளாக்கியவனை அடித்து நொறுக்குவதை விட்டு அவளை ஏன் வெளியே போகச் சொய்தாய் ..யாரிடம் கேட்டு அப்படி சொன்னாய்..காதலிக்கும் போது அலைவதும் கிடைத்துவிட்டால் அதை அலட்சியப்படுத்துவதுமே ஆண்களுக்கு வழக்கமாக போய்விட்டது "என்று குமுறியவர் , வீட்டில் அக்காவும் தங்கையும் நடந்து கொண்டமுறைகளை ஆரம்பத்திலிருந்தே விளக்கியவர், இதுவும் அவர்களின் திட்டமாகவே இருக்கும் என்றார். "இந்த வீட்டில் என்றாவது நாம் எல்லோரும் நிம்மதியாக ,மகிழ்ச்சியாக இருந்திருக்கிறோமா... நீயும் பார்த்துக் கொண்டு தானே இருக்கிறாய் சொல்லேண்டா...


எப்போது சண்டை வருமோ சத்தம் வருமோ என்று நிம்மதியற்றல்லவா இருந்தோம் .உனக்கு வருபவளாவது நல்ல அடக்கமாக, குடும்பத்திற்கு ஏற்றவளாக இருக்க வேண்டுமே என்று ,நானும் உன் அம்மாவும் வேண்டாத தெய்வம் இல்லை தெரியுமா , கீர்த்தி வந்து கொஞ்சம் நாட்களே ஆனாலும் எங்கள் எல்லோருடைய மனதிலும் இடம்பிடித்துவிட்டாள். கீர்த்தி கடைசி வரையிலும் இதே வீட்டில் தான் இருக்க வேண்டும். கீர்த்தி இல்லாத வீட்டில் நானும் இருக்க மாட்டேன் "என்றார் கோபமாக


"அண்ணி பாவம், ரொம்ப நல்லவங்க அவங்க தப்பு செய்யலை.அன்றைக்கு நான் குளித்துக் முடித்து உடைமாற்றிக் கொண்டிருந்தேன் அப்போது வந்த அண்ணியுடைய தம்பி எங்கிட்ட தவறாக நடந்து கொள்ளப் பார்த்தார். நான் பயந்து போய் கத்தினேன் .அப்போது என் குரல்கேட்டு ஓடிவந்த அண்ணி அவனை ஆவேசமாக அடித்து வெளியேற்றினார்.  இனிமேல் இந்த வீட்டுப்பக்கம் வரக்கூடாது என்று சொன்னார்கள் ,அவன் தான் இப்படி செய்திருப்பான்.அந்த போட்டோவில் இருந்தது நான் தான்.ஆனால் அண்ணியை பழிவாங்கிட இப்படி செய்து விட்டார்கள். எனக்கு அண்ணி வேணும் "என்று அழுதாள்..


"வீட்டிற்காக பார்த்து பார்த்து செய்தவளை இப்படி வாத்தைதை வீசி கொன்று விட்டாயே போ..போடா இன்னும் என்ன தயக்கம் அவள் தவறான முடிவெடுக்கும் முன்பு நீயாக சென்று அழைத்து வாடா "என்றார் தகப்பனார்.


நேராக அண்ணனிடம் சென்றவன் "உன் மனைவியின் குடும்பத்தால் நான் படுகின்ற கஷ்டத்தை ,அவமானத்தை பார்த்தாயா..இனிமேல் அவர்கள் இந்த பங்களாவிற்குள் காலெடுத்து வைக்கக் கூடாது. உனக்கு வேண்டுமானால் நீயும் போய்விடு ..இந்த வீட்டுப் பிள்ளையாக இருப்பதென்றால் மட்டுமே இரு ….இதற்கு மேல் உன் விருப்பம் "என்றவன் பாட்டியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டான்.


 "எங்கிருந்தாலும் அவளை நான் கட்டாயம் அழைத்து வருவேன்...என்னை மன்னித்து விடுங்க பாட்டி "என்று கண்ணீரை துடைத்தெறிந்து கிளம்பவும் தொலைபேசியின் ஓசை கேட்கவும் சரியாக இருந்தது.


வினய் "ஹலோ ..அப்படியா..எந்த ஆஸ்பிட்டல். இதோ இப்போதே கிளம்புகிறோம்...ஆஆங் சொல்லிடுறேன் "என்று வைத்தவன் அப்பாவிடம் சென்று "அண்ணிக்கு ஆக்ஸிடண்ட் ஆகிவிட்டதாம். மீனா மருத்துவமனையில் அட்மிட் பண்ணியிருக்கிறார்களாம் வாங்கப்பா போகலாம்" என்றான்.


அதைக்கேட்டு" நோநோநோ" என்று அலறிய வினோ கீர்த்தீ என்று சத்தமிட்டபடியே ஓடினான். அனைவரும் காரில் விரைந்து சென்றனர். அவளுக்கு எதுவும் ஆகக்கூடாதென்று வேண்டிக் கொண்டனர்.


மருத்துவமனை வந்தவர்கள் ரிசப்சனை நெருங்கி விபரம் அறிந்து ஐசியூனிட் நோக்கி விரைந்திட " "ஐயோ போய்ட்டாளே..நம்மையெல்லாம் விட்டு போய்ட்டாளே" என்ற கதறலில் அப்பாடியே செய்வதறியாது நின்றவனை தகப்பனும் தமையனும் அணைத்து ஆறுதல் கூறினர்.


 "அது வேறு யாராவது இருக்கும் ,கீர்த்தனாவிற்கு ஒன்றும் ஆகாது பயப்படாதே வா" என்று அழைத்துச் சென்றனர். 


வினோதனின் நிலையோ ரொம்ப மோசம் "கீர்த்திமா என்னை மன்னித்துவிடுடி..என்னை விட்டுப் போயிடாதடி..நீ இல்லாமல் என்னால் வாழமுடியாதுடி ..பிறகு நானும் உன் கூடவே வந்துவிடுவேன்டி "என்று அழுதான்.


டாக்டர் அறைக்குச் சென்று பேசிவந்தனர் . "அவரோ நோயாளிக்கு ஒன்றும் இல்லை ,லேசான அடிதான் பயப்பட ஒன்றுமில்லை. கார் இடித்த வேகத்தில் பக்கத்தில் இருந்த வைக்கோல் போர் மீது விழுந்துருக்காங்க. அதனால் வெளிக்காயம் அதிகமில்லை. உள் காயத்திற்கு மருந்து கொடுத்திருக்கிறேன் ,ஏதோ மன உளைச்சல் போன்றுத் தெரிகிறது. வினோ வினோணு சொல்லிகொண்டெ இருக்காங்க. இதில் யாரு வினோ" என்று கேட்டார். அவன் முன் வந்தான் டாக்டர் அவன் தோளைத்தட்டி "பயப்பட ஒன்றுமில்லை இப்போது தூங்கி கொண்டிருக்காங்க , காலையில் வந்து பாருங்கள் இப்போது எல்லோரும் வீட்டுக்கு போங்கள் , நிறைய பேர் இங்கே நிற்கக்கூடாது" என்றார். 


"உங்கள் மனைவியை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள் பாய் " என்றபடி விலகி நடந்தார்.


பாட்டியும் அண்ணனும் தம்பியும் மட்டும் தங்கினர்.மீதி எல்லோரும் அவளை ஒருமுறை பார்த்தபடி விலகினர். இரவெல்லாம் தூக்கமின்றி தவித்தான். 


மறுநாள் காலையில் நர்ஸ் அவள் விழித்து விட்டதாக  டாக்டருக்கு தகவல் தெரிவிக்க, அவரும் சோதித்து பார்த்து விட்டு அனைவரையும் பார்க்க அனுமதியளித்தார்.


எல்லோரும் காலையிலே வந்து விட்டார்கள். அனைவரையும்  பார்த்து கண்கலங்கியவள் யாரிடமும் பேசவில்லை.கணவனை நிமிர்ந்து பார்க்காமலே கண்ணீர் வடித்தாள்.


பாட்டி காலையிலே கோவிலுக்கு போய் வந்து விபூதியை பூசிவிட்டார்.


அவனோ அவளருகில் சென்று கைபற்றினான். அவளின் அழுகை அணை உடைக்க அவனைத் தவிர அனைவரும் வெளியேறினர்."என்னை மன்னிச்சிருடி" என்றான்.


அவளோ "என்னை நம்பவில்லையே நீங்கள்" என்றாள் விழிகளில் வழிந்த  நீரோடு.


அவனோ "உன்னை நம்பாமல் தான் இப்படி பக்கத்தில் அமர்ந்து பேசிக் கொண்டிருக்கின்றேனா.. என் மனைவிக்கு

ஒரு கஷ்டம் என்றால் என்னிடம் தானே முதலில் சொல்ல வேண்டும், நீ சொல்லவில்லையே  என்ற ஆதங்கம் மட்டும் தான் எனக்கு இருந்தது ,உன்னை சந்தேகப்படுவேனாடி ,என்ன நடந்ததென்று 

சொல்"என்றான் .அவள் மாலினி சொன்னதையே சொன்னாள்.


"நீங்கள் நிஜமாகவே என்னை சந்தேகப்படவில்லையே"..


"என் உயிரின் சரிபாதியை எப்படியடி சந்தேகப்படவோ..வெறுக்கவோ என்னால் முடியும்  உனக்கு விபத்து நடந்ததை கேள்விபட்டு எப்படி துடித்து போய்விட்டேன் தெரியுமா.. நீ ஏண்டி வெளியே போன ..உன்னைத் திட்ட எனக்கு உரிமையில்லையா..??."என்றான்.


"உங்களுக்கு இல்லாத உரிமையா...

நிஜமாகவே என் மீது சந்தேகம் இல்லையா..

பிறகு   ஏன் அப்படி.".. ..


"நான் எதையும் நம்பவில்லையடி "என்றவன் இவளுக்கு எப்படி சொல்லி புரிய வைப்பது என்ற யோசனையோடு ,சதா உளறிக் கொண்டிருப்பதை நிறுத்தும் பொருட்டு அவளது இதழைப் பூட்டினான். அச்சுகத்தில் மயங்கிய அவளும் அவனை இறுக தழுவிக்கொண்டாள் ,அவனும் அவளை அப்படியே தன்னுள் புதைத்தான்.


அனைவரிடமும் பேசி முடித்த பின் டாக்டரை பார்த்து பேசி அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.


மாலை வேளையில் வந்த அக்காள் தங்கையை வாசலில் நிறுத்திய விஸ்வா ரோஷினியை அறைந்தான் .யாரும் எதுவும் சொல்லவில்லை, மறுடியும் அறைந்தான்.


நிவேதா கத்தினாள்.. "ஏன் !!! என் அக்காவை அடிக்கிறாய் ..உனக்கு பைத்தியமா பிடிச்சிருக்கு ..வீதியில் போக வேண்டியவளை வீட்டிற்குள் விட்டு விட்டு ,வீட்டிற்குள் போகவேண்டியவளை வீதியில் நிறுத்துகிறீர்கள் நீங்களெல்லாம் ஆண்பிள்ளையா"..என்றாள் கோபமாக


அடுத்தகணமே பளார் என்று விழுந்த அறையை  கொடுத்தவன் வினோதன். அவளது கூந்தலை பற்றியிழுத்து சாலையில் தள்ளினான்." இத்தோடு நிறுத்திக் கொள் ,மீண்டும் ஒரு முறை இந்த வீட்டு வாசல் படியை மிதித்தாயானால் கொன்று தூக்கி நாய்க்கு போட்டுவிடுவேன் ஜாக்கிரதை" என்றான் உறுமலாக


விஸ்வா ரோஷினி அருகில் சென்று தான் கட்டிய தாலியை இழுத்து அறுத்து எறிந்தான்.

"உனக்கும் எனக்கும் சம்மந்தமில்லை ..

நீயாரோ நான் யாரோ..

என் மகள் என்னுடனே இருப்பாள்..

உன்னைப் போன்ற ரௌடியுடன் இருக்க மாட்டாள்.அவள் அம்மா இறந்து போய்விட்டாள்" என்றபடி வெளியே தள்ளி கேட்டை தாழிட்டபடியே "வாட்ச்மேன் இவங்க குடும்பமே இனிமேல் பங்களாவுக்குள் காலெடுத்து வைக்கக் கூடாது ஜாக்கிரதை" என்றான் சத்தமாக..


பிறகு தனது குடும்பத்தினரை நோக்கி "எல்லோரும் என்னை மன்னிச்சிடுங்க. என்னால் நீங்கள் எல்லோரும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டத்திற்கு  நானே முழு விடுதலையும் சந்தோஷத்தையும் தருகிறேன் "என்றான்.


மாலினியிடம் சென்றவன் தங்கையை அணைத்து ஆறுதல் கூறினான். கீர்த்தியிடமும் மன்னிப்பை வேண்டினான் 


அவளோ " ஐயோ !!! அத்தான் நான் என்ன உங்களை மன்னிப்பது ,நீங்களல்லவா என்னை மன்னிக்க வேண்டும் ,என்னால் உங்கள் வாழ்க்கை அநியாயமாக வீணாகப் போய்விட்டதே" .என்று

கண்கலங்கினாள்.


ஆனால் அவனோ"அவளது தவறை முதலிலே திருத்தாமல் விட்டுவிட்டேன் ,அதுதான் நான் செய்த தவறு ,அப்போதே அவளை அடக்கியிருந்தால் இவ்வளவு பெருசாக வந்திருக்காது, 

போகட்டும் ,இனியாவது எல்லோரும் பழைய

நிகழ்வுகளை மறந்து சந்தோஷமாக 

இருப்போம் "என்றான் புன்னகையோடு.


"அப்படியே ஆகட்டும் சார் ..தங்கள் சித்தம் எங்கள் பாக்கியம் ..குரு எவ்வழியோ தொண்டர்களும் அவ்வழியே சார் "என்றாள் குறும்பாக ,


"சரியான வாயாடி !!! "என்றான் அவளை பார்த்தபடியே அம்மாவின் தோளிலும் பாட்டியின் தோளிலும் கைபோட்டு அணைத்தபடி,


"என்னையா வாயாடி சொன்னீங்க ,இப்போதே சென்று காப்பியில் உப்பு போட்டு எடுத்து வருகிறேன்" என்றாள் கிண்டலாக…


"ஐயோ !!! தீர்ந்தேன், அடேய் !!! தம்பி என்னை காப்பாற்றுடா "என்றான் விஸ்வா அஞ்சுவது போன்று நடித்து ,


அனைவரும் இவர்களின் உரையாடலைக்  கேட்டு நிம்மதியாக சந்தோஷமாக  சிரித்தனர்.


"அத்தானுக்கும் கொளுந்தியாளுக்கும் இடையே நடக்கும் யுத்தத்தில் நான் கலந்து கொள்வதாக இல்லை "என்ற வினோதனோ மனைவியை இறுக

அணைத்துக் கொண்டான்


"டேய் !!! தம்பி, இது பப்ளிக் பப்ளிக் " என்றான் விஸ்வா கண்ணடித்து ,ஹாஹாஹாஹாஹா எல்லோரும் ரசித்து சிரித்தார்கள்.


அப்போது தூங்கி முழித்த விஸ்வாவின் குழந்தை எல்லோரையும் ஒருமுறை பார்த்து சிரித்தபடியே கீர்த்தியிடம் சாடியது


"அம்மா அம்மா "    இதுவும்   


என்று செல்லம் கொஞ்சியது எல்லோருக்கும் பாவமாக இருந்தது. குழந்தை ஹாசினியை ஏற்கனவே பாட்டியும் அத்தையும் தான் பார்த்திருந்தனர். அதனால் அவள் அம்மாவை தேடவில்லை.


புகைப்படம் அனுப்பியவனை அடித்து நொறுக்கி வினோதனும் ,விஸ்வாவும் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். அப்போது அதில் பார்த்த சில புகைப்படங்ஙள் மனதை தாக்கியது அதில் நிவேதாவும் ரோஷினியும் இருந்தார்கள். அந்த புகைப்படத்தை மட்டும் தனியாக எடுத்த வினோத் மீதி அனைத்தையும் இன்ஸ்பெக்டரான அவனது தோழன் ராமிடம் கொடுத்து "இவனை நன்றாக கவனித்து யாரெல்லாம் கூட்டாளிகளாக இருக்கிறார்கள் என்று அவர்களையும் கண்டுபிடி. தேவைப்பட்டால் அழை நான் வருகிறேன்" என்றவன் தனது அண்ணனையும் உடன் அழைத்து காரில் ஏறினான்.


சாலையின் ஓரத்தில் காரை நிறுத்தியவன் விஸ்வாவின் கரத்தைப் பற்றி அழுத்தினான்.  அவனோ" விடுடா பார்த்துக் கொள்ளலாம்" என்றபடி பெருமூச்சினை வெளியேற்றினான்.


அண்ணன் விரும்பிய பெண்ணை திருமணம் செய்து கொள்ளவில்லை. வசதியான இடத்தில் தகப்பனார் முடித்த வரனையே அவனும் மறுக்காமல் சம்மதித்து, மணந்து இத்தனை வருடம் கஷ்டப்பட்டுவிட்டான் . அவனுக்கென்று எதையும் இதுவரை எதிர்பார்க்கவும் இல்லை. இனி அண்ணனின் எதிர்காலம் என்னாவது..??கொஞ்சம் நாட்கள் கழியட்டும் அண்ணன் விரும்பிய பெண்ணையே திருமணம் செய்து வைக்க வேண்டும் என்று நினைத்தபடி காரை கிளப்பி வீட்டிற்கு வந்தான்.


மேலும் இரண்டு வாரங்கள் சென்ற நிலையில்  வினோத்தின் பெற்றோருக்கு திருமண நாள் வந்தது..அதை நன்றாக கொண்டாடும் பொருட்டு அனைவருக்கும் புத்தாடை எடுப்பது, பரிசுப் பொருட்கள் வாங்குவதென நேரம் பறந்தோடியது...


விஷ்வாவை பார்க்க வந்த ரோஷினி மன்னிப்பு கேட்டு கதறினாள் ,ஆனால் அவனோ சிறிதும் மனமிரங்கவில்லை. "உன்னால் நானும் என் குடும்பமும் இவ்வளவு நாள் பட்ட கஷ்டம் போதும் எங்களை இனிமேலாவது நிம்மதியாக இருக்கவிடு.வேறு யாரையாவது மணந்து கொண்டு சந்தோஷமாக இரு ,

நான்  உன்னை  என்னுடைய வாழ்க்கை என்னும் புத்தகத்திலிருந்த  அழிந்து போன அத்தியாயமாக எண்ணி நீக்கி விட்டேன் , உன்னால் மறுபடியும் என் வாழ்க்கையில் நுழைய முடியாது " என்று போய்விட்டான்.


செய்வதறியாது திகைத்தவளோ அப்படியே சமைந்து அமர்ந்து வெகுநேரம் அழுதபடியே போய்விட்டாள்..


காலையில்  எழுந்தவுடன் எல்லோரும்  அத்தை மாமாவிற்கு வாழ்த்து தெரிவித்தனர்.பிறகு அனைவரும் தயாராகி கோவிலுக்கு கிளம்பினார்கள். சுவாமி தரிசனம் முடித்து சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தனர்.பிறகு வீட்டிற்கு வந்து வேறு வேறு வேலைகளை கவனிக்க ஆரம்பித்தனர்.


"என்னங்க !!! கலா, ராதா ,அமுதா மூன்று பேரையும் பார்க்க  ரொம்ப ஆசையாக இருக்கிறதுங்க ,நம் வீட்டிற்க்கு வரச்சொல்றீங்களா."என்றாள் தோழிகளின் நினைவில், .அவனோ சரி என்று தலையசைத்தான்.


" இப்போதும் அங்கே தானே ஒர்க் பண்ணுறாங்க" என்று கேட்டாள் கீர்த்தி ,அவனும் சிரித்தபடியே "ஆமா கீர்த்தி அங்கே தான் இருக்காங்க., அவர்களுக்கும் உன்னைப் பார்க்க ஆசையாகத் தான் இருக்கிறதாம் ,என்கிட்ட சொன்னாங்க ,நான் அப்பா அம்மா மேரேஜ் டேகு கண்டிப்பாக வரும்படி அழைத்திருக்கிறேன்" என்றான்.


"என்கிட்ட சொல்லலியே நீங்க "என்றாள் வருத்தமாக


, "ஹே பேபி !!!  என்னடா இது இப்படி பீல் பண்ணுற ,உனக்கு சர்பிரைஸா இருக்கட்டுமே, என்று தாண்டா சொல்லவில்லை, மற்றபடி மறைக்கணும் என்ற எண்ணம் எனக்கு எப்போதுமே  இருந்ததில்லைடா சாரிடா பேபி "என்றான் மென்மையாக,


அவனை முறைத்து அன்பால் அடக்கியவள், அவன்மீதான அன்பில் அதிசயித்து தான் போனாள். "ஏங்க என்னை பிடிச்சுது..??  அப்படி என்கிட்ட மட்டும் என்ன ஸ்பெஷல்  இருக்குது " என்றாள் கழுத்தை சுற்றி கரங்களால் வளைத்தபடி,


 அவனோ அவளை இடையை இறுக தழுவியபடி "பிடிக்காததற்கு நிறைய காரணம் தேடி கண்டுபிடிக்கலாம்டா , ஆனால்  பிடிக்கிறதற்கு காரணமே இல்லைடா, உன்னை எனக்கு ரொம்ப ரொம்ப புடிக்குது ,புடிச்சிருக்குது, புடிக்கும்... 

பேபி ஐலவ்யூடா..லவ்யூ ஸோமச்" என்றபடி அணைத்துக் கொண்டான். பேதையவளும் அவனது அன்பில் கரைந்து தான் போனாள்.


மாலையில் பார்ட்டி தயாரானது சில முக்கியமான நட்புக்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தனர். எல்லோரும் வந்தவுடன் தம்பதிகளை அதற்கான மேடையில் நிற்கச் செய்து  ,மாலை மாற்றிடச் செய்து கேக் வெட்டச் சொன்னார்கள். அனைவருக்கும் இனிப்புகள் ஜூஸ் வழங்கப்பட்டது.


அப்போது அங்கு வந்த தோழிகளை அணைத்து நலம் விசாரித்தாள், வீட்டில் உள்ள அனைவரிடமும் அறிமுகப்படுத்தினாள்.


அப்போது வினய் பெற்றோரை வாழ்த்தி பேசி எல்லோருக்கும் நன்றி சொன்னவன் கீர்த்தியை பார்த்து  குறும்பாய் சிரித்தபடியே" பங்ஷன் ரொம்ப நல்லா இருக்கின்றது , பட் ஒரே ஒரு குறை , அது யாராவது  ஒருவர் பாட்டுப் பாடி நம்மை மகிழ்வித்தால் இன்னும் நன்றாக இருக்கும் " என்றான்.


கீர்த்தியோ 'நம்மை பார்த்து ஏன் ஒரு மாதிரி சிரிக்கிறான், இது சரியில்லையே' என்று நினைத்தபடியே அவர்களின் பேச்சை கவனித்தாள்.


வினயின் பேச்சைக் கேட்ட  மாலினி" நான் பாடுகிறேன்" என்றாள்.


"ஏன் நாங்கள் நன்றாக இருப்பது உனக்குப் பிடிக்கவில்லையா" என்றான் கேலியாக ,


""ஏண்டா என் பாட்டிற்கு என்ன குறை" என்றாள் ரோஷமாக 


"நீ பாட அது கேட்டு கழுதை வந்து கத்த, நாங்களெல்லாம் ஓட ...இதெல்லாம் தேவையா" ..என்றான் கிண்டலாக வினய்.


அது கேட்டு அனைவரும் சிரிக்க, வினோதனோ சூழ்நிலையை இயல்பாக்கும் பொருட்டு தானே முன் வந்து "இப்போது உங்கள் அனைவருக்கும் இன்ப அதிர்ச்சியை கொடுக்கும் பொருட்டு என்னுடைய மனைவி கீர்த்தனா வினோதன் தனது இனிமையான குரலால் பாடி நம் அனைவரையும் மகிழ்விப்பார்"என்றான். உடனே எல்லோரும் ஹோஹோஹோ என்று உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.


அவளோ முடியாதென்று மறுத்து ஓடி சென்று பாட்டியின் பின்புறம் ஒழிந்து கொண்டாள்.


அவனோ விடாது வந்து அவளைப் பற்றி இழுத்து ஆழ்ந்து நோக்கினான்" நான் ஆசைப்பட்டு கேட்கிறேன் பாடமாட்டாயா..??"


"எல்லோரும் இருக்காங்க வினோ அவர்கள் முன்பு எப்படி பாடுவது "என்றாள் மெதுவாக


"நான் இருக்கிறேன் அல்லவா என்னை பார்த்து பாடு " ..."என்னப் பாட ..??"


"என்னைப் பற்றி பாடு ,நம் காதலை பற்றி பாடு" என்றான்.அவனை பாத்து சிரித்தவள்


"ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்


வினோதனே வினோதனே

விண்மீன்கள் தூங்கும் நேரத்தில்

உன் தோளில் தூங்குவேன்


வினோதனே வினோதனே

உன் பேரைச் சொல்லும் வேளையில் 

உற்சாகம் கொள்ளுவேன்


குடையை மறந்த நேரத்தில்

கொட்டும் மழையைப் போலவே

மனதிலே காதலின் சாரல் அடிக்கிறதே


                                   (வினோதனோ) 


ஓவியப்பெண் நான் தூரிகையாலே

சூரியன் நீ என்னை சிறையெடுத்தாய்

மாபெரும் மலைகள் ஆயுதம் கூட

மல்லிகை பூக்கள் உடைத்திடுமே


உன்னை தினம் சுமப்பதால்

போதையில் பேதை சுற்றுகிறேன்

உன்னை மனம் நினைப்பதால்

மயக்கம் பிறக்கின்றதே...


                                      (வினோதனே)


விறகென இருந்தேன் இதழ்களில் செதுக்கி

புல்லாங்குழலாய் இசைக்கின்றாய்

அழகே நீதான் அதிசய விளக்கு

அணைக்கும் போது எரிகின்றாய்


காதலின் ஜன்னல் கண்களே

கண்களில் காய்ச்சல் கொடுக்கின்றாய்

சேலையை நான் வீசியே 

சிங்த்தைப் பிடித்துவிட்டேன்


                                    (வினோதனே)


அவள் பாடி முடித்ததும் அனைவரும் கைதட்டி அவளை வாழ்த்தினர். வினோதனின் தம்பி ,தங்கையோ கேலியிலே  கொஞ்சம் நேரம் அவளை ஓட்டி எடுத்தனர் .விஸ்வா" இன்று போல என்றும் வாழுங்கள்" என்று வாழ்த்தினான். பாட்டியோ நெட்டி முறித்தார். அத்தை மாமா அளவில்லா சந்தோஷம் அடைந்தனர்.குட்டி பாப்பா கை கொட்டி சிரித்தாள்.தோழிகளும் மனதார வாழ்த்தினார்கள்.


அவளோ அவனின் தோளோடு சேர்ந்து நெஞ்சுக் கூண்டுக்குள்ளே நுழைந்துக் கொண்டாள். 'இனி என்றென்றும் இதுவே எனது இதய வாசல்' என்பது போல.அவனோ' நாளும் உனை காப்பேன் 'என்பதாய் அன்பாக ,காதலாக அரவணைத்தான்.


அங்கே இன்பங்கள் என்றென்றும் நிலைத்திருக்க நாமும் வாழ்த்தி விடைபெறுவோம்.

பகட்டிற்கும் வசதிக்கும் ஆசைப்பட்டு உங்களின் வாழ்க்கையை அழித்துவிடாதீர்கள்.


காதலும் கற்றுமற ; கற்ற காதலை ஆயுள் வரை கைவிடாதே .


       வணக்கங்களுடன்

                 ஜோதி







  



Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...