எழுத்தாளர் : லதா சரவணன்
படைப்பு : உன் பேரை சொல்லும் போதே
வெளியீடு : கண்மணி (ஜனவரி- 1- 2011)
இந்த நாவலை நான் வாங்கிய பின்னர் பத்துக்கு மேற்பட்ட முறை வாசித்து விட்டாலும், திரும்ப திரும்ப வாசிக்கும் ஆவலை அடக்கத்தான் முடியவில்லை. ஏனென்றால் அந்த வகையில் கதையோட்டம், கதாநாயக, நாயகியின் பாத்திரம் அமைந்து காணப்படுகிறது.
இதை எழுதிய எழுத்தாளர் யார் என்பது தற்சமயம் தான் புரிபட்டது. வாட்சப்பில் கேட்டு தெளிந்ததும் மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதான் உடனே கதைப் பற்றிய என்னுடைய கருத்துக்களை தெரிவிக்க வந்து விட்டேன்.
சித்தார்த்தன்:
நடக்கவிருந்த திருமணம், திடீரென்று நின்று போவதால், பெண்களைக் கண்டாலே வெறுப்பவன் தன் கண் முன்னே வந்து நின்ற பெண்ணால் கோபப்படுவது, சிரிப்பது, வெறுப்பது, தன் வீட்டிற்கு வந்திருப்பவளிடம் முதலில் கடுமையை காட்டி பின் நட்புடன் பழகுவது, வார்த்தைகளால் வதைப்பது என பலவிதமான பரிணாமங்களை காட்டி நம்மை அப்படியே கதையோடு கட்டிப்போட்டு விடுகிறான்.
ஒரு கட்டத்தில் அவளை நேசிப்பவன், தன்னுடைய மனதில் இருப்பதை அவளிடம் பரிமாறாமல் இருக்கிறான். இந்நிலையில் யாரால் தன்னுடைய திருமணம் நின்று போனதாக எண்ணி மன வருத்தத்தில் மூழ்கி இருந்தானோ… அவளாலே மறுபடியும் பிரச்சனைக்கு உள்ளாக்கப் படுகிறான். அவனது காதலை நாயகியிடம் தெரிவிக்கிறானா? காதலர்களுக்கு இடையிலான ஊடல் சரி செய்யப்படுகிறதா? அவள் எதனால் அப்படி நடந்து கொள்கிறாள்? அண்ணனின் முகத்தில் மீண்டும் புன்னகையை மலரச் செய்ய தம்பி எடுக்கும் முடிவு என்ன? தம்பியை காதலியுடன் இணைத்து பேசும் நாயகன் உண்மை நிலையை அறிகிறானா? என பல விதமான கேள்விகளுடன் அட்டகாசமாக நாவலின் அத்தியாயங்கள் நகர்கின்றன.
ஆரம்பம் முதல் இறுதி வரையில் ரொம்ப ரொம்ப நன்றாக இருக்கிறது. நாயகி கோவில் சிலையிடம் பேசும் காட்சியும், திருமண வீட்டில் நாயகனிடம் துடுக்காக பேசி விட்டு, சென்னையில் அவன் தான் தன்னுடைய அங்கிளின் மகன் என்று தெரியாமலேயே அவனிடம் வாயடித்து விட்டு மாட்டும் இடம்😅😅😅🤣🤣
"உன்னைப் போய் நல்ல பெண் என்று போற்றி புகழ்கிறார் அப்பா" எனும் இடமும், அவளிடம் சீண்டி பேசி கஷ்டப்படுத்தியவன், அலுவலக ரீதியான விசயத்தில் அவளது கோபத்தில் கொதித்து, சாந்தமடையும் இடம்👌👌👌
தம்பி கதாபாத்திரம் செம… வர்ணி என்று உச்சரித்து அவளுடன் அடிக்கும் கலாட்டா பேச்சுக்கள், அண்ணன் மீதான அக்கறை, அவர்களது சோகம் கண்டு வருந்தும் இடம் எல்லாமே அருமை.
சந்தியா அன்பாக பழகுபவரிடமே வில்லி வேலை காட்டப் பார்க்கிறாள். கூட இருந்தே குழி பறிப்பவள், தன்னுடைய தவறை உணராமல் முட்டாள் போல பேசும் இடங்கள் கடுப்பாக இருந்தது.
நாயக நாயகியரின் பெற்றோர் இயல்பாக வந்து கதையுடன் ஒன்றி போகிறார்கள்.
நாவல் வாசிக்க சுவராஸ்யமாக இருக்கிறது. எந்த இடத்திலும் விறுவிறுப்பும் ரசனையும் குறையவில்லை. எழுத்து நடையும், கதைக்கருவும் வெகு சிறப்பு. மேலும் நிறைய எழுதவும், விருதுகள் பல வாங்கவும் என்னுடைய மனமார்ந்த நல்வாழ்த்துகள் சிஸ்டர்💐💐💐
சிறப்பு சிறப்பு! வாழ்த்துகள்!
ReplyDelete