இரணியல் அரண்மனை இரணியல் அரண்மனை (Eraniel Palace) என்பது தமிழ்நாட்டின் , கன்னியாகுமரி மாவட்டத்தின் , தக்கலையில் இருந்து ஆறு கிலோ மீட்டரில் உள்ள சேரர் கால அரண்மனையாகும். இது ஏறக்குறைய 1300 ஆண்டுகள் பழமையான அரண்மனையாக கருதப்படுகிறது. இந்த அரண்மனையானது தென்னிந்தியாவில் அரசியல் மற்றும் வர்த்தக முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முக்கிய இடமாக இருந்தது, ஏனென்றால் இரணியல் நகரம் பதினாறாம் நூற்றாண்டு வரை வேணாட்டின் பருவகால தலைநகரமாக இருந்தது. இந்த அரண்மனையில் கடைசியாக உதய மார்த்தாண்டவர்மா ஆட்சி செய்தார். அவரது காலத்துக்கு பிறகு தலைநகரானது பத்மநாபபுரத்துக்கு மாற்றப்பட்டது. முகப்பு வாயிலில் இருந்து இரணியல் அரண்மனையின் தோற்றம் கட்டடக்கலை இந்த அரண்மனையானது ஆறு ஏக்கர் பரப்பளவில் விரிந்துள்ளது. இது பண்டையச் சேரர் கட்டிடக் கலையின் எச்சமாகும். இருப்பினும், பல தசாப்தங்களாக புறக்கணிப்பட்டதன் காரணமாக இது பெரும்பாலும் பாழடைந்த நிலையில் உள்ளது. தற்போது, அரண்மனையின் மூன்று பகுதிகள் மட்டும் அடையாளம் காணக்கூடிய பகுதிகளாக உள்ளன: படிப்புரம் என்னும் முதன்மை அரண்மனைக்கு செல்லும் பெர...
ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ்
நிஜமும் கற்பனையும் கலந்த புனைவு