Skip to main content

கன்னியாகுமரி இணைப்பு போராட்டம்



கன்னியாகுமரி இணைப்பு போராட்டம்

இந்தக் கட்டுரையில் சான்றுகள் தரும் முறை தெளிவில்லாமல் உள்ளது. மேற்சான்றுகளை மேற்கோளிடப்படும் வரிகளின் அண்மையில் தெளிவாக தருதல் வேண்டும். பல பாணிகளில் மேற்சான்றுகளை எவ்வாறு தருவது என அறிய வரியிடைச் சான்று, அடிக்குறிப்பு, அல்லது வெளி இணைப்புகள் உதவிப் பக்கங்களைக் காணவும்.
‎திருவாங்கூர்-கொச்சி பகுதிக்கு உட்பட்டிருந்த தமிழர் பகுதிகளை தமிழகத்துடன் இணைப்பதற்காக நடைபெற்ற போராட்டமே குமரி இணைப்பு போராட்டம் ஆகும். இது தெற்கெல்லை போராட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. 1945 ஆம் ஆண்டு தொடங்கி 1956 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற இந்த போராட்டம் பல உயிர்பலிகளை சந்தித்த போராட்டமும் ஆகும்.

பொருளடக்கம்

ஆரம்ப வரலாறு:

தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு, நெய்யாற்றின்கரை, செங்கோட்டை, தேவிகுளம், பீர்மேடு ஆகிய தாலுகாக்களில் தமிழர்கள் பெருவாரியாக வசித்து வந்தனர். தமிழர் பகுதிகளில் மலையாளம் அலுவல் மொழியாக இருந்தமையும், தமிழ் பள்ளிகள் மிகக் குறைவாக இயங்கி வந்ததும் தமிழர்களுக்கு பல இன்னல்களை தோற்றுவித்து வந்தன. மொழி சம்பந்தமாக தமிழர்கள் விடுத்த கோரிக்கைகளை திருவாங்கூர் அரசு தொடர்ந்து புறக்கணித்து வந்தது1.

மலையாள மொழி பேசப்படும் பகுதிகளை ஒருங்கிணைத்து கேரள மாநிலம் அமைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைக்கு 'திருவாங்கூர் சமஸ்தான காங்கிரஸ்' கட்சி ஆதரவு அளித்து வந்ததால், அக்கோரிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ் தலைவர்கள் சிலர் அக்கட்சியை விட்டு வெளியேறினர். அவர்கள் 1945 ஆம் ஆண்டு டிசம்பர் 16 அன்று நாகர்கோவிலில் கூடி வழக்கறிஞர் சாம் நத்தானியேல் தலைமையில் 'அகில திருவாங்கூர் தமிழர் காங்கிரஸ்' எனும் அரசியல் இயக்கத்தை தொடங்கினர். திருவாங்கூரின் தமிழர் பகுதிகள் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை அவர்கள் வலியுறுத்தி வந்தனர்.2

திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ் (தி.க.நா.கா.):

1946 ஆம் ஆண்டு ஜுன் 30 தேதியன்று இரவிபுதூரில் கூடிய தமிழர் காங்கிரஸின் செயற்குழு கூட்டத்தில் கட்சியின் பெயரை 'திருவாங்கூர் தமிழ்நாடு காங்கிரஸ்' என பெயர்மாற்றம் செய்து கொண்டனர். தோவாளை, அகஸ்தீஸ்வரம் தாலுக்காக்களில் மட்டுமே தமிழர்கள் மத்தியில் தி.த.நா.கா. செல்வாக்கு பெற்றிருந்தது. தமிழ்நாட்டு தலைவர்களில் ம.பொ.சிவஞானம் தி.த.நா.க.விற்கு ஆதரவாக தீவிரமாக செயல்பட்டு வந்தார்.3

இந்திய விடுதலைக்குப் பிறகு திருவாங்கூரில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தி.த.நா.கா. தமிழர்கள் மத்தியில் அதிக செல்வாக்கு பெறத் தொடங்கியது. விளவங்கோட்டைச் சேர்ந்த பிரபல வழக்கறிஞர் ஏ. நேசமணி 1947 செப்டம்பர் 8-ஆம் தேதியன்று நாகர்கோவில் ஆலன் நினைவு அரங்கில் தமது ஆதரவாளர்களின் கூட்டத்தை கூட்டியிருந்தார். அக்கூட்டத்தில் தி.த.நா.கா. வில் இணைந்து செயல்படுவதென முடிவு செய்யப்பட்டதை தொடர்ந்து, கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் தி.த.நா.கா. மக்கள் செல்வாக்கினை பெறத் தொடங்கியது.4

1948 துப்பாக்கிச் சூடு:

தேர்தல் பிரச்சாரத்தின் போது கல்குளம்-விளவங்கோடு தாலுகாக்களில் வசிக்கும் பெரும்பான்மை தமிழ் சாதியினரான நாடார்களுக்கும், மலையாள ஆதிக்கச் சாதியினரான நாயர்களுக்குமிடையே மோதல்கள் நிகழ்ந்தன. மலையாள போலீசார் தமிழர்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்துவிட்டனர். 1948 பெப்ரவரி மாதம் போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இரண்டு தமிழர்கள் கொல்லப்பட்டனர்.5

அதே ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. தமிழர் பகுதிகளில் 14 தொகுதிகளை கைப்பற்றிச் சட்டமன்றத்தில் இரண்டாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது. தி.த.நா.கா.வின் சட்டமன்ற கட்சித் தலைவராக நேசமணி தேர்வு செய்யப்பட்டதைத் தொடர்ந்து அவரது தலைமையிலேயே இந்த எல்லைப் போராட்டமானது வழிநடத்திச் செல்லப்பட்டது.6

1952 பொது தேர்தல்:

1950 ஆம் ஆண்டு சமஸ்தான காங்கிரஸிற்கும், தி.த.நா.கா.விற்குமிடையே சமரசம் ஏற்படுத்தும் வண்ணம் பாளையங்கோட்டையில் மேற்கொள்ளப்பட்ட உடன்பாட்டு நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்ததால், தி.த.நா.கா. தலைவர் பதவியிலிருந்து சாம் நத்தானியல் விலகிக் கொண்டார். கட்சியின் புதிய தலைவராக நேசமணியின் ஆதரவாளர் பி. ராமசாமி பிள்ளை தேர்வு செய்யப்பட்டார்.7

1952 ஆம் ஆண்டு நாடு முழுவதும் நடைபெற்ற முதல் பொதுத் தேர்தலில் தி.த.நா.கா. எட்டு சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியது.

.1952 தேர்தலில்

மனுவேல் சைமன்

வில்லியம்

நூர் முகம்மது

பி. இராமசாமி பிள்ளை

பொன்னப்ப நாடார்

ஏ. கே. செல்லையா

சிதம்பரநாதன் நாடார்

தேவியப்பன் ஆகியோர் தமிழர் பிரநிதிகளாக வெற்றி பெற்றனர்

தி.த.நா.கா.வின் ஏ. சிதம்பரநாதன் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசில் மந்திரியாக பொறுப்பேற்றுக் கொண்டார். நாகர்கோவில் மக்களவை தொகுதியில் ஏ. நேசமணியும், மாநிலங்களவை தேர்தலில் எ. அப்துல் ரசாக்கும் வெற்றி பெற்று தி.த.நா.கா. உறுப்பினர்களாக பாராளுமன்றத்திற்கு சென்றனர்.8

தமிழர் பிரச்சனையில் காங்கிரஸ் அரசு போதிய அக்கறை காட்டவில்லை என்று குற்றம் சாட்டி கூட்டணியிலிருந்து தி.த.நா.கா. விலகிக் கொண்டதால் ஆட்சி கவிழ்ந்து தேர்தல் அறிவிக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் தி.த.நா.கா. 12 தொகுதிகளில் வெற்றி பெற்றது.9

பொன்னப்ப நாடார்,.பி. இராமசாமி பிள்ளை,தங்கையா குஞ்சன் நாடார்,அலெக்சாண்டர்,மனுவேல் சைமன்,டி.டி. இடானியல்,டி. ஆனந்தராமன்,வில்லியம்தாணுலிங்க நாடார்,சிதம்பரநாத நாடார்,நூர் முகம்மது,எஸ். எஸ். சர்மா ஆகியோர் 1954 தேர்தலில் வெற்றி பெற்றனர்

1954 துப்பாக்கிச்சூடு:

திரு-கொச்சி மாநில முதல்வராக பதவி வகித்த பட்டம் தாணுபிள்ளை தமிழர் போராட்டத்திற்கெதிராக கடுமையான நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தார். குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு பகுதி தமிழர்கள் மலையாள போலீசாரின் ஆராஜகங்களுக்கு ஆளாகி வந்தனர். போலீசாரின் அத்துமீறல்களை கண்டித்து நாகர்கோவில் பகுதி தி.த.நா.கா. தலைவர்கள் மூணாருக்குச் சென்று தடையை மீறி போராட்டம் நடத்தி கைதாயினர். இதனால் தென் திருவாங்கூர் பகுதிகளில் பதட்டமான சூழ்நிலை நிலவியது.10

அரசின் அடக்குமுறைகளை கண்டித்து ஆகஸ்ட் 11 ஆம் தியதியன்று தி.த.நா.கா. அறிவித்திருந்த 'விடுதலை நாள்' போராட்டத்தின் போது ஊர்வலங்களும், பொதுக்கூட்டங்களும் நடைபெற்றன. மார்த்தாண்டம் மற்றும் புதுக்கடை ஊர்களில் போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் ஒன்பது பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கான தி.த.நா.கா. தொண்டர்கள் சட்ட விரோதமாக கைது செய்யப்பட்டு போலீசாரால் சித்ரவதை செய்யப்பட்டனர். போலீசாருக்கு அஞ்சி தமிழர்கள் பலர் தமிழகப் பகுதிகளில் தலைமறைவாயினர். இறுதியில் பட்டம் தாணுபிள்ளையின் ஆட்சி கவிழ்க்கப்பட்ட பிறகே தமிழர் பகுதிகளில் அமைதி திரும்பியது.11

மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்படுதல்:

மொழிவாரி மாநிலங்கள் அமைப்பதற்காக மத்திய அரசால் நியமிக்கப்பட்ட பசல் அலி கமிஷன் 1955 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 10 ஆம் தியதியன்று தமது அறிக்கையை வெளியிட்டது. தேவிகுளம், பீர்மேடு, நெய்யாற்றின்கரை தாலுகாக்களை புதிதாக அமையவிருக்கும் கேரள மாநிலத்துடன் இணைக்க கமிஷன் பரிந்துரைத்தது.12

1956 ஆம் ஆண்டு நவம்பர் முதலாம் தியதி அன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது. தி.த.நா.கா. கோரிக்கை விடுத்த பகுதிகளில் பெரும்பாலான பகுதிகள் தமிழகத்துடன் இணைக்கப்பட்டதால் போராட்டம் கைவிடப்பட்டு தி.த.நா.கா. கலைக்கப்பட்டது.13


Comments

Popular posts from this blog

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

எழுத்தாளர் பாலகணேஷ்

எழுத்தாளர் பாலகணேஷ் பல சரக்கு கடை தொடர்கதை க்கான லிங் சரிதாயணம் 2 நூல் வெளியீட்டிற்கான லிங் கலையும் மெளனம் : எழுத்தாளர் பாலகணேஷ் அவர்கள் கொடுத்த பேட்டியின் லிங்: டிரங் பொட்டி   நகைச்சுவை எழுத்துகளுக்கு அங்கீகாரம் இல்லையா  எழுத்தாளரின் புத்தகங்களை பெறுமிடம்:  புஸ்தகா டாட் காம்-ல பாலகணேஷ்ன்னு சர்ச் போட்டா, என் புத்தகங்களை மின் புக்காகவும், அச்சுப் பதிப்பாகவும் பெறலாம். புஸ்தகா லிங் ************ நேர்காணல் : *************** பெயர் : பாலகணேஷ் ஊர் : மதுரை படிப்பு : பணி : எழுத வந்த வருடம் : இதுவரை எழுதியிருக்கும் நூல்களின் எண்ணிக்கை : நீங்கள் விரும்பி வாசிக்கும் நூல்கள் : **** நீங்கள் சிறுகதை தொகுப்பு, நாவல், வரலாறு, ஆன்மிகம் இதில் எதெல்லாம் எழுதி இருக்கறீங்க: நாவல், சிறுகதைத் தொகுப்பு, சினிமா, பழமை சார்ந்த விடயங்களின் தொகுப்பு - இவையெல்லாம் நான் தொட்டவை. *** இதுவரை விருது வாங்கிய அனுபவத்தை பற்றி கூற முடியுமா: CLRI - Cultural and literature research - award போன ஆண்டு பெற்றேன் - நகைச்சுவை எழுத்திக்காக. அது ஒரு சர்வதேச விருது! **** வரலாற்று நாவல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...