Skip to main content

என்னைப் பற்றிய விவரங்கள் :



நட்புகள் அனைவரையும் "ஆனந்த ஜோதி தமிழ் நாவல்ஸ்" அன்புடன் வரவேற்கிறது.


என் பெயர் K. ஆனந்த ஜோதி. கணவர் T. கிருஷ்ண குமார் (CISF காவலர்) மகன்கள் K.A. சூர்யா, K.A. கெளசிக்.

சொந்தவூர் நாகர்கோவில், ஆலன் கோட்டை புதூர்.

சிறு வயதில் இருந்தே வாசிப்பு, கருத்துப் பரிமாற்றம் அனைத்தும் மிகுதியாக காணப் பெற்றதாலோ என்னவோ, இத்தனை வருடங்களுக்குப் பிறகு அத்துறையில் காலடி பதிக்க இறைவன் கட்டைளை இட்டிருக்கிறார். ஆயிரக்கணக்கான எழுத்தாளர்களில் ஒருவராக நானும் இருப்பதில், பெருமகிழ்ச்சி அடைகிறேன்.

இறைவனுக்கு என்னுடைய மனமார்ந்த நன்றிகள். என்னையும் ஒரு எழுத்தாளராக ஏற்றுக் கொண்ட அனைவருக்கும் இதயம் கனிந்த நன்றிகள்🙏🙏🙏


அமேசான் லிங் :


அமேசான் லிங்










நாவல்கள் :

1. காத்திருந்தேன் கண்ணாளனே (7 - 9- 2020)

2.  காவலனே நீ காதலன் ஆனாய் (ல்) (3 -10- 2020)

(சங்கமம் KS 119 போட்டிக்கதை)

3. விழியால் உயிரில் கலந்து ( 9 -10 -2020)

4. உயிரிலே கலந்தவன் யாரவனோ (15 -9 -2020)

5. தேடி வந்த தேவதை ( -1-2021)

(SMS Role No - 16 போட்டிக் கதை)

6. மறவேனென்று நினைத்தாயோ...!!! (21 - 2 - 2021)

(நாவல் -> pent to publish 3)

7. காவ(த)ல் கொண்டேனடி கண்மணி (3- 3- 20 21)

8. கனவு கைசேரும் நாள் வருமோ! (23 - 5 - 2021)

(சகாப்தம் போட்டிக்கதை)

9. மின்னலே நீ வந்த வேளையில்! ( - 8 - 2021)

(அன்னாஸ்வீட்டி போட்டிக்கதை)

10. கண்ணில் மிதக்கும் கனவா நீ?? (23 -10 - 2021)

11. வினோதமானவனே (7 - 12 - 2021)

12. வெண்ணிலவுக்கு வானத்தைப் பிடிக்கலையா? (1 - 1- 2022)

13. விரல் மீட்டாத பொன்வீணை (1-4 - 2022)

(நாவல்)

14. உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் (PART - I) (15 - 8 - 2022)


குறுநாவல் :

1. உன்னில் என்னைத் தொலைத்தேனடி 

2. வருவேனே வாசல் தேடி (2 - 7 - 2020)

3. உயிர் இருக்கும் வரையில் உன்னோடு

4. என் தீராத தேடல் நீயடி

5. காதல் சதுரங்க ஆட்டம் (July -1- 2022)

( எழிலன்பு சிஸ்டர் தளம் - வாகைப்பூ போட்டிக்கதை)



சிறுகதை :

1. விழியால் உயிரில் கலந்து (9 - 5 -2020)

2. வினோதமானவனே (7-6-2020)

3. மௌனத்தால் என்னைக் கொல்லாதே

4. தேடி உன்னை சரணடைந்தேன்

5. இரவைத் தேடும் பனித்துளி 

6. நிறம் மாறாத பூக்கள்

7. நினைவாலே ... அணைப்பேனே!!

8. தன் கையே தனக்குதவி

9. சமூகமெனும் கூடாரம்

10. உனது விழியில் எனது பிம்பம்


Title Reserved

1. நின்னையே ரதியென்று நினைக்கிறேனடி

உன்னை வாழ்த்திப் பாடுகிறேன் PART- (II)

2. புரியாத புதிர்

3. பகடி ஆட்டம்

4. கள் வடியும் பூக்கள்

5. இரவைத் தேடும் பனித்துளி

6. ஆனந்தம் வந்ததடி ஆனந்தி

7. வேலியை தாண்டும் ....




Comments

Popular posts from this blog

யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்)

முகநூல் லிங் #ஜோதிரிவ்யூ எழுத்தாளர் : பாரதிப்பிரியன் படைப்பு : யாழினி (பனைப்பூ சூடிய பெண் சிம்மம்) இதுவொரு வரலாற்று நாவல். அதனால் ஆசையுடன் படிக்க துவங்கிவிட்டேன். ஒவ்வொரு காட்சிகளும், நகர்வுகளும், வாக்கிய உச்சரிப்புகளும், வருணனைகளும், கதாப்பாத்திரத்தின் பெயர்களும், போர் முறை, வியூகம், சதி வேலைகள் ஏமாற்று அப்பப்பா! இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் எழுத்தாளரின் திறமையை. இந்நாவல் வாசிப்பின் மூலம், நிறைய தகவல்கள், சாம்ராஜ்ஜியங்கள்,  மன்னரின் வாழ்க்கை, பேராசை பட்டு துயர் உறுபவர்களைப் பற்றியும் தெரிந்து கொண்டேன். அதற்கும், இக்கதையை எவ்வித பிசிறின்றி வடிவமைத்தமைக்கும் மனமார்ந்த பாராட்டுகள்👏👏👏 யாழினி : பல்லவ படை வீரன் கந்தமாறன் தலைமையில் நடைபெற்ற போரில், தோல்வியை தழுவிய களப்பிரார்கள் சேர தேசத்திற்குள் புகுந்து அங்கு பெரும் சேதத்தை உருவாக்கியதுடன், அரசர், ராணி, அவரது மூன்று வாரிசுகளை கொன்றுவிடுகிறார்கள். அத்துடன் அங்கேயே தங்கி அதிகாரத்தை நிலைநாட்டுகிறார்கள்.  சேரத்தை ஆள வேண்டும் என்ற ஆசையில் களப்பிரார்களின் அரசனின் மனதில் ஆசையை வளர்த்து, பல பெண்களின் வாழ்க்கையை அழித்து, த...

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு: குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன. அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது. இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது. கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது. தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல்...

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும் ஆசாத் : மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது. இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது: மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள்  *  அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு. *  பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதி...