Skip to main content

மதுபானம்


மதுபானம்:

பொதுவாக மது என அறியப்பட்ட எத்தனால் அடங்கிய குடிவகை மதுபானம் என அழைக்கப்படுகிறது. வேதியியல் வரைவிலக்கணத்தின் படி மது என்பதில் வேறு சேர்வைகளும் அடங்குகின்றன. மதுபானங்கள் பொதுவாக பியர் வகைகள், வைன் வகைகள், வடி பானங்கள் என மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றன.

சில மதுபான வகைகள்.

எத்தனால் உளத்தூண்டல் மருந்தாகும் (psychoactive drug) இது மூளைத்திறன் மயக்க மருந்தாக செயற்படுகிறது. கூடுதலான நாடுகள் மதுபான உற்பத்தி, விற்பனை, உட்கொள்ளல் தொடர்பான விதிமுறைகளை கையாண்டு வருகின்றன. மதுபானம் உலகின் கூடுதலான நாடுகளில் உற்பத்தி செய்யப்பட்டும் உட்கொள்ளப்பட்டும் வருகின்றது. மதுபானங்களை உட்கொள்ளல் சில கலாச்சாரங்களில் சமூக நிகழ்வுகளில் முக்கிய அம்சமாக காணப்படுகிறது.

குருதியில் காணப்படும் எத்தனால் அளவு ஒரு குறித்த அளவை விஞ்சினால் அவர் சட்டரீதியாக போதையுற்றவராக கருதப்படுவார். இவ்வாறு போதையுற்றவர்கள் வாகனம் செலுத்தல் போன்ற செயற்பாடுகளில் ஈடுபடுவது தடுக்கப்பட்டுள்ளது. மதுபானங்கள் பழக்க அடிமைத்தனத்தை (addiction) தூண்டும் தன்மை உடையன.

1994இல் உருவான உலக வர்த்தக அமைப்பு, மதுபானத்தை சுதந்திர வர்த்தகப் பொருளாக வகைப்படுத்துகிறது. சேவை என்ற அடிப்படையிலோ, மூலதனம் என்ற அடிப்படையிலோ உறுப்பு நாடுகள் எங்கு வேண்டுமானாலும் இந்த வர்த்தகத்தில் ஈடுபடலாம். காட்(GATT) ஒப்பந்தப் பிரிவுகள், வெளி நாட்டிலிருந்து இறக்குமதியாகும் மது பானங்களின் மீது இந்தியா வரி குறைப்பு செய்ய வலியுறுத்துகின்றன. ஒப்பந்தத்தின் பல பிரிவுகள். குடிப்பழக்கத்தைக் கட்டுப்படுத்த ஒரு சில மாநில அரசுகள் நினைத்தாலும் இவை குறுக்கே வரும் அபாயம் உண்டு. [1]

மதுபானம் அருந்துபவர்கள் வயது

1980களில் குடிப்பவர்களின் குறைந்தபட்ச வயது 26 ஆக இருந்தது. 2007ல் 17 ஆகக் குறைந்துவிட்டது. அசோசெம் என்கிற வர்த்தகக்கூட்டமைப்பின் சமூக வளர்ச்சிப் பிரிவு செய்த ஆய்வில், 19-26 வயதுக்குட்பட்ட இளைஞர்களின் மத்தியில் குடிப்பழக்கம், 60 சதவீதம் அதிகரித்துள்ளது தெரிய வருகிறது. குறிப்பாக, கடந்த 10 ஆண்டுகளில் டீன் ஏஜ் குடிப்பழக்கம் 100 சதவீதம் அதிகரித்திருப்பதாகவும் இந்த ஆய்வு தெரிவிக்கிறது.[1]

போரே கமிட்டி

1943இல் பொது ஆரோக்கியம் பற்றிய பரிந்துரைகள் அளிப்பதற்காக இந்தியாவில் அமைக்கப்பட்ட போரே கமிட்டி, 1946ல் தனது அறிக்கையை அளித்தது. பொது ஆரோக்கியத்தின் ஒரு பகுதியாக குடிப்பழக்கத்தின் விளைவுகளும் பார்க்கப்பட்டன. போரே கமிட்டி அறிக்கை வறுமையாலும், வேலையின்மையாலும், பொழுதுபோக்கு வசதி இன்மையாலும் விரக்திக்குத் தள்ளப்பட்டு குடிப்பவர்களும் உண்டு; சமூகப் பழக்கம் காரணமாகவும், கூட்டாகக் குடிக்கும் பழக்கத்தாலும் குடிப்பவர்கள் உண்டு. பொருளாதார மேம்பாடு, கல்வி, ஆரோக்கியமான பொழுதுபோக்கு போன்றவற்றில் அரசு முதலீடு செய்ய வேண் டும், மது விற்பனையைக் கட்டுப்படுத்த கடுமையான சட்டங்களைக் கொண்டு வர வேண்டும், குடிநோயாளிகளின் சிகிச்சைக்கும், மறு வாழ்வுக்கும் உதவ வேண்டும் என்றும் அறிவுறுத்துகிறது.குறிப்பாக வேலை நேரத்தில் விற்பனை செய்வது தடுக்கப்படவேண்டும் என்ற ஆலோசனையை முன் வைக்கிறது. பெங்களூரு நிம்ஹான்ஸ் மருத்துவமனையின் ஆய்வும் அதன்விரிவான பரிந்துரைகளும் இதே கண்ணோட்டத்தைத் தான் கடைப்பிடிக் கின்றன.

Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...