Skip to main content

மதுபோதையும் பிரச்சனையும் அறிகுறிகளும்

மது போதை: பிரச்சினையும் அறிகுறிகளும்


ஆசாத் :

மதுப்பழக்கம், உடலின் நலத்தைப் பாதித்து, குடும்பத்தின் நிம்மதியைக் களவாடி, வாழ்வின் இன்பத்தை இழக்கச் செய்கிறது. மதுப்பழக்கத்தால், குடிப்பவர் மட்டுமல்லாமல்; ஒட்டுமொத்தச் சமூகமும் பாதிப்புக்கு உள்ளாகிறது. இது தனிநபரின் பொருளாதாரத்தைப் பாதித்து நாட்டுப் பொருளாதாரத்தின் முதுகெலும்பையே முறிக்கிறது.

இன்பத்தைத் தேடி மதுவைப் பலர் நாடுகின்றனர். ஆனால், அதுவே பின்னாளில் தீவிரப் பிரச்சினையாக மாறும் என்பதை அவர்கள் ஆரம்பத்தில் உணர்வதில்லை. மது ஒரு அமைதியூட்டி, என்று நம்புவது அறியாமை. அது அடிமைப்படுத்தும் தன்மையுடையது மதுப்பழக்கத்தால் மனநோய் சார்ந்த பிரச்சினைகள் ஏற்படும் சாத்தியம் அதிகம் உண்டு. மதுப்பழக்கத்தின் தீங்குகள் குறித்தும் அதிலிருந்து மீளும் வழிமுறைகள் குறித்தும் ஸ்டான்லி அரசு மருத்துவமனையின் மனநலத் துறையினர் சார்பில் வெளியிட்டுள்ள தொகுப்பு இது:

மதுவால் உண்டாகும் உடல் நலக்கோளாறுகள் 

அளவுக்கு அதிகமாக மது அருந்துவதால் வயிற்றுவலி, ரத்தவாந்தி, மயக்கநிலை போன்றவை ஏற்படலாம். மரணமும் ஏற்படச் சாத்தியம் உண்டு.

* பல ஆண்டுகளாகத் தொடர்ந்து அதிக அளவில் மது அருந்துபவர்களுக்குக் கல்லீரல் பாதிப்பும் இதயநோயும் ஏற்படும்.

மதுவால் உண்டாகும் மனநலக் கோளாறுகள்

* மதுவுக்கு அடிமையானவர்கள் சிந்திக்கும் திறனை இழப்பார்கள்.
* மனச்சோர்வு, ஞாபகமறதி, தற்கொலை எண்ணங்கள் உண்டாகும்.
* மூளைச் சிதைவு ஏற்படும்.

மதுவால் உண்டாகும் பிரச்சினைகள்

மதுபோதையால் உங்கள் மூளை சிந்திக்கும் திறனை இழந்துவிடும். மது அருந்திவிட்டு வாகனங்களை இயக்குவதால் நேரும் சாலை விபத்து இதற்குச் சான்று.
சிந்திக்கும் திறனை இழப்பதால், ஆபத்தான சூழ்நிலைகளை எதிர்கொள்ள முடியாது.
* பெரும்பாலான நேரத்தில் தேவையற்ற சிந்தனைகளால் தூண்டப்பட்டு, வாதங்கள், சண்டையில் ஈடுபடுவீர்கள்.
மதுவுக்கு அடிமையானவர்கள் வேலைக்குச் செல்லாமல் மதுபானத்தைப் பற்றியே சிந்திக்கத் தோன்றும். இதனால் பணப்பிரச்சினைகள், உறவு முறிவு, தொழிலில் * பிரச்சினைகள், பாலியல் வன்கொடுமைகளில் ஈடுபடுதல் போன்றவை நிகழக்கூடும்.

எச்சரிக்கை அறிகுறிகள்:

குடிப் பழக்கத்தை மறந்து இயல்பாக இருக்க முடியாத நிலை
* மது அருந்திய சில மணி நேரத்தில் வியர்வை, நடுக்கம், மனப்பதற்றம் உள்ளிட்டவை ஏற்படுதல்
* போதை நிலை அடைய அதிக அளவு மது அருந்துவது.
குடிப் பழக்கத்தை நிறுத்துவது என்பது முடியாமல் போவது.
* வேலை, குடும்ப நிலை, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்கள் பற்றிய எண்ணங்கள் இன்றி மது அருந்துவது.
வேலை நேரத்திலும் குடிப்பது.
* அதிகாலையிலோ எழுந்தவுடனோ மது அருந்துவது.
* ஞாபக மறதியால் மதுபோதையில் என்ன நடந்தது என்று நினைவில் இருக்காது.

குடிப் பழக்கத்தை மாற்றும் வழிகள்

மது அருந்துவதால் பிரச்சினை உள்ளது என்பதை உணர்வதும், ஏற்றுக்கொள்வதும்.
குடிப்பழக்கத்தை மாற்ற உதவி பெறுதல்.
* ஒருமுறை மாற்றங்கள் செய்யத் தொடங்கிய பின் அவற்றைத் தொடர்ந்து செய்ய வேண்டும்.
மனநல மருத்துவரையோ உளவியல் நிபுணரையோ ஆலோசித்து மதுப் பழக்கத்தைக் கைவிடும் முயற்சிகளை மேற்கொள்ளலாம்.
சுய உதவிக் குழுக்கள் ‘ஆல்கஹாலிக் அனானிமஸ்’ என்ற நிகழ்ச்சியின் மூலம் ஆலோசனை வழங்குகிறார்கள்.
மதுப் பழக்கத்தால் ஏற்படும் விளைவுகளைக் கையாள மருத்துவர்கள் வழங்கும் மருந்துகள் உதவியாக இருக்கும்.

Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...