Skip to main content

கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு


கன்னியாகுமரி மாவட்டம் பற்றிய வரலாறு:

குமரி மாவட்டத்தின் மனித நாகரிகமானது சுமார் 4000 ஆண்டுகள் பழமை வாய்ந்தது. உத்தேசமாக கி.மு.1500 முதல் 1000 – மாவது ஆண்டுகளுக்கு இடையிலான கற்கால கோடரி கருவியின் கண்டுபிடிப்பிலிருந்து குமரி மாவட்டத்தின் வரலாற்றுக்கு முந்தைய கலாச்சாரம் தெளிவாகிறது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள தூத்தூா் கிராமத்தின் அருகே கையால் செய்யப்பட்ட சொரசொரப்பான மண்ஜாடிகள் மற்றும் பழம்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அதனுடைய வடிவம், ஆடை, அலங்காரங்கள் பெரும்பாலும் கற்காலம் அல்லது வரலாற்றுக்கு முந்தைய காலத்தினை பிரதிபலிக்கிறது.

இப்பகுதியில் கிடைக்கப்பெற்ற புராணங்கள் மற்றும் கலாச்சாரப் பதிவுகளிலிருந்து மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா நாகரிகத்திற்கு இணையான ஒரு பெரிய நகரம் கற்காலத்தில் தழைத்தோங்கியது என்று சந்தேகத்திற்கு இடமின்றி நம்பப்படுகிறது.

கடலடியில் கண்டெடுக்கப்பட்டுள்ள பழம்பொருட்கள் மூலமாக இந்த நாகரிகமானது கடல் அரிப்பின் மூலமாக முற்றிலுமாக அழிந்துள்ளது என நம்பப்படுகிறது.

தற்போதைய கன்னியாகுமரி மாவட்டத்தைப் பற்றிய தகவல்கள் முதன் முதலில் பொனிஷியா்களால் குறிப்பிடப்பட்டுள்ளது. கி.பி. 276-ல் இந்தியாவில் விஜயம் செய்த எநாஸ்தனிஸ் என்பவரின் குறிப்பேட்டிலும் கன்னியாகுமரி பற்றிய பதிவு உள்ளது. இக்குறிப்பேட்டில் “கொமரி” என்பது துறைமுகமாகவும் அதுவரையிலும் உள்ள நிலப்பகுதி பாண்டிய நாட்டின் பகுதியாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டத்தின் சுருக்கமான காலவரிசை
கி.பி.முதலாம் நூற்றாண்டு
டாலமி காலகட்டத்தில் நாஞ்சில் நாடானது சேரா்களுக்கும் பாண்டியா்களுக்கும் இடையே ஒரு தாங்கலாக இருந்தது.

கி.பி.இரண்டாம் நூற்றாண்டு
சங்ககாலப் புலவா்களான மருதன் இளங்கனார், ஔவையார், ஒருச்சிறைப்பெரியனார் கருவூர் கடைப்பிள்ளை போன்றோர்கள் நாஞ்சில் பொருநரைப் போற்றிப் பாடிய பாடல்கள் மூலமாக இவா் நாஞ்சில் நாட்டின் ஒரு பகுதியை ஆட்சி செய்தார் எனத் தெரிய வருகின்றது.

கி.மு.மூன்றாம் நூற்றாண்டு
கடுங்கோன் – கி.பி. 560 – 590.
மாறவறம் அவனி சூலாமணி – கி.பி. 590 – 620.
சென்டன் – கி.பி. 620 – 650.
அரிகேசரி பரங்குச மாறவா்மன் – கி.பி. 650 – 700.
கோச்சடையன் – கி.பி. 700 – 730.
மாறவா்ம ராஜசிம்கா – கி.பி. 730 – 765.
ஜாக்கியா பரந்தாக நெடுஞ்சடையல் – கி.பி. 765 – 815.
ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபா – கி.பி. 815 – 862.
இரண்டாம் வரகுணா – கி.பி. 862 – 885.
பரந்தாட்ச வீர நாராயணன் – கி.பி. 880 -905.
இரண்டாம் மாறவா்ம இராமசிம்கா – கி.பி. 905 – 920.
கி.பி.பத்தாம் நூற்றாண்டு
சோழ வம்சத்தின் வளா்ச்சி :

உத்தம சோழ வளநாடு என நாஞ்சில் நாடு குறிப்பிடப்பட்டுள்ளது. (1019 முதல் 1070) நாஞ்சில் நாடானது சோழ பாண்டிய வைஸ்ராய்களால் ஆட்சி செய்யப்பட்டது.

கி.பி. பதினொன்றாம் நூற்றாண்டு
பாண்டியன் ஆட்சி காலம் :

வே நாடு அரசா்கள் ஆட்சிகாலம் 15 – ஆம் நூற்றாண்டு வரை

கி.பி. பன்னிரெண்டாம் நூற்றாண்டு
கி.பி. 1532 முதல் 1558 வரை விஜய நகர பேரரசின் கீழ் ஆட்சி நடைபெற்றது.

கி.பி.பதினாறாம் நூற்றாண்டு
மதுரை நாயக்கா் ஆட்சி
கன்னியாகுமரி மாவட்டத்தின் தற்கால வரலாறு பாலமார்த்தாண்டம் வா்ம ஆட்சியில் (கி.பி. 1729 – 1758) தொடங்குகிறது.

பாலமார்த்தாண்ட வர்மாவின் பிற்கால மன்னா்கள்
இராமவா்ம கார்த்திகைத் திருநாள் – 1758 – 1798
பால ராமவா்ம – 1798 – 1810
ராணி கௌரிலட்சுமிபாய் – 1811 – 1815
ராணி கௌரிபார்வதிபாய் – 1815 – 18295.
ராமவர்ம சுவாதி திருநாள் – 1829 – 1847
கி.பி.பதினேழாம் நூற்றாண்டு
மார்த்தாண்ட வர்ம உத்ராடம் திருநாள் 1847 – 1860
ராமவா்ம ஆயிலியம் திருநாள் 1860 -1880
ராமவா்ம விசாகம் திருநாள் 1880 – 1885
ஸ்ரீ மூலம் திருநாள் 1885 – 1924
ராணி சேதுலட்சுமிபாய் 1924 -1932
ராமவா்ம ஸ்ரீ சித்திர திருநாள் 1932 – முதல் மன்னா் ஆட்சி முடியும் 1949 செப்டம்பா் 1 வரை.
மேற்குறிப்பிட்ட அனைத்து மன்னா்களும் ஆங்கிலேயா்களுடன் நல்லுறவு மேம்படுத்துவதே தங்களது அயல்நாட்டுக் கொள்கையின் முக்கிய கொள்கையாகக் கொண்டிருந்தனா்.

கன்னியாகுமரி மாவட்டம் 1956 – வரை திருவாங்கூா் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாக இருந்தது. கன்னியாகுமரி மாவட்டத்தை பொறுத்தமட்டில் 1945 முதல் 1956 வரையிலான காலகட்டம் அதன் தற்காலிக வரலாற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றது.

1945
திருவாங்கூா் மாகாணத்தில் உள்ள அனைத்து மாநிலங்களையும் ஒன்றிணைத்து ஒருங்கினைந்த கேரள மாநிலம் உருவாக்குவதற்காக ஒரு தீா்மானம் திருவாங்கூா் மாநில காங்கிரசால் நிறைவேற்றப்பட்டது. திருவாங்கூா் மாகாணத்தின் ஆட்சி மொழிகளில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்ட தமிழ்மொழி அதன் அங்கீகாரத்தை இழந்து மலையாளம் மட்டுமே மாநிலத்தின் ஆட்சி மொழியானது. இதனை தமிழா்கள் ஒரு அவமானமாகக் கருதினா்.

1946
 1946 ஜீன் 30 இல் அனைத்து திருவாங்கூா் தமிழ் காங்கிரஸ் உருவானது. கன்னியாகுமரி மாவட்டத்தை தமிழ்நாட்டுடன் இணைப்பதற்கான இயக்கத்தை மார்சல் நேசமணி அவா்கள் வெற்றிகரமாக முன்னெடுத்து சென்றார்.>

1947
திருவாங்கூா் மாநிலம் இந்திய யூனியனின் ஒரு பகுதியானது.
1948
திருவாங்கூா் தமிழ்நாடு காங்கிரஸ் குமரி மாவட்டத்தை முந்தைய மெட்ராஸ் மாகாணத்துடன் இணைப்பதற்கான அழுத்தம் கொடுத்ததின் பேரில் அப்போதைய இந்திய யூனியனின் துணைப் பிரதமரான சா்தார் வல்லபாய் படேல் அவா்கள் இக்கோரிக்கையை ஏற்று மொழி அடிப்படையில் மாநில மறு சீரமைப்பின் போது இதை நடைமுறைப்படுத்துவதாக உறுதி அளித்தார்.

1949 
திருவாங்கூா் மற்றும் கொச்சின் மாகாணத்தை இணைக்கும் முயற்சிக்கு எதிராக மிகக் கடுமையான போராட்டம் நடந்த போதிலும் 1949 ஜீன் முதல் நாளன்று இரண்டு மாநிலங்களும் இணைக்கப்பட்டன.

1951 பொதுத்தோ்தல் 
    1952 – இல் சட்டசபையில் மாநில காங்கிரஸ்சுக்கு அளித்து வந்த ஆதரவை திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் விலக்கிக் கொண்டதால் அமைச்சரவை கவிழ்ந்தது.

1954 புதிய தோ்தல் 
தமிழ் பேசும் பகுதிகளில் உள்ள 12 தொகுதிகளிலும் திருவாங்கூா் தமிழ் மாநில காங்கிரஸ் வெற்றி பெற்று அதன் பலத்தை உயா்த்திக் கொண்டது. காலப்போக்கில் திருவாங்கூா் மாநில காங்கிரஸ் இரண்டாகப் பிரிந்து ஏ.நேசமணி அவா்கள் தலைமையில் ஒரு பிரிவும் திரு.பி. தாணிலிங்க நாடார் அவா்கள் தலைமையில் ஒரு பிரிவுமாக செயல்பட்டனா். மீண்டும் 1954 – இல் மார்ச் 29 –இல் இரு அணிகளும் இணைந்து பி.ராமசாமிபிள்ளை அவா்கள் கட்சியின் தலைவரானார். அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள் , போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலமைக்கு தள்ளப்பட்டதின் காரணமாக அமைச்சரவை கவிழ்ந்தது. திருவாங்கூா் கொச்சின் மாநிலத்தின் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1955 முதல் ஏ.நேசமணி அவா்கள் திருவாங்கூா் தமிழ் காங்கிரசின் தலைவரானார்.

1956 மாநில சீரமைப்புகக் குழு உருவாக்கப்பட்டது.
திருவாங்கூா் மாநிலத்தின் தெற்கு தாலுகாக்களான தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம், விளவங்கோடு மற்றும் செங்கோட்டை மெட்ராஸ் மாநிலத்திற்கு மாற்ற இந்தக் குழு முடிவு செய்தது.

1956 – நவம்பா் முதல் நாளன்று தோவாளை, அகஸ்தீஸ்வரம், கல்குளம் மற்றும் விளவங்கோடு ஆகிய நான்கு தாலுகாக்கள் ஒன்றிணைக்கப்பட்டு நாகா்கோவிலை தலைமை இடமாக கொண்டு தமிழ்நாட்டில் கன்னியாகுமரி என்ற புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டது.

1966 – 1976
 புதிய வருவாய் கணக்கெடுப்பு தொடங்கப்பட்டது. தீா்வைத்துறை உருவாக்கப்பட்டது.

1976 – கிராமங்களை பிரித்தல்.

2012 – கிராமங்களை பிரித்தல்.


Comments

Popular posts from this blog

சங்ககால தமிழர் உணவு முறை :

சங்ககால தமிழர் உணவு மரபுகள்: உணவு என்பது மனித குலத்தின் அடிப்படை தேவைகளுள் ஒன்று என்பதைக் கடந்து, ஒரு சமூகத்தின் கலாச்சார, பொருளாதார, அரசியல், வாழ்வியல் மற்றும் புவியியல் அம்சங்களை பறைசாற்றும் ஒரு ஊடகமாக செய்யலாற்றுகிறது. அவ்வகையில் தமிழினத்தின் நெடிய வரலாற்றில் உணவு என்பது பல்வேறு மாற்றங்களுக்குள் உள்ளாகியிருக்கிறது. கல்வெட்டுக்கள், படிமங்கள், இடிபாடுகள் என்பனவே அதிகம் ஏற்றுக்கொள்ளப்படும் வரலாற்று ஆதாரங்களாக இருக்கும் போதிலும் ஒரு மக்கள் குழுவின் வாழ்வியல் அம்சங்களை நுணுகி அறிவதற்கு கலை, இலக்கிய மூலங்களே அதிகம் பயன்படுகின்றன. அந்த வகையில் தமிழ் வரலாற்றில் மிகப்பழைமையான இலக்கிய ஆதாரங்கள் நிரம்பியுள்ள சங்ககால மக்களின் உணவுப்பழக்கங்கள் அக்கால மக்களின் வாழ்வியலை புரிந்துகொள்ள இன்றியமையாதவையாக அமைகின்றன. இற்றைக்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தமிழ் சமூகத்தின் அரசியல், பொருளாதார, பண்பாட்டுக் கூறுகள் எவ்வாறு உணவினோவடாக பிரதிபழித்தன என்பதை இங்கு காண்போம்.  இன்று மட்டுமல்ல அன்றும் நெல்லரிசியே தமிழகத்தின் பிரதான உணவாக அமைந்தது, செந்நெல், வெண்ணெல், புதுநெல் என அரிசி பலவாறு வகைப்பட...

கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி மாவட்டம் (Kanyakumari district, மலையாளம்: കന്യാകുമാരി ജില്ല) தமிழ்நாட்டின் 38 மாவட்டங்களில் ஒன்றாகும். இந்தியாவின் தென்கோடியில் அமைந்துள்ள இம்மாவட்டத்தின் தலைநகரம் நாகர்கோவில் ஆகும். இந்த மாவட்டம் 1,672 ச.கி.மீ பரப்பளவைக் கொண்டுள்ளது. இம்மாவட்டத்தில் தமிழ் மற்றும் மலையாள மொழிகள் பேசப்படுகின்றன. மக்கள் தொகை அடர்த்தியில் தமிழகத்தில் இரண்டாம் இடம் (ச.கிமீக்கு 1111-பேர்) வகிக்கிறது. பத்மநாபபுரம், குளச்சல், குழித்துறை , கொல்லங்கோடு என 4 நகராட்சிகள் உள்ளன. நாகர்கோவில் மாநகராட்சி ஆகும். தமிழின் ஐந்திணைகளில் நான்கு திணைகள் (முல்லை, குறிஞ்சி, மருதம், நெய்தல்) ஒருங்கமைந்த மாவட்டம். இயற்கை அழகுக்குப்பெயர் போன இம்மாவட்டத்தில் ஒன்பதாம் நூற்றாண்டுக்கும், முந்தைய பல வரலாற்றுச் சின்னங்களும் அமைந்திருப்பதால் சுற்றுலாப் பயணிகளுக்கு சுவர்க்கமாக திகழ்கிறது. இம்மாவட்டத்தின் மேற்கில் கேரள மாநிலத்தின் திருவனந்தபுரம் மாவட்டமும், வடக்கு மற்றும் கிழக்கிலும் திருநெல்வேலி மாவட்டமும், தெற்கில் இந்தியப் பெருங்கடலும் எல்லைகளாக உள்ளன. 2004 திசம்பர் 26 அன்று தென் ஆசியாவையும், தென்கிழக்கு ஆசிய நாடுகளின் கட...

மதுபானம் உட்கொள்ளும் அளவு

மதுபானத்தை எந்த அளவு உட்கொள்ள வேண்டும்? 10 ஜனவரி 2016 மதுபானம் அருந்துவது தொடர்பிலான புதிய வழிகாட்டு நெறிமுறைகளை பிரிட்டன் வெளியிட்டுள்ளது. பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, மது அருந்துவதை குறைத்துக் கொள்ள வேண்டும் என பிரிட்டிஷ் மருத்துவர்கள் அறிவுரை அளவுக்கு அதிகமாக குடிப்பதால் உடல் நலத்துக்கு ஏற்படும் தீங்குகளை குறைக்கும் நோக்கில், இந்தப் புதிய வழிகாட்டு நெறிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. எந்த அளவுக்கு மதுபானத்தை அருந்துவது, பெரிய அளவில் ஆபத்துக்களை ஏற்படுத்தாது என்பது குறித்து அந்த வழிகாட்டல் கையேடு கூறுகிறது. மட்டுப்படுத்தப்பட்ட அளவுக்கு மதுபானத்தை அருந்துவது சிறந்தது என பிரிட்டிஷ் மருத்துவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பட மூலாதாரம், THINKSTOCK படக்குறிப்பு, அதிக அளவுக்கு மது குடித்தால், அடுத்த நாள் பணிக்கு செல்லும்போது அதன் தாக்கம் தெரியும் எனவும் எச்சரிக்கை அதிகளவில் மதுபானத்தை அருந்துவதனால், புற்றுநோய்க்குள்ளாகும் வாய்ப்பு அதிகம் இருப்பதாக புதிய ஆய்வொன்று கண்டறிந்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவித்துள்ளனர். மதுபானத்தை தொடர்ச்சியாக அருந்துபவர்கள், வாரத்திற்கு 14 யூனிட்களுக்கு அதிக...